முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாரது யாரது? (கண்ணை நம்பாதே #1 )

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்  நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது உங்கள் கண்களுக்குக் கொஞ்சம் விளையாட்டு காட்டுவோமா? கீழ்காணும் படத்தில் தெரியும் பெண்ணின் மூக்கில் உள்ள சிவப்பு புள்ளியை தொடர்ந்து 30 - 40 வினாடிகள் உற்று நோக்குங்கள். கண்களை வேகமாக வெற்றிடம் நோக்கித் திருப்புங்கள் (சுவர் / வெள்ளைத் தாள் / புது தத்தல்) கண்களை வேகமாக இமையுங்கள்.   இப்ப என்ன தெரிகிறது? அந்தப் பெண் உங்கள் கண்களுக்குத் தெரிகிறாரா? சரி, இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது? நீங்கள் கண்ட தோற்ற மயக்கம் ஒரு ஒளியியற்கண்மாயம் (Optical Illusion)  ஆகும்.  இதற்கு 'எதிர்மறை பின் தோற்றம்' (Negative After Image) என்று பெயர். கண்களில் உள்ள ஒளி உணர்விகளின் ( Photoreceptors) துணைக் கொண்டே வண்ணங்களின் கலவையான உலகினை நம் கண்கள் காட்டுகிறன (இவற்றைப் பற்றி பிறிதொரு நாள் பேசுவோம்.)  மேற்கண்ட படத்தைப் பார்த்த போது என்ன செய்தோம்? தொடர்ந்து ஒரே நிறத்தின் மீது கவனம் செலுத்தினோம் !! ஒரே நிறத்தை  (அலை நீளத்தை) அதிக நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தால், கூடுதல் வெளிப்பாடு (Exposure) காரணமாக, குற