அன்று ஏதோ பணி காரணமாக வேறொரு புதிய களத்திற்கு (அப்போது)செல்ல நேர்ந்தது!!
புதிய களம்.. நான் உள்ளே நுழைந்து யாரைப் பார்ப்பது என்று அறியாமல் மிரள மிரள விழித்து கொண்டு இருந்தேன்..
என்னை நோக்கி ஒருவர் வந்தார்..
"தம்பி.. இங்க எல்லாம் அனுமதி (Permission) இல்லாம வர கூடாது! நீங்க யார்?" என்று கேட்டார்..
நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.. நான் வந்த நோக்கத்தையும் கூறினேன்.
அவர் "அப்படியா!! சார் மேனேஜரைப் பார்க்க போய் இருக்கார். கொஞ்ச நேரத்தில வந்து விடுவார்" என்றார்..
சிறிது நேர மெளனத்திற்குப் பின், அவர் என்னைப் பார்த்து
"உங்களுக்கு எந்த ஊரு?" என்று கேட்டார்...
நான் புதியவன் என்பதால், பலரும் என்னைப் பற்றி விசாரிப்பது வழக்கம்..
நான் "திருச்சி" என்று பதிலளித்தேன்.

அவர் உடனே கேட்டார்: "அப்படியா!!! திருச்சியில் எங்கே?"
"வயலூர் பக்கம்"
"அடடே!! அங்க எங்கே?"
எனக்கு உடனே ஆர்வம் தொற்றிக் கொண்டது... ! பார்க்க திருச்சிக்காரர் போல் தெரியாவிட்டாலும், கண்டிப்பாக இவர் அந்த பக்கம் வசித்து இருக்க வேண்டும்
"உய்யகொண்டான் பக்கம்" என்றேன்..
"அப்படியா!! அங்க எங்கே சார்?"
"பாலத்துக்கு முன்னாடியே சார்"..
உரையாடல் தொடர்ந்தது.. அவர் கேட்க கேட்க நான் என் வீடு இருக்கும் தெரு வரை சொல்லிவிட்டேன்..
இறுதியாக "ஓஹோ" என்றார்..
நான் ஆர்வ மிகுதியில் " சார் , நீங்களும் அந்த பக்கம் இருந்தீங்களோ?" என்றேன்..
அவர் கூறிய பதில் என்னைத் திகைக்க வைத்தது:
"நான் சென்னைக்கு பஸ்ஸில போகும் போது ஒரு முறை திருச்சியில இறங்கி காப்பி குடிச்சிருக்கேன் சார்" என்றார்...

எனக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை!!!
நல்லவேளை அவர் திருச்சியில் இறங்கி காப்பியாவது குடிச்சிருக்கிறார், நீங்க கொஞ்சம் ஆறுதல் படலாம். அதுவும் இல்லைன்னா உங்க வீட்டு அட்ரஸ் வரை சொன்ன உங்க நிலைமை... ஒருவேளை நீங்க திருச்சிராப்பள்ளின்னு சொல்லியிருந்தா அது திருச்சியிலிருந்து எவ்வளவு தூரமுன்னு கேட்டிருப்பாரோ? நல்லா கேட்கிறாங்க டீடெய்லு..
பதிலளிநீக்கு@கௌதமன்
பதிலளிநீக்குஇருக்கலாம்!
வீடு எங்கேனு சொல்லவே இல்ல
பதிலளிநீக்குஅதை நீங்க கேட்கவே இல்லை!!
பதிலளிநீக்கு