யுடான்ஸ் திரட்டி குழுமம் (ஆதி மற்றும் பரிசல் அவர்களுடன் இணைந்து) நடத்தும் "சவால் சிறுகதைப் போட்டி 2011" போட்டிக்காக எழுதப்பட்டுள்ள கதை சவால் சிறுகதைப் போட்டி 2011 குணா விஷ்ணுவின் அழைப்புக்காக எதிர்பார்த்து காத்து இருந்தான்.. அவன் எதிர்பார்த்த மாதிரியே,விஷ்ணு அழைத்தான்.. அலைபேசி "Vishnu Informer" என்று சிமிட்டியது. "குணா.. நான் சொன்னபடி செஞ்சுட்டியா?" "எல்லாம் ரெடி.." "சரி... ரெண்டையும் தனித்தனியா கவர்ல போடு.. ஒண்ணு கோகுலுக்கு இன்னொன்று மாதவனுக்கு.. கவனம் " "ஓகே" "இன்னும் கொஞ்ச நேரத்தில அங்க கோகுல் வருவான்!! அவன்கிட்ட ரெண்டையும் குடுத்து விடு" குணாவிற்குத் தலை சுற்றியது... இரண்டையும் கோகுலிடம் கொடுத்தால்?? "தெரிஞ்சு தான் பேசறியா?? " "ஆமா...ரெண்டையும் அவன்கிட்ட கொடு.. மாதவனுக்கு உள்ளதை மாதவன்கிட்ட கொடுத்துட சொல்லு" "சரி.. உன் இஷ்டம்" அரை மணி நேரத்தில் கோகுல் வந்தான்.. அவனிடம் இரண்டு கவர்களையும் குணா ஒப்படைத்தான்... "விஷ்ணு ஏதும்?" ...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ