முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறியீடு (சவால் சிறுகதைப் போட்டி 2011)

யுடான்ஸ் திரட்டி குழுமம் (ஆதி மற்றும் பரிசல் அவர்களுடன் இணைந்து) நடத்தும் "சவால் சிறுகதைப் போட்டி 2011"  போட்டிக்காக எழுதப்பட்டுள்ள கதை சவால் சிறுகதைப் போட்டி 2011 குணா விஷ்ணுவின் அழைப்புக்காக எதிர்பார்த்து காத்து இருந்தான்.. அவன் எதிர்பார்த்த மாதிரியே,விஷ்ணு அழைத்தான்.. அலைபேசி "Vishnu Informer" என்று சிமிட்டியது.   "குணா.. நான் சொன்னபடி செஞ்சுட்டியா?" "எல்லாம் ரெடி.." "சரி... ரெண்டையும் தனித்தனியா கவர்ல போடு.. ஒண்ணு கோகுலுக்கு இன்னொன்று மாதவனுக்கு.. கவனம் " "ஓகே" "இன்னும் கொஞ்ச  நேரத்தில அங்க கோகுல் வருவான்!! அவன்கிட்ட ரெண்டையும் குடுத்து விடு" குணாவிற்குத் தலை  சுற்றியது... இரண்டையும் கோகுலிடம் கொடுத்தால்?? "தெரிஞ்சு தான் பேசறியா?? " "ஆமா...ரெண்டையும் அவன்கிட்ட கொடு.. மாதவனுக்கு உள்ளதை மாதவன்கிட்ட கொடுத்துட சொல்லு" "சரி.. உன் இஷ்டம்"  அரை மணி நேரத்தில் கோகுல் வந்தான்.. அவனிடம் இரண்டு கவர்களையும் குணா ஒப்படைத்தான்... "விஷ்ணு ஏதும்?" "

தீபாவளி இரவினில் இந்தியா (நம்பாதீங்க - பகுதி 1)

நம்பாதீங்க......  (பகுதி 1) இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது.. இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு... மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது.. ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்... மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன... இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு.. பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்... பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!! பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதியனவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன.. அவற்றைப் பற்றி அலசுவதே  இந்த (சிறு) தொடரின் நோக்கம்.. தீப ஒளித்திருநாளாம் தீபாவளியை அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி இருப்பீர்கள்!! நேற்று (26/10/2011) பலரது அஞ்சலுக்கும் (அல்லது முகநூல்/ ட்விட்டர்) ஒரு படம் வந்திருக்கும்.. இந்தியா தீபாவளி இரவினில் எப்படி ஒளிர்கிறது என்று நாசா எடுத்த புகைப்படம்:  சரி, உண்ம

மாசற்ற தீபாவளி கொண்டாடுவோம்

தீப ஒளித் திருநாள்.. பண்டைய காலத்தில் தீபங்களின் மூலம் ஒளியை வரவேற்ற நாள் இது. எனவே தான் "தீப ஒளி" என்று கொண்டாடத் துவங்கிய பண்டிகை இன்று தீபாவளி என்று மருவிக்கிடக்கிறது (அசுரனை அழித்த பண்டிகை என்பதில் எனக்கு உடன்பாடில்லை!) எந்த ஒரு நடைமுறை என்றாலும், சமகால மனிதருக்கும், வருங்காலச் சந்ததியினருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்றால், அந்நடைமுறைகளை மாற்றுவதில் தவறில்லை  அல்லவா!! பண்டிகைகள் என்றாலே புத்தாடை அணிந்து பலகாரம் உண்டு பிறருடனும் பகிர்ந்து மகிழ வேண்டிய நாளன்றோ!! தீப ஒளித்திருநாள் அன்றோ பலரும் பட்டாசுகளைக் கொளுத்தியும் நம் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கிறோம். ஆனால், பட்டாசு கொளுத்துவதால் ஏற்படும் தீங்கினை யாரும் யோசிப்பதில்லை.. பட்டாசுகள் தீபாவளி அன்று மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், அவற்றால் பின்னாளில் பல கேடுகள் காத்து இருக்கிறன. பட்டாசில் கந்தகம், நைட்ரேட் போன்றவற்றுடன் காப்பர், மெர்க்குரி, அமோனியம் போன்ற உலோகங்களும் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் சுவாசம் தொடர்புடைய பல நோய்கள் ஏற்படுகிறன. பட்டாசு வெடிக்கையில் திடீரெனக் கேட்கும் அதீத ஒலி, கேட்கும் திற

கடவுளே!

சில வருடங்களுக்கு முன்பு நடந்த கதை... பத்தாம் வகுப்பு இறுதித் தேர்விற்குச் சில நாட்கள் முன்னர்.. அன்று தான் பள்ளியில் அனைவருக்கும் நுழைவுச்சீட்டு கொடுத்து இருந்தனர்.. பயபக்தியோடு என் அப்பாவிடம் கொடுத்தேன்... " பரிட்சை ஹால் டிக்கெட்டா? நல்லது.. நல்லது... எல்லாரும் இந்த ஞாயிற்றுக் கிழமை நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போய் வேண்டிகிட்டு வருவோம்" " இல்லப்பா... ஸ்டடி லீவ் கொஞ்சம் நாள் தான் குடுத்து இருக்காங்க... படிக்கணும்" " பரவாயில்லைப்பா... நாம் காலையில சீக்கிரமா கிளம்பி போய்ட்டு ரெண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடலாம்" " இல்லப்பா.." "அரை நாள் படிக்கலைனா ஒண்ணும் ஆகாது.. நீ தான் சில நாள் நைட் முழிச்சு படிப்பல? அப்படி படி" அதற்கு மேல் உண்மையை மறைக்க முடியவில்லை... "அப்பா... இந்த ஞாயிற்றுக் கிழமை சக்திமான் இருக்குப்பா... சக்திமானுக்கும், தன்ராஜ் கில்விஷருக்கும் சண்டைப்பா" "அதானே பார்த்தேன் என்னடா பையன் படிப்பில ரொம்ப ஆர்வமா இருக்கான்னு... ஏண்டா சாமியை விட சக்திமான் உனக்கு அதிகமா மார்க் வாங்கி கு

உபுண்டு 11.10 - மாற்றங்களின் ஆரம்பம்

உபுண்டு (Ubuntu) என்கிற ஒப்பற்ற இயங்கு தளத்தின் அருமை பெருமைகளை அதனை பயன்படுத்துபவர்கள் அறிவர்!! திறமூல இயங்குதளங்களில் ஒன்றான உபுண்டுவின் முக்கிய சிறப்பம்சங்கள்: விண்டோஸ் தளத்தில் இருந்தே நிறுவ முடியும்.  எந்த மென்பொருளையும் அதிக சிரமம் இன்றி எளிதாக நிறுவவும், பயன்படுத்தவும் முடியும்.  MP3 முதலிய காப்புரிமை பெறப்பட்ட கோடெக் போன்றவற்றுக்கும் நல்லதொரு ஆதரவு தருகிறது. (சில வகை லினக்ஸ் இயங்குதளங்களில் இது கடினம்!) மிகவும் முக்கியமான சிறப்பம்சம்- கணிணி உங்கள் தாய் மொழியில் உங்களுடன்  உரையாடும் (விண்டோஸ் தளத்தில் இதனைப் பெற எவ்வளவு கடினம் என்பதை பயனாளர்கள் அறிவர்)   "பாமரர்களின் லினக்ஸ்" என்று புகழ் பெற்ற உபுண்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை  ஒரு புதிய பதிப்பை வெளியிடுவது வழக்கம்.. 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் வெளியான பதிப்பு தான் உபுண்டு 11.10 ஒவ்வொரு பதிப்பிற்கும் வித்தியாசமான ஒரு பெயர் இடுவது உபுண்டு குழுவின் சிறப்பு. உபுண்டு 11.10 Oneiric Ocelot என்று பெயரிடப்பட்டு உள்ளது.. உபுண்டு 11.10 Oneiric Ocelot பதிப்பின் சிறப்பம்சங்கள்: மிகவு

படிக்காத மேதை

படிக்காத மேதை அவர் படிக்கட்டாய் நின்று பலரைப் படித்திட வைத்தவர் கல்விக் கண் திறக்க பள்ளித் திட்டம் தீட்டிட அள்ளித் தெளித்தவர்! பசியோடு பள்ளி வந்தவர்கள் புசித்து படித்திட செய்து ரசிக்க செய்தவர் முதல்வனாய் ஆண்ட போதும் முதல்வானாய் பதவியிலே இருக்காமல் முதல்வனாய் விலகியவர். தாயே ஆனாலும் சரிதான் வாய் மாறாது - அரசின் பாய் கிடையாது! அவர் தான் கர்மவீரர் காமராஜர்

சிரிக்கும் காந்தி

அத்தனை முகங்களையும் பார்த்து அழகாய் சிரிக்கிறார் காந்தி அகிம்சை வழியில் சுதந்திரம் அதனை விற்கும் தந்திரம் அமைதியின் பெயரில் போர் அதற்கு ஆய்தம் விற்போர் கருப்பு வெள்ளையென பணம் பெற்றும் மகிழவில்லை மனம் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை இருப்பினும் தேடல்கள் முடியவில்லை! பி.கு:  இதனை கவிதை என்கிற பெயரில் வெளியிடுகிறேன். "இது ஒரு கவிதையா" என்பது போல் இருந்தால் மன்னிக்கவும்!!