முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பயணச்சீட்டால் பயங்கர பல்பு வாங்கிய பிரபல பதிவர்

இது ஒரு உண்மைச் சம்பவம்.. மின்னணு ரயில் பயணச்சீட்டைப் பயன்படுத்த நினைத்து ஏமாந்த பதிவரின் கதை!! 22 ஜனவரி 2012                       அலுவல் நிமித்தமாக பல நாட்கள் வெளியூரில் தங்க வேண்டிய சூழல். ஒரு வழியாய் வேலை முடிந்து திரும்ப தயாரானேன். "ரயில் டிக்கெட் பிரிண்ட் எடுத்தாச்சா?" என்று ஒரு சகா கேட்டார். "நீங்க எந்த காலத்தில் சார் இருக்கீங்க? இப்ப ரயில்ல போக டிக்கெட் எல்லாம் தேவை இல்லை. உங்க அலைபேசியிலோ, இல்லை மடிக்கணிணியிலோ டிக்கெட் ஸாப்ட் காப்பியைக் காட்டினால் போதும்" என்றேன். "இருந்தாலும்.. ஒரு பாதுகாப்பிற்கு!!! " "உங்களைப் போன்ற ஆட்களால் தான் சார் நாட்டில் மரங்களோட எண்ணிக்கை குறையுது" என்றேன்.          அதற்கு மேல் அவர் ஒன்றும் பேசவில்லை. பின்னே,இதற்கு மேல் யாராவது பேசுவார்களா?          புறநகர் ரயிலில் ஏறி சில நிமிடங்கள் கழித்து தான் முதல் சந்தேகமே வந்தது.  "நாம பாட்டுக்கு வந்துட்டோம். கொஞ்சம் ஊர்...

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

தமிழா!!! "இதை நீ படிக்கணும்"... "KOLAVERI song" மாதிரி "PROMOTE" செய்ய வேண்டும்!!! PLEASE!!! முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர். மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள்! “ 116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ? தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்தனம் ? ” இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை ...

பாரதியினைத் தலை வணங்குவோம்!

11 டிசம்பர் 2011 சுப்பிரமணி பாரதியார் என்கிற மாபெருங் கவிஞன் பிறந்த நாள். அவரை வாழ்த்தும் அளவு தகுதி எனக்கில்லை.  எனவே , அவரது கவிதை  ஒன்றையே இங்கு பதிந்து அவரை  நினைவு கூறுவோம்!! பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த ஒருமைப்பாடு இன்று மலிந்து விட்டது. சுதந்திரம் பெறாத அந்த நாட்களில் பாரதி ஒருமைப்பாட்டினை எத்தனை  அழகாக பாடியுள்ளார் என்று பாருங்கள்.... // வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்       மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம் // மிகையான நீரைக் கொண்டு பிற நாடுகளில் பயிர் செய்து செழிக்க வைக்கவேண்டும் என்கிறபாரதியின் கனவை என்னவென்று சொல்வது??? ஆனால், இன்று கடலில் கலக்க விட்டாலும் தண்ணீர் தர மாட்டோம் என்று கூவும் மாநிலங்களின் அறிவின்மையை என்னவென்று சொல்வது? பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார் சரணங்கள் 1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி       மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் ...

'அம்மா'வுக்கு நேர்ந்த கொடுமை

இது 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு மட்டுமே!!!!!!!! தமிழ் மொழியில் "அம்மா" எனும் வார்த்தை மிக முக்கியமானது!! "அம்மா" என்பது தாய்மையின் அடையாளம் மட்டும் அல்ல... அது பெண்மையின், கருணையின் அடையாளமும் தான்.... "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை " என்பது ஆன்றோர் வாக்கு!! இது தமிழர்களாகிய நமக்குத் தெரியும்... ஆனால், கூகிள் ரோபோவுக்குத் தெரியவில்லை.... கூகிளில் (google) அம்மா என்று தமிழில் தட்டச்சு செய்து தேடுங்கள்.. கிடைக்கும் முதல் சில விடைகள் உங்களை அதிர வைக்கும்... தங்கை, அக்கா, அத்தை, பெரியம்மா, சித்தி, அண்ணி என நம் தமிழ் வழக்கில் மதிப்பு மிக்க நிலையில் இருக்கும் அனைத்து பெண் வழிச் சொந்தங்களுக்கும் இதே நிலை தான் !! கூகிள் தற்போது தான் தமிழ் கற்பதாலோ  என்னவோ, பாதுகாப்பான தேடலிலும் (Safe Search) இந்த முடிவுகள் வருகிறன!!! இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு கூகிள் குண்டா என்று அறியேன்.. பி.கு: கூகிள் குண்டு (google bomb) கூகிள் தேடுபொறியில் , ஒரு குறிப்பிட்ட சொல்லைத் தட்டச்சு செய்யும் போது, கிடைக்க...

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும...

மணல் மூட்டை- நகைச்சுவை

"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்" இன்றைய இயந்திர வாழ்க்கையில், மன இறுக்கத்தைத் தீர்க்க உதவுவது நகைச்சுவை தான்.. நகைச்சுவையைக் கேட்டு சிரித்தால் மனம் லேசாகிவிடுகிறது.. படித்து மகிழுங்கள்!! அந்த சர்தார்ஜி லாரியில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார்.. அண்டை நாட்டு அதிகாரி வந்தார்... "என்னப்பா இருக்கு மூட்டையில?" "வெறும் மணல் தான் சார்" "நான் நம்ப மாட்டேன்" " மெய்யாலுமே மணல் தான் சார்" அதிகாரி நம்ப வில்லை.. மூட்டையை அங்கேயே பிரித்தார். மணல் தான் இருந்தது!! பார்த்தும் நம்பிக்கை வரவில்லை. மணல் வடிவில் வேறு எதையும் கடத்தினால்? மணல் ஆய்வகம் சென்றது!! முடிவு அது "வெறும் மணல் தான்" என்று கூறியது!! சர்தார்ஜி அண்டை நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். பாவம், ஆய்வு அது இது என்று அவர் கொண்டு வந்த மூட்டையில் பாதி மணலைக் காணோம்!! சில நாட்கள் கழித்து மீண்டும் சர்தார்ஜி லாரியில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார். அதிகாரி வந்து சோதனை செய்தார்.. மணல் மூட்டை ஆய்வகம் சென்று ...

ராமனால் ஏற்பட்ட விளைவு

10 டிசம்பர் 1930 ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.. அன்று நோபல் பரிசு வழங்கும் தினம். அப்போது,  அங்கு ஒரு இந்தியரும், அவரது மனைவியும் வந்து சேர்ந்தனர்.. வந்திருந்த பலரும் அவர் ஏதோ  இலக்கியத்திற்குப் பரிசு வாங்க வந்தார் என்றே  நினைத்திருந்தனர்.. ஆனால்... நடந்ததோ வேறு.. இயற்பியல் துறைக்கான நோபல் பரிசிற்கு அவர் அழைக்கப்பட்டார்.. வந்திருந்த பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். பின்னே, மேலை நாட்டைச் சேராத ஒருவர் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெறுவதென்றால் சும்மாவா?!! அறிவியல் துறையில் சிறந்து விளங்கியமைக்கு நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியரே அவர் தான் !!! அவர் தான் சர்.சி.வி ராமன்.. அந்த ஆண்டு நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படவர்களில் பலரும் அணுக்கள் தொடர்பாகவே ஆராய்ந்திருந்தனர். ஒளியைப் பற்றி ஆராய்ந்தவர் இவர் ஒருவர் தான்.. அது (இன்றும் தான்), அணுக்கள் ஆபத்தானவை என்று அறியப்பட்ட  காலம். நோபல் அறக்கட்டளையின்  கொள்கைப்படி,  நோபல் பரிசு அமைதியான வழியை நாடும் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட வேண்டும். அத்துடன், கண்டுபிடி...