முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெஸ்டம்பர் (Festember)

9 செப்டம்பர்  2005, வெள்ளிக் கிழமை என்னுடன் இயந்திரவியல் படித்த நண்பர்களால் மறக்க முடியாத நாள்.. அந்த நாள் பெற்ற சிறப்பினை அறியும் முன்னர், சில தகவல்களை அறிவோம்!! திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (National Institute of Technology - NIT, Trichy) அதன் கல்விக்கு மட்டுமன்றி கலை நிகழ்ச்சிகளுக்கும் பெயர் பெற்றது. அந்த கல்லூரி நடத்தும் கலை நிகழ்ச்சி தான் பெஸ்டம்பர் (Festember) - செப்டெம்பர் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வார இறுதியில் நடைபெறும் கலை நிகழ்ச்சி.    இந்திய அளவில் அனைத்து கல்லூரி மாணவர்களும் கூடும் நிகழ்ச்சி என்பதால், அரங்கமே களைகட்டும்.. பெஸ்டம்பர்  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை, பார்க்கவாவது கல்லூரி இளவட்டம் குவிவது வழக்கம்! இப்படி பலராலும் எதிர்பார்க்கப்படும் பெஸ்டம்பர் செப்டம்பர் 8 ஆம் தேதி (2005) துவங்குவதாக தகவல் பலகையில் ஒரு அழைப்பிதழ் தொங்கியது! பார்த்த உடனே அனைவருக்கு மனதிலும் நிகழ்ச்சியைக் காண ஆசை! வெறும் 150 கி.மீ தூரம் எங்களைப் பார்க்க விடாமல் இருக்க செய்து விடுமா? 8 ஆம் தேதி துவக்க விழா.. அன்று பெரிதாக க

மாணவர்களின் பெற்றோருக்கு..

நண்பர்களுடன் ஒன்றாய் அமர்ந்து அரட்டையும் கும்மாளமும் கலந்து நம் அணிக்குக் கைத்தட்டி எதிர் அணிக்கு நகைத்தட்டி ஒவ்வொரு பந்தாய் விவாதிப்பதற்கு மாணவப் பருவம் தவிர்த்து வேறுபருவம் உலகினில் உண்டோ? அதைத் தடுத்தல் நன்றோ? ஆட்டக் காட்சியை பார்க்கவிடில் விவாதிக்கும் பொருள் எதில்? சிறு வாதங்களைத் தடைசெய்வதாலே குழுவிவாதத்தில் பலர் தோற்பதே!! மாணவனாய் இருந்தது விடவே நல்மாதவம் செய்து இடனுமே. மாணவப் பருவம் முடித்து பசிக்கு வேலை எடுத்து தனக்கென வாழ்க்கை அமைத்து பருவம் முற்றி காய்த்து வேலைப் பளுவில் மூழ்கியபின் மட்டை பந்தைத் தான் அதைப் பார்க்கத் தான் நமக்கு நேரம் ஏது? மாணவப் பருவ ஆர்வங்கள் பிறிதொரு நாளில் என்றேனும் கிட்டுமா? மாணவப் பருவ இன்பங்கள் அன்றே நுகரும் பண்டங்கள் பிறிதோரு நாளில் எட்டா.. என்றும் எளிதில் கிட்டா பருவத்திலே பயிர் செய்வோம்.. அப்போதே அறுவடையும் செய்வோம்.. அனைவரும் இதைச் சிந்தியுங்கள் உலகத்தை ஒன்றாய் சந்தியுங்கள் -இப்படிக்கு  மாணவப் பருவத்தைப் படிப்பிலேயே தொலைத்த பின் மீண்டும் கிட்டாதா என்று ஏங்குபவரில் ஒருவன்..

திறப்பு விழா

நகைக்கடை  திறப்பு விழா திறந்து வைக்க  நடிகை அலைக் கடலென கூட்டம் கூட்டத்தின் கூவல் கண் கடைத் திறப்பா நடிகையின் கடைக் கண் திறப்பா

மொழி

26 சூலை 2011 செவ்வாய் அன்று திருவனந்தபுரம் நோக்கி பயணம்...  எனது அலைபேசி இசையை என் காதுகளில் தெளித்துக் கொண்டே இருந்தது.... மாநில எல்லையான களியக்காவிளையைப் பேருந்து நெருங்கத் துவங்கியது....   பெண்ணிடம் காதல் புரிவதற்காக, தமிழ் கற்கும் ஐரோப்பியர்கள் பாடும் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.. (வள்ளியே.. சக்கர வள்ளியே!!)  இடையே அருமையான வரிகள்:   " உன்னைப் பார்த்ததும் ஊரை விட்டு ஆங்கிலம் ஓடிப்போவதென்ன? சீராய் செம்மொழி செந்தமிழ் தான் என் மொழி என்றே ஆனதென்ன? " மிகவும் சிலாகித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்! கேரள எல்லை வந்தது.. பாடலும் முடிந்தது!! எல்லையைக் கடக்கவும் பாடலும் மாறியது.. என் அலைபேசியில் அடுத்து ஒலித்த பாடல்:   ஆஹா... அடடா... பெண்ணே உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் (ஹே) ஆனால் (ஹே) கண்டேன் ஏன் (ஹே) ஓர் ஆயிரம் கனவு (ஹே) கரையும் என் ஆயிரம் இரவு நீ தான் வந்தாய் சென்றாய் என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய் ஓ ஹோ ஓமணப்  பெண்ணே  ஓமணப்  பெண்ணே  ஓமணப்  பெண்ணே  ஓமணப்  பெண்ணே எனது

தாமரையைக் காணவில்லை

ஆண்டு விடுமுறை!! வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. ஏதாவது உருப்படியாக படிக்கலாம் என்று தோன்றியது. "கம்ப்யூட்டர்ல எதாவது படித்தால் பின்னாளில் பயன்படும்" என்று அறிவுரை கூறினார்கள்!! அப்போது கணிணி பரவலாக பிரபலமடைய துவங்கி இருந்த காலம்...  எனது வீட்டின் அருகிலும் ஒரு கணிணி மையம் முளைத்து இருந்தது. அங்கு சென்று எதாவது படிக்கலாம் என்று நினைத்தேன்.. "இங்க கம்ப்யூட்டர் சம்பந்தமாக நிறைய சொல்லிக் கொடுக்கிறோம்ங்க.. டாஸ்,  லோட்டஸ், வேர்ட் ஸ்டார்.." என்று அடுக்கிக் கொண்டே போனார் நிறுவனர் . "இதில் எதைப் படித்தால் பின்னாளில் நல்ல எதிர்காலம்?" என்று அப்பாவியாய்க் கேட்டேன்! "எதைப் படித்தாலும் உங்க எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும்" பள்ளியில் நடத்தப்பட்ட சிறப்பு கணிணி பயிற்சியில் "டாஸ்" படித்து இருந்தேன்.. "லோட்டஸ் என்றால் என்ன சார்?" "அது ஒரு ஸ்ப்ரெட் சீட் தம்பி. டேட்டா வச்சு நிறைய கணக்குகளை எளிதா போடலாம். நம்ம டேட்டாவை வச்சு கிராப் கூட வரையலாம்" வேர்ட் ஸ்டார் என்பது தட்டச்சு செய்ய உதவும் ஒரு மென்பொர

பயணங்கள் முடிவதில்லை

வாழ்க்கை எனும் ஓடம் தன் பயணத்தைத் தொடர்ந்த படியே உள்ளது. பயணம் செய்பவர்களைப் பற்றி என்றும் கவலைப்படுவதில்லை!! பயணத்தின் வழிகளில் மென்மையான அலைகளின் தீண்டலும் உண்டு; அதே சமயம், மிகவும் ஆபத்தான புயல்களும் உண்டு. ஓடத்தில் இருப்பவர்கள் அவற்றால் பல்வேறு மனநிலைகளில் இருக்கலாம்.. ஆனால், ஓடம் அவை அனைத்தையும் கடந்து செல்கிறது. அவற்றைக் கடந்த சுவடுகளே சில சமயம் தெரிவதில்லை! இந்த பயணத்தின் போது இனிய இன்பங்களும், கொடிய துன்பங்களும், மறக்க முடியாத நிகழ்வுகளும், மறக்கக் கூடாத அனுபவங்களும் அனைவருக்கும் ஏற்படுகிறன. ஆனால், ஓடமோ அவற்றை சிறிதும் லட்சியம் செய்யாமல், தன் வழியில் சென்று கொண்டே இருக்கிறது.. சுற்றி நிகழும் நிகழ்வுகளின் தாக்கம் சற்று இருந்தாலும், வாழ்க்கை ஓடம் அவற்றால் பெரிதாக பாதிக்கப்படுவதில்லை. தன் இலக்கை நோக்கிய அதன் பயணமும் முடிவதில்லை. அதன் இலக்கை அறிந்து கொள்ள முயல்வது கடினம். அறிய முற்பட்டவர்கள் அறிய முடிந்தது இல்லை. அறிந்தவர்கள் யாரும் நம்மிடையே இல்லை. இலக்கின் தன்மையைப் பற்றி விவாதிப்பவர்கள் தான் உண்டு. ஆனால், வாழ்க்கை எனும் ஓடம் விவாதங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அதன

மூன்றாவது ரேங்க்!

17 வருடங்களுக்கு முன்பு... இதே நாள் (13 ஜூலை 1994).. நான் நான்காம் வகுப்பு என்ற பெரிய படிப்பு படித்த காலம்... வகுப்பறைக்குள் ஆசிரியை  உள்ளே நுழைந்தார்... "யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே" என்பார்களே.. அது போல, முன்னால் எங்கள் டீச்சர் கையில் ரிப்போர்ட் கார்டு கொண்டு வந்தார்... பின்னாலேயே,ஸ்கேலும்  வந்தது!! எங்கள் ரிப்போர்ட் கார்டுக்கும், ஸ்கேலிற்கும்  ஒரு தொடர்பு   உண்டு.. கார்டில் எத்தனை சிவப்பு கோடுகள் உண்டோ அத்தனை சிவப்பாக உங்கள் கைகள் மிளிர ஸ்கேல் உதவி செய்யும்!! எங்கள் டீச்சருக்கு ஒரு பழக்கம் உண்டு... முதலில், நான்காம் ரேங்க் முதல் பாஸ் ஆனவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர்.. அதன் பிறகு,  பெயில் ஆனவர்களுக்கு அதகளம் ஆரம்பிக்கும். இறுதியாக, முதல் மூவர். நான் ஏனோ தானோ ரகம் தான்... எப்பாடுபட்டாவது பாஸ் ஆகிடுவோம்.. ஆனா, ரேங்க் எல்லாம் கேட்டா ரேகிங் தான் நடக்கும்.. என்ன ஓகேவா? அழைப்பு ஆரம்பமானது... அனைவரும் கார்டு வாங்க வாங்க  மனதுக்குள் போராட்டம் அதிகமானது... நம்ம வீட்டு அம்மா அப்பாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாததா... இங்கும் ஒரு தொடர்பு உண்டு...