முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு நண்பன் இருந்தால்!!

நண்பர்கள் தினமான இன்று ' ஒரு நண்பன் இருந்தால் '  பாடலை என் நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்! ஒரு நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால் கையோடு பூமியை சுமந்திடலாம் தொடு வானம் பக்கமே தொட வேண்டும் நண்பனே!! நம் பேரில் திசைகளை எழுதலாம் கடலில் நதிகள் பெயர் கலந்தது இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது நட்பு என்பது எங்கள் முகவரி இது வாழ்கை பாடதில் முதல் வரி இந்த உலகில் மிக பெரும் ஏழை நண்பன் இல்லாதவன் ஹேய் (ஒரு நண்பன் இருந்தால்...) தோழ் மீது கை போட்டு கொண்டு தொன்றியதெல்லாம் பேசி ஊரை சுற்றி வந்தோம் வந்தோம் ஒருவர் வீட்டிலே படுது தூங்கினோம் நட்பின் போர்வைக்குள்ளே இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே தோழன் என்ற சொந்தம் ஒன்று தோன்றும் நமது உயிரோடு (ஒரு நண்பன் இருந்தால்...) நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள எண்ணங்கள் எண்ணகள் சொல்ல நண்பன் ஒரே சொந்தம் நமது மேஜையில் உணவு கூட்டணி அதில் நட்பின் ருசி அட வாழ்கை பயணம் மாறலாம் நட்பு தான் மாறுமா? ஆயுள் காலம் தேர்ந்த நாளில் நண்பன் முகம் தான் மறக்காதே! (ஒரு நண்பன் இருந்தால்...) பாடல் குற

வடையை 'சுட்டது' யார்?

சிறப்பு  பட்டிமன்றம் அது.. தலைப்பு:"பாட்டி வடை சுட்ட கதையில் ஏமாந்தது யார்?'" காகம்  தான் ஏமாந்தது என்று மூவரும், இல்லை நரி தான் பாவம் என்று வேறு மூவரும் மிக அழகாக வாதிட்டனர்.. பாவம், யார் கண்ணிற்கும் வடை சுட்ட பாட்டி தெரியவில்லை !! பி.கு: இது எங்கோ எப்போதோ படித்தது!

சாகாவரம்

அவன் கடவுளை நோக்கி கடுந்தவம் இருந்தான்... கடவுள் அவன் முன் தோன்றினார்... "பக்தா!! உன் தவம் கண்டு மெச்சினேன். உனக்கு வேண்டிய வரம் கேள்" "கடவுளே!! எனக்கு சாகா வரம் வேண்டும்" "பக்தா!! நான் பல யுகங்களாக கூறி வருவது போல சாகா வரம் மட்டும் கொடுக்க முடியாது. வேறு ஏதாவது கேள்" "இறைவா!! இந்த பூமியில் தோன்றிய எந்த பொருளாலும்- உயிருள்ளதோ உயிர் அற்றதோ- நான் இறக்க கூடாது" "அப்படியே ஆகட்டும்!! " கடவுள் மறைந்தார்!! அவன் சிரித்தான்.. "எப்படியோ கடவுளை ஏமாற்றி சாகா வரம் வாங்கி விட்டேன். இனி என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது" தூரத்தில் ஒரு விண்கல் அவன் தலையைக் குறி வைத்து வேகமாக வந்து கொண்டு இருந்தது!! 

கடவுள்

 கடவுளைத் தொழுதபின் செதுக்கினான் சிற்பி            கடவுள் இல்லை இல்லவே இல்லை 

மரண மயக்கம்

வேலன் அந்த சாலையைக் கடக்க முயற்சித்த போது ......  அவன் செல்போன் ஒலித்தது .. சாலையைக் கடந்து கொண்டே எடுத்து "ஹலோ " என்றான். அப்போது ..... அவன் எதிரே புயல் வேகத்தில் ஒரு ஆட்டோ ! கிட்டத்தட்ட அவனை உரசிக் கொண்டு சென்றது ... "மவனே வீட்ல சொல்லிட்டு வந்தியா?" ஆட்டோ காரன் கத்திக்கொண்டே சென்றான் எதிரில் காவல் துறை வாசகம் : "சாலையைக் கடக்கும் போது செல்போனில் பேசாதே ..கூப்பிடுவது 'எமன்' ஆக இருக்கலாம் " செல்போன் எதிர் முனையில் இருந்து வந்த குரல் : "ச்ச ... ஜஸ்ட்ல மிஸ் ஆயிட்டான் " வேலன் உறைந்து நின்றான்!! பி.கு: இது இணையத்தில் நான் முதன் முதலாக (வேறொரு தளத்தில்) எழுதிய குறுங்கதை.. சில மாற்றங்களுடன் மீண்டும்!