இன்றைய இணைய உலகில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு தேவையாக மாறி விட்டது. பணம் பெறுதல், காழ்ப்புணர்ச்சி மற்றும் வேறு பல காரணங்களால் பலரது மின்னஞ்சல்கள் களவாடப்படுகிறன (Hack). அவற்றைத் தடுக்க பல வழிகள் இருந்தாலும், புதிய புதிய வழிமுறைகளால் களவாடல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன. களவாடப்பட்டதைத் திரும்ப பெற்றபின் மீண்டும் அதைத் தக்க வைத்துக் கொள்ள என்ன தான் வழி? பலர் தங்கள் மின்னஞ்சல் கணக்கை களவு கொடுத்திருக்கலாம்!! ஆனால், அதனை மீட்ட பின், நம்மவர்கள் செய்யும் முதல் விடயம் கடவுச்சொல்லை (Password) மாற்றுவது தான் !! அப்படியும், சில நேரங்களில் நமது கணக்கு மீண்டும் சூறையாடப்படுவது உண்டு. என்ன காரணம்? அதனைத் தடுக்க என்ன வழி? பொதுவாக, கொந்தர்கள் (Hackers) பலர் ஒரு கணக்கை அபகரித்த உடன் முதலில் செய்யும் விடயமே, கணக்கின் கடவுச்சொல் தொடர்புடைய விவரங்களை மாற்றுவது தான்!! எனவே, வெறும் கடவுச்சொல்லை மாற்றினால், அதனால் எந்த பயனும் இல்லை.. என்ன செய்வது???? கீழ்காணும் வழிமுறையை அப்படியே செய்யுங்கள்!! முதலில், உங்கள் கணக்கில் "கடவுச்சொல் மாற்றல் ம...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ