முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டிலஸ் மூலமும் வட்டில் எழுதலாம்! (உபுண்டு)

அண்மைக் காலங்களில் , விரலிகளின் (USB Drive) பயன்பாடு அதிகரித்துள்ளது . எனினும் , குறுவட்டு (CD) மற்றும் இறுவட்டு (DVD) ஆகியவற்றின் தேவை இன்னும் குறையவில்லை .   லினக்ஸ் பயனாளர்கள் பலரும் வட்டில் தரவுகளை எழுத பிராஸரோ (Brasero) , K3B போன்ற பயன்பாடுகளையே பயன்படுத்துகிறோம் .  ஆனால் , நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாட்டிலஸ் கோப்பு மேலாளர் (Nautilus File Manager) மூலம் இதை எளிதாகச் செய்யலாம் தெரியுமா ? எப்படி செய்வது ? நாட்டிலஸ் மேலாளரில் மெனுப்பட்டியலில் உள்ள Go→Location என்பதற்குச் செல்லுங்கள் . தோன்றும் முகவரிப்பட்டையில் (Address bar), burn:/// என்று உள்ளிட்டு Enter விசையை அழுத்துங்கள் . உடனே , வட்டு உருவாக்கி (CD/DVD Creator) திறக்கும் . அதில் , தேவையான கோப்புகளை இடுங்கள் .   கோப்புகளை இட்ட பின் , “Write To Disc” என்பதைச் சொடுக்குங்கள் . திறக்கும் உரையாடல் பெட்டியில் (Dialog box), தகுந்த வட்டைத் தேர்வு செய்யுங்கள் . வெற்று வட்டு எனில் , Blank Disc என்பதைத் தேர்ந்தெடுங்கள் . பிம்பமாக (Image)

யாரது யாரது? (கண்ணை நம்பாதே #1 )

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்  நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது உங்கள் கண்களுக்குக் கொஞ்சம் விளையாட்டு காட்டுவோமா? கீழ்காணும் படத்தில் தெரியும் பெண்ணின் மூக்கில் உள்ள சிவப்பு புள்ளியை தொடர்ந்து 30 - 40 வினாடிகள் உற்று நோக்குங்கள். கண்களை வேகமாக வெற்றிடம் நோக்கித் திருப்புங்கள் (சுவர் / வெள்ளைத் தாள் / புது தத்தல்) கண்களை வேகமாக இமையுங்கள்.   இப்ப என்ன தெரிகிறது? அந்தப் பெண் உங்கள் கண்களுக்குத் தெரிகிறாரா? சரி, இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது? நீங்கள் கண்ட தோற்ற மயக்கம் ஒரு ஒளியியற்கண்மாயம் (Optical Illusion)  ஆகும்.  இதற்கு 'எதிர்மறை பின் தோற்றம்' (Negative After Image) என்று பெயர். கண்களில் உள்ள ஒளி உணர்விகளின் ( Photoreceptors) துணைக் கொண்டே வண்ணங்களின் கலவையான உலகினை நம் கண்கள் காட்டுகிறன (இவற்றைப் பற்றி பிறிதொரு நாள் பேசுவோம்.)  மேற்கண்ட படத்தைப் பார்த்த போது என்ன செய்தோம்? தொடர்ந்து ஒரே நிறத்தின் மீது கவனம் செலுத்தினோம் !! ஒரே நிறத்தை  (அலை நீளத்தை) அதிக நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தால், கூடுதல் வெளிப்பாடு (Exposure) காரணமாக, குற

இரட்டைச் சூரியன்களைச் சுற்றும் இரட்டைக் கோள்கள் (மெய்யாலுமே நம்புங்க!)

ஒரு இனிய காலைப் பொழுதில் வானத்தில்  இரண்டு சூரியன்களை பார்த்தால் எப்படி இருக்கும் ? உண்மையில் அப்படி இரு சூரியன்கள் தெரியும் கோள்கள் உண்டு!! அமெரிக்காவில் உள்ள  நாசா ஆராய்ச்சி நிறுவனத்தால் "உயிர் வாழ தகுதியான கோள்கள் தேடல்" என்ற ஆய்வுக்காக கெப்லர் (Kepler) என்ற விண்கலன் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கெப்லர் விண்கலம் கண்டறிந்தது தான் இந்த அதிசயத்தக்க உண்மை!! ஒரு சூரியனைச் சுற்றும் கோள்களைக் கொண்ட சூரிய குடும்பங்களையோ ( Multi-planet systems)   , அல்லது  இரு சூரியன்களைச் சுற்றும் ஒரே கோளையோ (Circumbinary planetary system) கொண்ட சூரிய குடும்பங்களையோ தான் இதுவரை கெப்லர் கண்டறிந்துள்ளது.   தற்பொழுது  கெப்லர் கண்டறிந்துள்ள சூரிய குடும்பம் மிகவும் வினோதமானது! அதில் இரண்டு சூரியன்கள் இருப்பது விசித்திரமல்ல! இரட்டைச் சூரியன்களை இரண்டு  கோள்கள் சுற்றுவது தான் அதிசயம்!! அந்த கண்கொள்ளாக் காட்சி எப்படி இருக்கும்? ஒரு ஓவியரின் கற்பனை இதோ:   என்ன நண்பர்களே? ' நம்பாதீங்க ' படித்து படித்து இதை நம்ப மனம் மறுக்கிறதா? ஆனா, மெய்யாலுமே இதை நம்பலாம்!!   இந்தத் தக

செவ்வாய் கிரகத்தில் இரட்டை சூரியன்கள் (நம்பாதீங்க - பகுதி 13)

சமீபத்தில், நாசா அனுப்பிய கியூரியோசிட்டி தரையுளவி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக  தரையிறங்கியதை அறிந்திருப்பீர்கள். கியூரியோசிட்டி படங்களாக எடுத்து தள்ளுவதாக ஏற்கனவே சொல்லியிருந்தேன். அப்படி அனுப்பிய படம் ஒன்றைப் பார்த்த நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.  பல வானியலாளர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறனர். படத்தைப் பார்த்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். என்ன? ஆச்சரியமாக இருக்கிறதா? செவ்வாய் கிரகத்தில் தெரியும் இந்த இரட்டை சூரியன்கள் தான் தற்போதைய சூடான சர்ச்சை (Hot topic). என்னங்க? நீங்களும் ஆராயப் போறீங்களா? கொஞ்சம் பொறுங்க!! யாரோ சும்மா விளையாட்டுக்குச் செய்த படம்!!! இது தான் சமீப காலத்தில் அதிகமாக பரப்பப்படும் படம்.  உண்மை படத்தின் பிண்ணனியில் இருக்கும் மலை / மேடு  ஆகியவை மெய்யாலுமே செவ்வாயில் உள்ளவை தான். (நம்புங்க!!). இந்தக் காட்சியை நாசாவின் தளத்திலும் காணலாம்.   இந்தப் படம் கூட கியூரியோசிட்டி எடுத்ததல்ல! 2005 மே 19 அன்று மாலை (செவ்வாய்), நாசா அப்போது அனுப்பியிருந்த ஸ்பிரிட் தரையுளவி (NASA's Mars Exploration Rover Spirit )

இந்திய ரூபாயினைக் கணிணியில் உள்ளிடுவது எப்படி?

நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய சுதந்திர திருநாள் வாழத்துகள்!! இந்த இனிய நாளில், நமது இந்திய ரூபாயின் குறியீட்டைப் பற்றி அறிந்து கொள்வோமா? இந்திய அரசு 15 ஜூலை 2010 அன்று தனது ரூபாய் பண மதிப்பைக் குறிப்பதற்கு என தனியே ஒரு சிறப்பு குறியீட்டைக் கொண்டு வந்தது . இதன் மூலம் , ரூபாய் மதிப்பைப் பயன்படுத்தும் பிற நாடுகளிடம் ( பாகிஸ்தான் , இலங்கை , நேபாளம் ) இருந்து தனது மதிப்பை வேறுபடுத்திக் காட்டியது . கணிணிகளில் இந்திய ரூபாய்: விண்டோஸ் (Windows Vista/ Windows 7) : தற்போது  யூனிக்கோடு எழுத்துருவில் (Unicode-6) இந்திய ரூபாய் நாணயம் இடம் பெற்றுள்ளது. எனவே, எல்லா எழுத்துருக்களிலும் (Font) ரூபாய் வடிவத்தை எழுதலாம்.  நிறுவுவதற்கு: மைக்ரோசாப்ட் ஆதரவு பக்கம் சென்று, தகுந்த கோப்பைத் தரவிறக்கிக் நிறுவிக் கொள்ளுங்கள்.  எழுதுவதற்கு: கீழ்காணும் வரிசையினை அடித்தால், இந்திய ரூபாய் வடிவம் கிடைக்கும்: 20B9 + Alt + x  விண்டோஸ் XP: நிறுவுவதற்கு:   கொஞ்சம் பழைய வழி தான்.. முதலில், Foradian தளம்   சென்று,கோப்பைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள். கோப்பின

நிலா அது வானத்து மேலே (நம்பாதீங்க - பகுதி 12)

சூரிய உதயமும், மறைவும் காண்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.படத்தில் நீங்கள் காண்பது, பூமியின் வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம் . நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!! கொஞ்சம் பொறுங்க.. வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம் உண்மையில் இப்படித் தான் இருக்குமா?இங்கு அலசுவோம்!                          சூரிய உதயமும், மறைவும் காண்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். பூமியின் வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம் இப்படித் தான் இருக்கும்!! இதைக் காண கண்கோடி வேண்டும்... பார்த்து மகிழுங்கள்... படத்தில் நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!!  என்ன நண்பர்களே!! சூரிய அஸ்தமனம் எப்படி? ரொம்ப நல்லா இருக்கா!! ஆனால், இது உண்மை இல்லை!! ஏன்? மேலும் படிங்க!! உண்மை உண்மையில் இப்படி இது ஒரு புகைப்படமே அல்ல... ஒட்டுவேலையோ என்று நினைக்கிறீர்களா? அதுவும் இல்லை... இது இங்கா நீல்சன் (Inga Nielsen) எனும் ஓவியரால் வரையப்பட்ட அழகிய ஓவியம்!! (படத்தின் கீழே பாருங்கள்.. கருப்பு பட்டியில் அவர் பெயர் இருக்கும்!!) இது நாசாவால் "இன்றைய வானியல் படம்" என்று 2006 ஆம் ஆண்டு வ

செவ்வாய் கிரகத்தில் கியூரியோசிட்டி தரையுளவி [Curiosity Rover]

  நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியோசிட்டி  தரையுளவி (Curiosity  Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது. 06 ஆகஸ்ட் 2012 அன்று கேல் எரிமலைப்பள்ளத்தாக்கில்(Gale Crater) இறங்கியது. அதன் சிறப்பம்சம் என்ன? எப்படி செவ்வாயின் பரப்பை அடைந்தது? அதன் திட்டக் நோக்கம் என்ன? என்ன விதமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது? செவ்வாயில் உயிர்கள் இருப்பைப் பற்றி எதுவும் கண்டறியுமா? சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர்  நாசா விஞ்ஞானிகள். நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய Curiosity என்கிற தரையுளவி (Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததாம். புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம். அந்த படங்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து புதிது புதிதாக அப்லோட் செய்கிறதாம்.. அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்து தனது ஸ்டேடஸை அப்டேட் செய்கிறதாம் (பேஸ்புக்கில் அல்ல!) !!    2011 ஜூலையில் நாசா த