முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?

ஜூலை இறுதி என்றாலே "சீக்கிரம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்கிற விழிப்பு அனைவரிடமும் இருக்கும்.  அதற்கென இருக்கும் படிவத்தை முழுதும் நிரப்புவது பெரும்பாடு தான்!!            இணையத்தை நாம் பல செயல்களுக்குப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். இணையத்தில் மூலம் நமது வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது (Efiling of income tax returns) என்பதை இந்த பதிவில் பார்ப்போம். வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இணைப்பு: https://incometaxindiaefiling.gov.in/ 1. முதலில் தளத்திற்குச் சென்று உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள் . கணக்கை எப்படி உருவாக்குவது? தளத்தில் வலது பக்கத்தில் இருக்கும் Login என்கிற பகுதியில் இருக்கும் Register என்பதைச் சொடுக்குங்கள். அடுத்து வரும் பக்கத்தில், உங்களது PAN எண்ணை இடுங்கள் (உங்களது PAN எண் தான் உங்களின் கணக்கு! (user id) ) அடுத்து வரும் பக்கத்தில், உங்கள் விவரங்களை உள்ளிடுங்கள்.உங்கள் PAN CARD விண்ணப்பப்படிவத்தில் கொடுத்தது போலத் தான் உங்கள் பெயர் இருக்க வேண்டும். கூடவே, மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.

கணித்தமிழ் அமுதம் மறைவு

வணக்கம் நண்பர்களே!! இந்த பதிவினைப் பல நாட்கள் கழித்து வெளியிடுவதற்கு வருந்துகிறேன். நம் தாய்மொழியாம் தமிழ்மொழி பல நூற்றாண்டுகளாக பல்வேறு பரிணாமங்களுக்கு இடையே தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சிக்குப் பலரும் பல வழிகளில் பங்காற்றினர். அன்று மன்னர்கள் சங்கம் வைத்து முத்தமிழை வளர்த்தனர். இன்றோ, பல கணிணியாளர்களும் மென்பொருட்கள் மூலம் கணித்தமிழை வளர்க்கிறனர். அவர்களுள் மிகவும் முக்கியமான ஒருவர் திரு. ஆண்டோ பீட்டர் அவர்கள்.. இந்த வலைப்பூவினைப் படிக்கிறீர்களே!! அதற்குக் காரணமே அவர் தான்.... தமிழ் எழுத்துருக்களை கட்டற்ற முறையில் (Open source) முதன்முதலில் இலவசமாக உருவாக்கி அளித்தவர் அவர் தான். 1990 களில் கணிணி தமிழகத்தில் அறிமுகமாகிய போது, தமிழில் தட்டச்சு செய்வது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் மட்டுமே, அதற்கென உருவாக்கப்பட்ட கட்டண எழுத்துருக்களைக் கொண்டு  எழுத வேண்டி இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னலம் பாராது, தான் உருவாக்கிய "அமுதம்" என்னும் எழுத்துருவினை இலவசமாக இணையத்தில் வெளியிட்டார் பீட்டர். எனவே, எழுத்துரு பலரைச் சென்

Bigrock.in மூலம் தளம் வாங்கியவரா நீங்கள்? உங்கள் கவனத்திற்கு!!

நண்பர்களே, கடந்த வெள்ளி (29-06-2012) மாலை முதல் (எனக்குத் தெரிந்து!!) எனது வலைப்பூ  தனது பிரதான தளத்தில் இருந்து (http://www.aalunga.in) திறக்கவில்லை.. அன்று மாலை ஒரு பதிவு எழுதி வெளியிட்டேன்.. Facebook, Twitter, Google Plus முதலியவற்றில்  தானாக வெளியிட வகை செய்துள்ளதால், அங்கு வெளியாகிவிட்டன. ஏனைய திரட்டிகளில் இணைக்கலாம் என்று தளத்திற்குச் செல்ல முனைந்த போது தான் பிரச்சனை புரிந்தது. Firefox, Chrome  இரண்டிலும்  ஒரே நிலை தான். ஆனால், அலைபேசி மூலம் (opera mini) நன்றாக பார்க்க முடிந்தது.  Feed மூலம் பதிவுகளைப் படிக்கவும் முடிந்தது. ஆனால், தளத்திற்குச் செல்ல முடியவில்லை. அப்போது இருப்பில் (online) இருந்த "கற்போம்' பலே பிரபு அவர்கள் தனக்கு தளம் திறப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எனது தளம் நன்றாக தெரிவதாகவும் சொன்னார். சில வழிமுறைகளைச் சொன்னார். ஒன்றும் பலனளிக்கவில்லை. ஆனால், தங்கம் பழனி அவர்களும், "அட்ராசக்க" செந்தில்குமார் அவர்களும் தங்கள் தளம் திறக்கவில்லை என்று சொன்னார்கள். ட்விட்டர் நண்பரான கூமுட்டை ( @ kuumuttai ) அவர்களோ தனக்குத் தளம் நன்றாகத