முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!

தமிழா!!! "இதை நீ படிக்கணும்"... "KOLAVERI song" மாதிரி "PROMOTE" செய்ய வேண்டும்!!! PLEASE!!! முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர். மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள்! “ 116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ? தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்தனம் ? ” இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை

பாரதியினைத் தலை வணங்குவோம்!

11 டிசம்பர் 2011 சுப்பிரமணி பாரதியார் என்கிற மாபெருங் கவிஞன் பிறந்த நாள். அவரை வாழ்த்தும் அளவு தகுதி எனக்கில்லை.  எனவே , அவரது கவிதை  ஒன்றையே இங்கு பதிந்து அவரை  நினைவு கூறுவோம்!! பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த ஒருமைப்பாடு இன்று மலிந்து விட்டது. சுதந்திரம் பெறாத அந்த நாட்களில் பாரதி ஒருமைப்பாட்டினை எத்தனை  அழகாக பாடியுள்ளார் என்று பாருங்கள்.... // வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்       மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம் // மிகையான நீரைக் கொண்டு பிற நாடுகளில் பயிர் செய்து செழிக்க வைக்கவேண்டும் என்கிறபாரதியின் கனவை என்னவென்று சொல்வது??? ஆனால், இன்று கடலில் கலக்க விட்டாலும் தண்ணீர் தர மாட்டோம் என்று கூவும் மாநிலங்களின் அறிவின்மையை என்னவென்று சொல்வது? பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார் சரணங்கள் 1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி       மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள்  

'அம்மா'வுக்கு நேர்ந்த கொடுமை

இது 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு மட்டுமே!!!!!!!! தமிழ் மொழியில் "அம்மா" எனும் வார்த்தை மிக முக்கியமானது!! "அம்மா" என்பது தாய்மையின் அடையாளம் மட்டும் அல்ல... அது பெண்மையின், கருணையின் அடையாளமும் தான்.... "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை " என்பது ஆன்றோர் வாக்கு!! இது தமிழர்களாகிய நமக்குத் தெரியும்... ஆனால், கூகிள் ரோபோவுக்குத் தெரியவில்லை.... கூகிளில் (google) அம்மா என்று தமிழில் தட்டச்சு செய்து தேடுங்கள்.. கிடைக்கும் முதல் சில விடைகள் உங்களை அதிர வைக்கும்... தங்கை, அக்கா, அத்தை, பெரியம்மா, சித்தி, அண்ணி என நம் தமிழ் வழக்கில் மதிப்பு மிக்க நிலையில் இருக்கும் அனைத்து பெண் வழிச் சொந்தங்களுக்கும் இதே நிலை தான் !! கூகிள் தற்போது தான் தமிழ் கற்பதாலோ  என்னவோ, பாதுகாப்பான தேடலிலும் (Safe Search) இந்த முடிவுகள் வருகிறன!!! இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு கூகிள் குண்டா என்று அறியேன்.. பி.கு: கூகிள் குண்டு (google bomb) கூகிள் தேடுபொறியில் , ஒரு குறிப்பிட்ட சொல்லைத் தட்டச்சு செய்யும் போது, கிடைக்க

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும

மணல் மூட்டை- நகைச்சுவை

"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்" இன்றைய இயந்திர வாழ்க்கையில், மன இறுக்கத்தைத் தீர்க்க உதவுவது நகைச்சுவை தான்.. நகைச்சுவையைக் கேட்டு சிரித்தால் மனம் லேசாகிவிடுகிறது.. படித்து மகிழுங்கள்!! அந்த சர்தார்ஜி லாரியில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார்.. அண்டை நாட்டு அதிகாரி வந்தார்... "என்னப்பா இருக்கு மூட்டையில?" "வெறும் மணல் தான் சார்" "நான் நம்ப மாட்டேன்" " மெய்யாலுமே மணல் தான் சார்" அதிகாரி நம்ப வில்லை.. மூட்டையை அங்கேயே பிரித்தார். மணல் தான் இருந்தது!! பார்த்தும் நம்பிக்கை வரவில்லை. மணல் வடிவில் வேறு எதையும் கடத்தினால்? மணல் ஆய்வகம் சென்றது!! முடிவு அது "வெறும் மணல் தான்" என்று கூறியது!! சர்தார்ஜி அண்டை நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். பாவம், ஆய்வு அது இது என்று அவர் கொண்டு வந்த மூட்டையில் பாதி மணலைக் காணோம்!! சில நாட்கள் கழித்து மீண்டும் சர்தார்ஜி லாரியில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார். அதிகாரி வந்து சோதனை செய்தார்.. மணல் மூட்டை ஆய்வகம் சென்று &qu

ராமனால் ஏற்பட்ட விளைவு

10 டிசம்பர் 1930 ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.. அன்று நோபல் பரிசு வழங்கும் தினம். அப்போது,  அங்கு ஒரு இந்தியரும், அவரது மனைவியும் வந்து சேர்ந்தனர்.. வந்திருந்த பலரும் அவர் ஏதோ  இலக்கியத்திற்குப் பரிசு வாங்க வந்தார் என்றே  நினைத்திருந்தனர்.. ஆனால்... நடந்ததோ வேறு.. இயற்பியல் துறைக்கான நோபல் பரிசிற்கு அவர் அழைக்கப்பட்டார்.. வந்திருந்த பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். பின்னே, மேலை நாட்டைச் சேராத ஒருவர் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெறுவதென்றால் சும்மாவா?!! அறிவியல் துறையில் சிறந்து விளங்கியமைக்கு நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியரே அவர் தான் !!! அவர் தான் சர்.சி.வி ராமன்.. அந்த ஆண்டு நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படவர்களில் பலரும் அணுக்கள் தொடர்பாகவே ஆராய்ந்திருந்தனர். ஒளியைப் பற்றி ஆராய்ந்தவர் இவர் ஒருவர் தான்.. அது (இன்றும் தான்), அணுக்கள் ஆபத்தானவை என்று அறியப்பட்ட  காலம். நோபல் அறக்கட்டளையின்  கொள்கைப்படி,  நோபல் பரிசு அமைதியான வழியை நாடும் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட வேண்டும். அத்துடன், கண்டுபிடிப்பு அனைவராலும் பயன்படுத்தக்க

இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள்????

சமீபத்தில் நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்த இணைப்பு இது. இந்த காணொளியைப் பார்த்ததும், படைப்பின் விந்தைகளைக் கண்டு வியந்தேன்.. நீங்களும் இதைப் பாருங்கள்: இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள்- கடவுள் இல்லையென்று? பார்த்த பின் உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்!!

பலரும் மறந்த தந்தை

  இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா???    தொடர்ந்து படியுங்கள்..... அக்டோபர் 2011 இந்த மாதத்தை இன்றைய நவீன உலகில் பலரும் மறக்க மாட்டர். காரணம், இந்த மாதத்தின் 5 ஆம் நாள் அன்று தான் (5 அக்டோபர் 2011) ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார். அவரது மறைவிற்கு பல தொழில்நுட்ப நிபுணர்களும், ஊடகங்களும் பல்வேறு வகைகளில் இரங்கல் தெரிவித்துஅவரை வணங்கின. ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்நுட்பத் துறையில் ஒரு பிதாமகர் என்பதில் எந்த இரு வேறு கருத்துக்கும் இடம் இல்லை.. அதன் பிறகு, சில நாட்களிலேயே கணிணித்துறையின் மிகப்பெரும் பிதாமகர் ஒருவரும் இயற்கை எய்தினார். ஆனால்  அவரை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. சில ஊடகங்கள் சிறு பத்தியில் அவரைப் பற்றிய செய்தியை வெளியிட்டுத் தங்கள் கடமை  முடிந்து விட்டதாக நினைத்து விட்டன. அவர் ............... கணித்தல் துறையின் தந்தை தென்னிசு இரிட்சி அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா? அதற்கு முன்பு  C மொழியைப் பற்றிப் பார்ப்போம்!! இன்று பல கணிணி பயன்பாடுகள் இயங்க அடித்தளமாக இருக்கும் நிரலாக்க மொழி

குறியீடு (சவால் சிறுகதைப் போட்டி 2011)

யுடான்ஸ் திரட்டி குழுமம் (ஆதி மற்றும் பரிசல் அவர்களுடன் இணைந்து) நடத்தும் "சவால் சிறுகதைப் போட்டி 2011"  போட்டிக்காக எழுதப்பட்டுள்ள கதை சவால் சிறுகதைப் போட்டி 2011 குணா விஷ்ணுவின் அழைப்புக்காக எதிர்பார்த்து காத்து இருந்தான்.. அவன் எதிர்பார்த்த மாதிரியே,விஷ்ணு அழைத்தான்.. அலைபேசி "Vishnu Informer" என்று சிமிட்டியது.   "குணா.. நான் சொன்னபடி செஞ்சுட்டியா?" "எல்லாம் ரெடி.." "சரி... ரெண்டையும் தனித்தனியா கவர்ல போடு.. ஒண்ணு கோகுலுக்கு இன்னொன்று மாதவனுக்கு.. கவனம் " "ஓகே" "இன்னும் கொஞ்ச  நேரத்தில அங்க கோகுல் வருவான்!! அவன்கிட்ட ரெண்டையும் குடுத்து விடு" குணாவிற்குத் தலை  சுற்றியது... இரண்டையும் கோகுலிடம் கொடுத்தால்?? "தெரிஞ்சு தான் பேசறியா?? " "ஆமா...ரெண்டையும் அவன்கிட்ட கொடு.. மாதவனுக்கு உள்ளதை மாதவன்கிட்ட கொடுத்துட சொல்லு" "சரி.. உன் இஷ்டம்"  அரை மணி நேரத்தில் கோகுல் வந்தான்.. அவனிடம் இரண்டு கவர்களையும் குணா ஒப்படைத்தான்... "விஷ்ணு ஏதும்?" "

தீபாவளி இரவினில் இந்தியா (நம்பாதீங்க - பகுதி 1)

நம்பாதீங்க......  (பகுதி 1) இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது.. இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு... மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது.. ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்... மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன... இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு.. பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்... பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!! பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதியனவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன.. அவற்றைப் பற்றி அலசுவதே  இந்த (சிறு) தொடரின் நோக்கம்.. தீப ஒளித்திருநாளாம் தீபாவளியை அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி இருப்பீர்கள்!! நேற்று (26/10/2011) பலரது அஞ்சலுக்கும் (அல்லது முகநூல்/ ட்விட்டர்) ஒரு படம் வந்திருக்கும்.. இந்தியா தீபாவளி இரவினில் எப்படி ஒளிர்கிறது என்று நாசா எடுத்த புகைப்படம்:  சரி, உண்ம

மாசற்ற தீபாவளி கொண்டாடுவோம்

தீப ஒளித் திருநாள்.. பண்டைய காலத்தில் தீபங்களின் மூலம் ஒளியை வரவேற்ற நாள் இது. எனவே தான் "தீப ஒளி" என்று கொண்டாடத் துவங்கிய பண்டிகை இன்று தீபாவளி என்று மருவிக்கிடக்கிறது (அசுரனை அழித்த பண்டிகை என்பதில் எனக்கு உடன்பாடில்லை!) எந்த ஒரு நடைமுறை என்றாலும், சமகால மனிதருக்கும், வருங்காலச் சந்ததியினருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்றால், அந்நடைமுறைகளை மாற்றுவதில் தவறில்லை  அல்லவா!! பண்டிகைகள் என்றாலே புத்தாடை அணிந்து பலகாரம் உண்டு பிறருடனும் பகிர்ந்து மகிழ வேண்டிய நாளன்றோ!! தீப ஒளித்திருநாள் அன்றோ பலரும் பட்டாசுகளைக் கொளுத்தியும் நம் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கிறோம். ஆனால், பட்டாசு கொளுத்துவதால் ஏற்படும் தீங்கினை யாரும் யோசிப்பதில்லை.. பட்டாசுகள் தீபாவளி அன்று மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், அவற்றால் பின்னாளில் பல கேடுகள் காத்து இருக்கிறன. பட்டாசில் கந்தகம், நைட்ரேட் போன்றவற்றுடன் காப்பர், மெர்க்குரி, அமோனியம் போன்ற உலோகங்களும் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் சுவாசம் தொடர்புடைய பல நோய்கள் ஏற்படுகிறன. பட்டாசு வெடிக்கையில் திடீரெனக் கேட்கும் அதீத ஒலி, கேட்கும் திற

கடவுளே!

சில வருடங்களுக்கு முன்பு நடந்த கதை... பத்தாம் வகுப்பு இறுதித் தேர்விற்குச் சில நாட்கள் முன்னர்.. அன்று தான் பள்ளியில் அனைவருக்கும் நுழைவுச்சீட்டு கொடுத்து இருந்தனர்.. பயபக்தியோடு என் அப்பாவிடம் கொடுத்தேன்... " பரிட்சை ஹால் டிக்கெட்டா? நல்லது.. நல்லது... எல்லாரும் இந்த ஞாயிற்றுக் கிழமை நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போய் வேண்டிகிட்டு வருவோம்" " இல்லப்பா... ஸ்டடி லீவ் கொஞ்சம் நாள் தான் குடுத்து இருக்காங்க... படிக்கணும்" " பரவாயில்லைப்பா... நாம் காலையில சீக்கிரமா கிளம்பி போய்ட்டு ரெண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடலாம்" " இல்லப்பா.." "அரை நாள் படிக்கலைனா ஒண்ணும் ஆகாது.. நீ தான் சில நாள் நைட் முழிச்சு படிப்பல? அப்படி படி" அதற்கு மேல் உண்மையை மறைக்க முடியவில்லை... "அப்பா... இந்த ஞாயிற்றுக் கிழமை சக்திமான் இருக்குப்பா... சக்திமானுக்கும், தன்ராஜ் கில்விஷருக்கும் சண்டைப்பா" "அதானே பார்த்தேன் என்னடா பையன் படிப்பில ரொம்ப ஆர்வமா இருக்கான்னு... ஏண்டா சாமியை விட சக்திமான் உனக்கு அதிகமா மார்க் வாங்கி கு