முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதியினைத் தலை வணங்குவோம்!




11 டிசம்பர் 2011

சுப்பிரமணி பாரதியார் என்கிற மாபெருங் கவிஞன் பிறந்த நாள். அவரை வாழ்த்தும் அளவு தகுதி எனக்கில்லை.  எனவே , அவரது கவிதை  ஒன்றையே இங்கு பதிந்து அவரை  நினைவு கூறுவோம்!!



பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த ஒருமைப்பாடு இன்று மலிந்து விட்டது. சுதந்திரம் பெறாத அந்த நாட்களில் பாரதி ஒருமைப்பாட்டினை எத்தனை  அழகாக பாடியுள்ளார் என்று பாருங்கள்....

//வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
      மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம்
//

மிகையான நீரைக் கொண்டு பிற நாடுகளில் பயிர் செய்து செழிக்க வைக்கவேண்டும் என்கிறபாரதியின் கனவை என்னவென்று சொல்வது???

ஆனால், இன்று கடலில் கலக்க விட்டாலும் தண்ணீர் தர மாட்டோம் என்று கூவும் மாநிலங்களின் அறிவின்மையை என்னவென்று சொல்வது?

பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்

சரணங்கள்
1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி
      மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள்
      பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.
(பாரத)


2. சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்;
      சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
      மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம்.
(பாரத)

3.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம்
      வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே
      எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம்.
(பாரத)

4.

முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே
      மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே,
நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து
      நம்மருள் வேண்டுவது மேற்கரையி லே
(பாரத)

5.

சிந்து நதியின் மிசை நிலவினிலே
      சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத்
      தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்
(பாரத)

6.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண் டம்
      காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண் டு
      சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம்
(பாரத)

7.

காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான்
      காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர்தமக் கு
      நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம்
(பாரத)

8.

பட்டினில்ஆடையும் பஞ்சில் உடை யும்
      பண்ணி மலைகளென வீ திகுவிப் போம்;
கட்டித் திரவியங்கள் கொண்டு வரு வார்
      காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.
(பாரத)

9.

ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம்சேய் வோம்;
      ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப் போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
      உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.
(பாரத)

10.

குடைகள் செய் வோம்உழு படைகள்செய் வோம்,
      கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய் வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
      ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம்.
(பாரத)

11.

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்;
      வானையளப் போம் கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டு தெளி வோம்;
      சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற் போம்.
(பாரத)

12.

காவியம்செய் வோம், நல்ல காடுவளர்ப் போம்;
      கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம்செய் வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
      உலகத்தொழிலனைத்து முவந்துசெய் வோம்.
(பாரத)

13.

சாதி இரண்டொழிய வேறில்லை'யென் றே
      தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென் போம்;
நீதிநெறி யினின்று பிறர்க்குத வும்
      நேர்மையர் மேலவர்; கீழவர்மற் றோர்.
(பாரத)

சன் டிவியில் முன்பு ஒரு முறை இசைக்கப்பட்ட காணொளி:



இந்த பாடல் பகுதிகள் சில (திரைப்படங்களிலிருந்து):





நன்றி:  லஷ்மண் ஸ்ருதி, Youtube மற்றும் கூகிள்ட்
"சிந்து  நதியின் மிசை நிலவினிலே " காணொளியைத்  தேடி கொடுத்த ராமநாதன்  அவர்களுக்கு  என் சிறப்பு  நன்றிகள்

பி.கு:
இந்த பதிவு பிடித்திருந்தால் திரட்டிகளில் வாக்களியுங்கள்:
தமிழ்10
யுடான்ஸ்
இனிய தமிழ்
வலையகம் 

கருத்துகள்

  1. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு
  3. படித்து மகிழ்ந்த தனபாலன் மற்றும் தமிழ்த்தோட்டம் ஆகியோருக்கு என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும