முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டிலஸ் மூலமும் வட்டில் எழுதலாம்! (உபுண்டு)

அண்மைக் காலங்களில் , விரலிகளின் (USB Drive) பயன்பாடு அதிகரித்துள்ளது . எனினும் , குறுவட்டு (CD) மற்றும் இறுவட்டு (DVD) ஆகியவற்றின் தேவை இன்னும் குறையவில்லை .   லினக்ஸ் பயனாளர்கள் பலரும் வட்டில் தரவுகளை எழுத பிராஸரோ (Brasero) , K3B போன்ற பயன்பாடுகளையே பயன்படுத்துகிறோம் .  ஆனால் , நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாட்டிலஸ் கோப்பு மேலாளர் (Nautilus File Manager) மூலம் இதை எளிதாகச் செய்யலாம் தெரியுமா ? எப்படி செய்வது ? நாட்டிலஸ் மேலாளரில் மெனுப்பட்டியலில் உள்ள Go→Location என்பதற்குச் செல்லுங்கள் . தோன்றும் முகவரிப்பட்டையில் (Address bar), burn:/// என்று உள்ளிட்டு Enter விசையை அழுத்துங்கள் . உடனே , வட்டு உருவாக்கி (CD/DVD Creator) திறக்கும் . அதில் , தேவையான கோப்புகளை இடுங்கள் .   கோப்புகளை இட்ட பின் , “Write To Disc” என்பதைச் சொடுக்குங்கள் . திறக்கும் உரையாடல் பெட்டியில் (Dialog box), தகுந்த வட்டைத் தேர்வு செய்யுங்கள் . வெற்று வட்டு எனில் , Blank Disc என்பதைத் தேர்ந்தெடுங்கள் . பிம்பமாக (Image)