ஜூலை இறுதி என்றாலே "சீக்கிரம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்கிற விழிப்பு அனைவரிடமும் இருக்கும். அதற்கென இருக்கும் படிவத்தை முழுதும் நிரப்புவது பெரும்பாடு தான்!! இணையத்தை நாம் பல செயல்களுக்குப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். இணையத்தில் மூலம் நமது வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது (Efiling of income tax returns) என்பதை இந்த பதிவில் பார்ப்போம். வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இணைப்பு: https://incometaxindiaefiling.gov.in/ 1. முதலில் தளத்திற்குச் சென்று உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள் . கணக்கை எப்படி உருவாக்குவது? தளத்தில் வலது பக்கத்தில் இருக்கும் Login என்கிற பகுதியில் இருக்கும் Register என்பதைச் சொடுக்குங்கள். அடுத்து வரும் பக்கத்தில், உங்களது PAN எண்ணை இடுங்கள் (உங்களது PAN எண் தான் உங்களின் கணக்கு! (user id) ) அடுத்து வரும் பக்கத்தில், உங்கள் விவரங்களை உள்ளிடுங்கள்.உங்கள் PAN CARD விண்ணப்பப்படிவத்தில் கொடுத்தது போலத் தான் உங்கள் பெயர் இருக்க வேண...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ