முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவிழ்மடல் பெறும் முதல் விருது - லிபெஸ்டர் பிளாக் (Liebester Blog) - நண்பர்களுக்கு நன்றி!

அன்பு நண்பர்களே, ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல். என்பது வள்ளுவர் வாக்கு .    ( உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை) ஒரு ஆர்வத்தில் வலைப்பூ ஆரம்பித்து, பல நாட்கள் கழித்து நண்பர்கள் சிலர் கொடுத்த ஊக்கத்தால் பதிவுகள் எழுதத் துவங்கினேன். எனது முதல் சில பதிவுகளுக்கு என் நண்பர்கள் மட்டுமே வாசகர்கள். அதன் பின் வந்த வாசகர்களும் என் நண்பர்கள் ஆனார்கள். நண்பர் ' வீடு சுரேஷ் ' அவர்கள் எனக்கு லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog) என்கிற விருதினை அளித்துள்ளார். இந்த விருதினை அவர்  விருதுகள் எனும் ஊக்கமருந்து!   என்கிற  பதிவின் மூலம்  அளித்துள்ளார். விருதிற்குக் காரணமான பதிவு:   தானியக்க வங்கி இயந்திரத்தில் திருடர்களை தவிர்ப்பது எப்படி? வலையில் எழுதத் துவங்கிய பின், எனக்கு கிடைத்த முதல் விருது இது தான்.  எனது பதிவுகளை அங்கீகரித்து எனக்கு இந்த விருதினை வழங்கிய நண்பர் சுரேஷ் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள். < லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog)   விருதினைப் பற்றி தேடியதில் கிட்டிய

அலைபேசியின் தயாரிப்பு இடம் தெரியணுமா? (நம்பாதீங்க- பகுதி 4)

இன்று அலைபேசி (Cellphone) பயன்படுத்தாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். எந்த ஒரு பொருளைப் போலவும், அலைபேசியிலும் தரம் மிக முக்கியம். ஒரு நிறுவனத்தின் வெவ்வேறு நாட்டுக் கிளைகளில் தயாரிக்கப்படும் அலைபேசிகளின் தரத்தில் வேறுபாடு இருக்குமா ? நமது அலைபேசி எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டறிய எதுவும் வழி உண்டா ? அதன் மூலம் தரத்தை அறிய முடியுமா?                                        நம்பாதீங்க - பகுதி 4 அலைபேசியின் தயாரிப்பைப் பற்றி அறிய வழிசொல்லும் இந்த செய்தியைப் பலரும்  மின்னஞ்சல் வடிவிலோ, குறுஞ்செய்தி வழியாகவோ பெற்று இருக்க வாய்ப்பு உண்டு (தமிழாக்கம்): உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள். 00 ==> தரமான தொழிற்சாலையில் தயாரித்தது (செல்போன் தரம் மிக மிக நன்று) 01 அல்லது 10 ==> தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து (மிக

தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) திருடர்களைத் தவிர்ப்பது எப்படி? (நம்பாதீங்க - பகுதி 3)

நீங்கள் தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) பணம் எடுக்க முற்படும் போது, திருடர்கள் தாக்கினால் என்ன செய்வீர்கள்? 'அது தான் படித்திருக்கோமே.. ATM-இல் PIN எண்ணை உள்ளிடும் போது, அதை Reverse -இல் அடித்தால், உடனே போலீஸ்க்குத் தகவல் போகும். எளிதாகத் தப்பித்து விடலாம்! பிரச்சனை இல்லை ' என்று நினைக்கிறீர்களா? அப்ப இது உங்களுக்குத் தான்!! நம்பாதீங்க - பகுதி 3 இதைப் பற்றிய ஒரு மிக அருமையான புரட்டு உண்டு (தமிழாக்கம்): நீங்கள் ஒரு தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) பணம் எடுக்க அறையின் உள்ளே நுழைகிறீர்கள்.. அப்போது, இரு திருடர்கள் உள்ளே புகுந்து உங்களைத் தாக்குகிறார்கள்.. பணம் கேட்டு உங்களை மிரட்டுகிறார்கள். என்ன செய்வது? அவர்களிடம் தர்க்கம் செய்ய வேண்டாம்.. வழக்கம் போல் உங்கள் அட்டையைப் பயன்படுத்துங்கள்.. ஆனால், சங்கேத குறியீட்டு எண்ணைத் தலைகீழாக இடுங்கள். உ.தா: உங்கள் பின் எண் 1254 என்றால் 4521 என்று அழுத்துங்கள்.. நீங்கள் இப்படி திருப்பி எண்ணை இடும் போது, பணம் வழக்கம் போல் வெளிவரும்.. ஆனால், இயந்திரத்தில் சிக்கி கொண்

அவிழ்மடலும் இனி..... பிளாக்கருக்கு நன்றி!

நண்பர்களே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூகிள் பிளாக்கர் செய்த ஒரு காரியம் பலருக்குப் பெரும் இடியாய் விழுந்தது. blogspot.com என்கிற டொமைன்-ஐ அந்தந்த நாட்டின் தனி டொமைன்களாக மாற்றி விட்டது (இந்தியாவில் blogspot.in). இந்த மாற்றத்தை எவ்வித மின்னறிவிப்பும் இன்றி செய்து முடிந்தது பிளாக்கர். இதனால், பல பதிவர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாயினர். பதிவுகளில் பார்வைகளை அளக்கும் அளவீடுகள் (அலெக்ஸா, அனலிடிக்ஸ்) அனைத்திலும் பலரும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். திரட்டிகளில் பதிவுகளை இணைக்கவும் படாத பாடு பட வேண்டி இருந்தது. தனி டொமைன் வைத்திருந்த அன்பர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை! இன்னும் சில நாட்களில் பிளாக்கரில் இல்லாத பதிவுகளுக்கு Google Friend Connect கிடைக்காது என்று கூகிள் அறிவித்துள்ளது. பிளாக்கருக்கான Friend Connect வசதியினையும் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தும் சூழ்நிலை உள்ளது. இன்னும் சிறிது நாட்களில் பிளாக்கரையே மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிளாக்கரில் எந்த மாற்றம் வந்தாலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு சிறந்த வழிகளுள் ஒன்று நம் வலைப்பூவினைப் பிளாக்கர் அல்லாத டொமைனில்  வைப

வண்ணங்களும் பெண்களும்

மூன்று நிறமிகளின் துணை கொண்டே வண்ணங்களின் கலவையான உலகினை நம் கண்கள் காட்டுகிறன. வண்ணங்களைப் பிரித்தறிவதில் பெண்களுக்கு நிகர் அவர்களே தான். அவர்கள் அணியும் உடைகளும், அணிகளுமே அதற்குச் சான்று. எப்படி பெண்களால் மட்டும் மிகவும் ஒரே வண்ணத்தின் இருவேறு சாயல்களை மிகவும் துல்லியமாகக் கண்டறிய முடிகிறது? இங்குப் பார்ப்போம்!! "எனக்கு மயிலிறகு பச்சை கலரில் தான் சுடிதார் வேண்டும்" "உனக்கு கொஞ்சம் கூட கலர் சென்ஸே இல்லை. இது Baby Pink.. இது Onion pink. எப்படி ரெண்டுக்கும் மேட்ச் ஆகும்?" "நல்லா தான் இருக்கு.. ஆனா, இதுவே கொஞ்சம் Magenta வா இருந்தா நல்லா இருந்திருக்கும்" என்னங்க? உங்க வீட்டிலும் இப்படி கலர் தொடர்பான போராட்டங்கள் நடக்குதா? வண்ணங்கள் தொடர்புடைய துறைகளில் (ஜவுளி, ஓவியம்) வேலை செய்யும் ஆண்களைத் தவிர பெரும்பாலான ஆண்களுக்கு வண்ணங்களின் பட்டியல் மிக குறைவு தான். இதனாலேயே, பலர் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் துணி எடுக்கும் போது அல்லல்படுகிறார்கள்! வண்ணங்களைப் பற்றிய ஆய்வு செய்த நிபுணர்கள் வண்ணங்களை ஆண்களும், பெண்கலும் எப்படி பார்க்கிறார்கள் என்று

பதிவுகளில் திரட்டிகளை அழகாய் அடுக்குவோம்!!

வலைப்பூக்களில் திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகள் ஒழுங்கு இல்லாமல் இருக்கா? அவற்றை அழகாய் அடுக்குவோம்!     பதிவர்கள் எழுதும் பதிவுகளைப் பிற பதிவர்களிடமும், வாசகர்களிடமும் கொண்டு சேர்ப்பதில் பெரும் துணை புரிவன திரட்டிகள். தங்கள் பதிவுகளைப் பல தளங்களிலும் பரப்ப ஏதுவாக பதிவர்கள் பலரும் தங்கள் பதிவுகளில் திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை வைப்பது வழக்கம்..     பெரும்பாலும் நாம் திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை நிரலாக மட்டுமே இணைப்பதால் , அவை ஒரே வரிசையில்  அமர்வது இல்லை.  அவை ஒரே வரிசையில் அமர்ந்தால் எவ்வளவு அழகாய் இருக்கும்? இதைப் பற்றி ஏற்கனவே சில பதிவர்கள் எழுதி இருக்கிறார்கள். எனினும், அந்த நிரலில் சிறு மாற்றம் செய்து அனைவருக்கும் பயன்படி இதை எழுதுகிறேன்.     1. முதலில் உங்கள் டெம்பிளேட்டை  ஒரு காப்புப்படி (Backup) எடுத்துக்கொள்ளவும்.  பழைய பிளாகர்  இடைமுகம் எனில், Blogger-->Design-->Edit HTML செல்லவும். அங்கிருக்கும் "Download Full Template " ஐச் சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளவும் புதிய பிளாகர்  இடைமுகம் எனில், Blogger-->Template செல்லவும். அங்குள்ள 'Backup/Res