முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'அம்மா'வுக்கு நேர்ந்த கொடுமை




இது 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு மட்டுமே!!!!!!!!


தமிழ் மொழியில் "அம்மா" எனும் வார்த்தை மிக முக்கியமானது!!



"அம்மா" என்பது தாய்மையின் அடையாளம் மட்டும் அல்ல...
அது பெண்மையின், கருணையின் அடையாளமும் தான்....



"தாயிற் சிறந்த கோயிலும் இல்லை " என்பது ஆன்றோர் வாக்கு!!

இது தமிழர்களாகிய நமக்குத் தெரியும்...

ஆனால், கூகிள் ரோபோவுக்குத் தெரியவில்லை....


கூகிளில் (google) அம்மா என்று தமிழில் தட்டச்சு செய்து தேடுங்கள்..

கிடைக்கும் முதல் சில விடைகள் உங்களை அதிர வைக்கும்...

தங்கை, அக்கா, அத்தை, பெரியம்மா, சித்தி, அண்ணி என நம் தமிழ் வழக்கில் மதிப்பு மிக்க நிலையில் இருக்கும் அனைத்து பெண் வழிச் சொந்தங்களுக்கும் இதே நிலை தான் !!

கூகிள் தற்போது தான் தமிழ் கற்பதாலோ  என்னவோ, பாதுகாப்பான தேடலிலும் (Safe Search) இந்த முடிவுகள் வருகிறன!!!

இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு கூகிள் குண்டா என்று அறியேன்..

பி.கு:
கூகிள் குண்டு (google bomb)
கூகிள் தேடுபொறியில் , ஒரு குறிப்பிட்ட சொல்லைத் தட்டச்சு செய்யும் போது, கிடைக்கும் பதிலகள் அனைத்தும் வேறு ஒரு குறிப்பிட்ட பக்கத்தை சென்றடைவது!!

http://en.wikipedia.org/wiki/Google_bomb

சில நாட்கள் முன்பு வரை, "miserable failure" என்று தேடினால், உடனே முன்னாள் அமெரிக்க குடியரசு தலைவர் ஜார்ஜ் புஷ் பற்றிய செய்திகள் விழும்..
அதே போல, " failure" என்று தேடினால், ஒபாமாவின் செய்திகள் விழும்
தவறான பொருளாதார் கொள்கைகள் காரணமாக அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சி கண்ட சமயம் கடுப்பான சிலர் செய்த வேலை இது!!

இப்போதும் கூட...
"French Military Victories" என்று கூகிள் தேடுபொறியில் தட்டச்சு செய்து "அதிர்ஷ்டம் என் பக்கம் (I am feeling lucky) என்ற பொத்தானை அழுத்துங்கள் .. புரியும்!!

கருத்துகள்

  1. வருத்தமாக உள்ளது நண்பா

    அம்மா என்ற சொல்லுக்கு ஈடு இணை இல்லை .. அந்த வார்த்தை-க்கு இப்படி முடிவுகள் ??? ..


    50 தமிழ் -ரிப்பனை ப்ளாக்கில் இணைப்போம்

    பதிலளிநீக்கு
  2. இத்தகைய பிரச்னைக்குரிய தளங்களை வேரோடு அளிப்போம்.. பகிர்வுக்கு நன்றி..!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...