"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்"
இன்றைய இயந்திர வாழ்க்கையில், மன இறுக்கத்தைத் தீர்க்க உதவுவது நகைச்சுவை தான்..
நகைச்சுவையைக் கேட்டு சிரித்தால் மனம் லேசாகிவிடுகிறது..
படித்து மகிழுங்கள்!!
அந்த சர்தார்ஜி லாரியில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார்..
அண்டை நாட்டு அதிகாரி வந்தார்...
"என்னப்பா இருக்கு மூட்டையில?"
"வெறும் மணல் தான் சார்"
"நான் நம்ப மாட்டேன்"
" மெய்யாலுமே மணல் தான் சார்"
அதிகாரி நம்ப வில்லை.. மூட்டையை அங்கேயே பிரித்தார். மணல் தான் இருந்தது!!
பார்த்தும் நம்பிக்கை வரவில்லை. மணல் வடிவில் வேறு எதையும் கடத்தினால்?
மணல் ஆய்வகம் சென்றது!!
முடிவு அது "வெறும் மணல் தான்" என்று கூறியது!!
சர்தார்ஜி அண்டை நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். பாவம், ஆய்வு அது இது என்று அவர் கொண்டு வந்த மூட்டையில் பாதி மணலைக் காணோம்!!
சில நாட்கள் கழித்து மீண்டும் சர்தார்ஜி லாரியில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார். அதிகாரி வந்து சோதனை செய்தார்.. மணல் மூட்டை ஆய்வகம் சென்று "வெறும் மணல் தான்" என்று திரும்பியது!!
சர்தார்ஜி எல்லையைக் கடந்தார், பாதி மணல் மூட்டையுடன்!!
நாட்கள் சென்றன.. சர்தார்ஜி அடிக்கடி பயணம் செய்ய ஆரம்பித்தார். அதிகாரியின் சோதனையும் நிற்கவில்லை.. சர்தார்ஜியும் பாதி மணல் மூட்டையுடன் எல்லையைக் கடப்பார்.
நாட்கள் நகர்ந்து வருடங்கள் கடந்தன..
அதிகாரி ஓய்வு பெறும் நாள் வந்தது!!
சர்தார்ஜி லாரியில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார். அதிகாரி தன் கடமையைச் செய்து அவரை அனுமதித்தார்!!
இன்னும் சில வருடங்கள் கடந்தன..
ஒரு நாள் தற்செயலாக சர்தார்ஜியும் அண்டை நாட்டு அதிகாரியும் சந்தித்தனர்..
நீண்ட நாள் பழக்கம் அல்லவா? இருவரும் ஒரு உணவகம் சென்று அமர்ந்தனர்..
வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு அதிகாரி கேட்டார்:
"எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் உண்டு.. மணலில் பாதியை நாங்களே ஆய்வு என்கிற பெயரில் திருடி விடுகிறோம். மீதி மணலை வைத்து எப்படி பிழைப்பு நடத்துகிறீர்கள்?"
சர்தார்ஜி சொன்ன படிலைக் கேட்டு அதிகாரி திகைத்தார்:
"நான் என்ன மணலையா வித்தேன்...? லாரியைத் தானே!!"
கதை எப்படி?
பி.கு:
இது என் சொந்த கற்பனை அல்ல.. எங்கோ எப்போதோ படித்தது!!அதற்கு வேறு உருவம் கொடுத்து சொல்கிறேன்
நன்றி டேனியல்!
பதிலளிநீக்குIthu Singam padathil varum (Kadathal Lorry)concept thane..
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
பதிலளிநீக்கு//இது என் சொந்த கற்பனை அல்ல.. எங்கோ எப்போதோ படித்தது!!அதற்கு வேறு உருவம் கொடுத்து சொல்கிறேன் //
இதைப் படிக்கவில்லையா நண்பரே??
அந்த படத்தைக் கூட இப்படி நான் கேள்விப்பட்டதை மையப்படுத்தி எடுத்திருக்கலாம்.. நான் கேள்விப்பட்ட கதையில் பைக்!!
அதைத் தமிழ் மன்றத்திலும் பதிவு செய்துள்ளேன்: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26183