முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது. 


ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.
WAP 4

   சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.
 WAU
 சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்?


"ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி. அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன். 


ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா? 


ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?
  WDP 3A
 முதல் எழுத்து:
முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்


W - அகன்ற இருப்பு பாதை  (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y  - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர் )
Z -  குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N -  குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)
WDM 2
இரண்டாம் எழுத்து:
இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.


D    - டீசல் இஞ்சின்
A    - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction) 
C    -  மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction) 
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும்  (AC & DC traction) 
B   - பேட்டரி சக்தி


இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின். 
YG
 மூன்றாம் எழுத்து:
மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)


G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்


சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)
 WAP 1
 மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா?  அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2  ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!
WDG 3A
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).


எடுத்துக்காட்டாக, WDM 3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும்.

 அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.
WAG 5
            சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்!! அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள். உதாரணத்திற்குக் கீழே உள்ள படத்தில் உள்ளதை வாசித்துப் பாருங்கள் !!
 WAP 4


என்ன இனி உங்கள் முன் ஒரு ரயில் இஞ்சின் போனால், அது எந்த வகை என்று எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள் தானே?


WAG 1




பதிவில் உள்ள படங்களின் மேல் சுட்டியைக் (Mouse) கொண்டு செல்லுங்கள்!! அவை எந்த வகை இஞ்சின் என்று அறிந்து கொள்ளலாம்.


நன்றி:   இந்திய ரயில்வே ரசிகர் குழு (Indian Railways Fan Club) , விக்கிபீடியா



படங்கள் கூகிள் தேடலின் மூலம் பெறப்பட்டவை.
இந்த பதிவினை எழுத தூண்டுகோலாக இருந்த ரவிசந்திரன் (ட்விட்டர்: @2nrc) அவர்களுக்கு என் நன்றி!

கருத்துகள்

  1. இரயில் பற்றிய சுவையானத் தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஆளுங்க. இந்திய இரயிலில் பயணிக்கும் அனுபவம் நேரும்போது இவற்றை நினைவுபடுத்திக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  2. புது செய்தியா இருக்கே...நல்லாவே இருக்கு..

    பதிலளிநீக்கு
  3. இரயில் வண்டியை பற்றிய தகவல்கள்....உங்கள் தேடல் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  4. இரயில் என் வாழ்வில் மறக்க முடியாத நண்பர்களில் ஒருவன். அந்த நினைவுகளை நியாபகப்படுத்தி விட்டீர்கள்.. அருமை..

    நட்புடன்
    கவிதை காதலன்

    பதிலளிநீக்கு
  5. தங்களின் இப்பதிவு மனதைக் கவர்கிறது.
    மகிழ்ச்சி.
    ‘பதிவர்களுக்குப் பத்து பரிந்துரைகள்’ என்னும் என் பதிவைப் பாராட்டிய தங்கள் நல்லுள்ளத்துக்கு என் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  6. புதிய தகவல்களை அறிந்துக் கொண்டேன். நன்றி நண்பா!

    பதிலளிநீக்கு
  7. பதிவினைப் படித்து கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி!

    பதிலளிநீக்கு
  8. Now I knew few things about train..Thanks for sharing this..

    பதிலளிநீக்கு
  9. மிகவும் புதிய தகவலாக உள்ளது சகோ. சூப்பர் பதிவு.

    பதிலளிநீக்கு
  10. பல புதிய தகவல்கள் நன்றி நண்பா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும...

செவ்வாய் கிரகத்தில் கியூரியோசிட்டி தரையுளவி [Curiosity Rover]

  நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியோசிட்டி  தரையுளவி (Curiosity  Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது. 06 ஆகஸ்ட் 2012 அன்று கேல் எரிமலைப்பள்ளத்தாக்கில்(Gale Crater) இறங்கியது. அதன் சிறப்பம்சம் என்ன? எப்படி செவ்வாயின் பரப்பை அடைந்தது? அதன் திட்டக் நோக்கம் என்ன? என்ன விதமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது? செவ்வாயில் உயிர்கள் இருப்பைப் பற்றி எதுவும் கண்டறியுமா? சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர்  நாசா விஞ்ஞானிகள். நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய Curiosity என்கிற தரையுளவி (Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததாம். புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம். அந்த படங்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து புதிது புதிதாக அப்லோட் செய்கிறதாம்.. அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்து தனது ஸ்டேடஸை அப்டேட் செய்கிறதாம் (பேஸ்புக்கில் அல்ல!) !!    ...