9 செப்டம்பர் 2005, வெள்ளிக் கிழமை என்னுடன் இயந்திரவியல் படித்த நண்பர்களால் மறக்க முடியாத நாள்.. அந்த நாள் பெற்ற சிறப்பினை அறியும் முன்னர், சில தகவல்களை அறிவோம்!! திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (National Institute of Technology - NIT, Trichy) அதன் கல்விக்கு மட்டுமன்றி கலை நிகழ்ச்சிகளுக்கும் பெயர் பெற்றது. அந்த கல்லூரி நடத்தும் கலை நிகழ்ச்சி தான் பெஸ்டம்பர் (Festember) - செப்டெம்பர் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வார இறுதியில் நடைபெறும் கலை நிகழ்ச்சி. இந்திய அளவில் அனைத்து கல்லூரி மாணவர்களும் கூடும் நிகழ்ச்சி என்பதால், அரங்கமே களைகட்டும்.. பெஸ்டம்பர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை, பார்க்கவாவது கல்லூரி இளவட்டம் குவிவது வழக்கம்! இப்படி பலராலும் எதிர்பார்க்கப்படும் பெஸ்டம்பர் செப்டம்பர் 8 ஆம் தேதி (2005) துவங்குவதாக தகவல் பலகையில் ஒரு அழைப்பிதழ் தொங்கியது! பார்த்த உடனே அனைவருக்கு மனதிலும் நிகழ்ச்சியைக் காண ஆசை! வெறும் 150 கி.மீ தூரம் எங்களைப் பார்க்க விடாமல் இருக்க செய்து விடுமா? 8 ஆம் தேதி துவக்க விழ...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ