முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயணங்கள் முடிவதில்லை


வாழ்க்கை எனும் ஓடம் தன் பயணத்தைத் தொடர்ந்த படியே உள்ளது. பயணம் செய்பவர்களைப் பற்றி என்றும் கவலைப்படுவதில்லை!!



பயணத்தின் வழிகளில் மென்மையான அலைகளின் தீண்டலும் உண்டு; அதே சமயம், மிகவும் ஆபத்தான புயல்களும் உண்டு. ஓடத்தில் இருப்பவர்கள் அவற்றால் பல்வேறு மனநிலைகளில் இருக்கலாம்.. ஆனால், ஓடம் அவை அனைத்தையும் கடந்து செல்கிறது. அவற்றைக் கடந்த சுவடுகளே சில சமயம் தெரிவதில்லை!

இந்த பயணத்தின் போது இனிய இன்பங்களும், கொடிய துன்பங்களும், மறக்க முடியாத நிகழ்வுகளும், மறக்கக் கூடாத அனுபவங்களும் அனைவருக்கும் ஏற்படுகிறன. ஆனால், ஓடமோ அவற்றை சிறிதும் லட்சியம் செய்யாமல், தன் வழியில் சென்று கொண்டே இருக்கிறது..

சுற்றி நிகழும் நிகழ்வுகளின் தாக்கம் சற்று இருந்தாலும், வாழ்க்கை ஓடம் அவற்றால் பெரிதாக பாதிக்கப்படுவதில்லை. தன் இலக்கை நோக்கிய அதன் பயணமும் முடிவதில்லை.

அதன் இலக்கை அறிந்து கொள்ள முயல்வது கடினம். அறிய முற்பட்டவர்கள் அறிய முடிந்தது இல்லை. அறிந்தவர்கள் யாரும் நம்மிடையே இல்லை. இலக்கின் தன்மையைப் பற்றி விவாதிப்பவர்கள் தான் உண்டு.


ஆனால், வாழ்க்கை எனும் ஓடம் விவாதங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அதன் பயணம் தொடர்கிறது.


எனது வாழ்க்கை பயணமும் அப்படித் தான்!!

பயணத்தின் இலக்கை அடையும் வரை என் பயணமும் தொடரும்!!

கருத்துகள்

  1. பண்பாளர் அருண்,

    உங்களின் வலைப்பூவில் கண்ட "பயணங்கள் முடிவதில்லை" ஒரு நல்ல பதிவு.
    மேலும் பல பதிவுகள் வளர வாழ்த்துக்கள் !

    அன்புடன்
    வீரராகவன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செவ்வாய் கிரகத்தில் கியூரியோசிட்டி தரையுளவி [Curiosity Rover]

  நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியோசிட்டி  தரையுளவி (Curiosity  Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது. 06 ஆகஸ்ட் 2012 அன்று கேல் எரிமலைப்பள்ளத்தாக்கில்(Gale Crater) இறங்கியது. அதன் சிறப்பம்சம் என்ன? எப்படி செவ்வாயின் பரப்பை அடைந்தது? அதன் திட்டக் நோக்கம் என்ன? என்ன விதமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது? செவ்வாயில் உயிர்கள் இருப்பைப் பற்றி எதுவும் கண்டறியுமா? சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர்  நாசா விஞ்ஞானிகள். நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய Curiosity என்கிற தரையுளவி (Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததாம். புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம். அந்த படங்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து புதிது புதிதாக அப்லோட் செய்கிறதாம்.. அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்து தனது ஸ்டேடஸை அப்டேட் செய்கிறதாம் (பேஸ்புக்கில் அல்ல!) !!    ...

தமிழ் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!

வணக்கம் நண்பர்களே... வழக்கம் போல எனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்! அதில் இணைய திரட்டியான தமிழ்10 தளத்தில் இருந்து ஒரு மடல் இருந்தது. "Stenzer உங்கள் இடுகையில் கருத்து தெரிவித்து ள்ளார்" என்று .. 'அடடா... நாம எழுதுறதையும் படிச்சு பார்த்து ஒருத்தர் கமெண்ட் சொல்லியிருக்காங்களே!' என்று ஆர்வமாக அஞ்சலை வாசித்தேன்!!!! வணக்கம் aalunga,  தமிழ்10 தளத்தில் நீங்கள் பகிர்ந்த " அவிழ்மடலும் இனி..... பிளாக்கருக்கு நன்றி!" என்னும் இடுகைக்கு "stenzer "கருத்து தெரவித்துள்ளார் . " ஹலோ செல்லம் என் பெயர் binta உள்ளது உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி ( bintajaafar@yahoo.com ) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கி...

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...