இது ஒரு உண்மைச் சம்பவம்.. மின்னணு ரயில் பயணச்சீட்டைப் பயன்படுத்த நினைத்து ஏமாந்த பதிவரின் கதை!! 22 ஜனவரி 2012 அலுவல் நிமித்தமாக பல நாட்கள் வெளியூரில் தங்க வேண்டிய சூழல். ஒரு வழியாய் வேலை முடிந்து திரும்ப தயாரானேன். "ரயில் டிக்கெட் பிரிண்ட் எடுத்தாச்சா?" என்று ஒரு சகா கேட்டார். "நீங்க எந்த காலத்தில் சார் இருக்கீங்க? இப்ப ரயில்ல போக டிக்கெட் எல்லாம் தேவை இல்லை. உங்க அலைபேசியிலோ, இல்லை மடிக்கணிணியிலோ டிக்கெட் ஸாப்ட் காப்பியைக் காட்டினால் போதும்" என்றேன். "இருந்தாலும்.. ஒரு பாதுகாப்பிற்கு!!! " "உங்களைப் போன்ற ஆட்களால் தான் சார் நாட்டில் மரங்களோட எண்ணிக்கை குறையுது" என்றேன். அதற்கு மேல் அவர் ஒன்றும் பேசவில்லை. பின்னே,இதற்கு மேல் யாராவது பேசுவார்களா? புறநகர் ரயிலில் ஏறி சில நிமிடங்கள் கழித்து தான் முதல் சந்தேகமே வந்தது. "நாம பாட்டுக்கு வந்துட்டோம். கொஞ்சம் ஊர்...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ