முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும

மணல் மூட்டை- நகைச்சுவை

"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்" இன்றைய இயந்திர வாழ்க்கையில், மன இறுக்கத்தைத் தீர்க்க உதவுவது நகைச்சுவை தான்.. நகைச்சுவையைக் கேட்டு சிரித்தால் மனம் லேசாகிவிடுகிறது.. படித்து மகிழுங்கள்!! அந்த சர்தார்ஜி லாரியில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார்.. அண்டை நாட்டு அதிகாரி வந்தார்... "என்னப்பா இருக்கு மூட்டையில?" "வெறும் மணல் தான் சார்" "நான் நம்ப மாட்டேன்" " மெய்யாலுமே மணல் தான் சார்" அதிகாரி நம்ப வில்லை.. மூட்டையை அங்கேயே பிரித்தார். மணல் தான் இருந்தது!! பார்த்தும் நம்பிக்கை வரவில்லை. மணல் வடிவில் வேறு எதையும் கடத்தினால்? மணல் ஆய்வகம் சென்றது!! முடிவு அது "வெறும் மணல் தான்" என்று கூறியது!! சர்தார்ஜி அண்டை நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். பாவம், ஆய்வு அது இது என்று அவர் கொண்டு வந்த மூட்டையில் பாதி மணலைக் காணோம்!! சில நாட்கள் கழித்து மீண்டும் சர்தார்ஜி லாரியில் ஒரு மணல் மூட்டையுடன் எல்லையில் நின்றார். அதிகாரி வந்து சோதனை செய்தார்.. மணல் மூட்டை ஆய்வகம் சென்று &qu

ராமனால் ஏற்பட்ட விளைவு

10 டிசம்பர் 1930 ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.. அன்று நோபல் பரிசு வழங்கும் தினம். அப்போது,  அங்கு ஒரு இந்தியரும், அவரது மனைவியும் வந்து சேர்ந்தனர்.. வந்திருந்த பலரும் அவர் ஏதோ  இலக்கியத்திற்குப் பரிசு வாங்க வந்தார் என்றே  நினைத்திருந்தனர்.. ஆனால்... நடந்ததோ வேறு.. இயற்பியல் துறைக்கான நோபல் பரிசிற்கு அவர் அழைக்கப்பட்டார்.. வந்திருந்த பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். பின்னே, மேலை நாட்டைச் சேராத ஒருவர் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெறுவதென்றால் சும்மாவா?!! அறிவியல் துறையில் சிறந்து விளங்கியமைக்கு நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியரே அவர் தான் !!! அவர் தான் சர்.சி.வி ராமன்.. அந்த ஆண்டு நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படவர்களில் பலரும் அணுக்கள் தொடர்பாகவே ஆராய்ந்திருந்தனர். ஒளியைப் பற்றி ஆராய்ந்தவர் இவர் ஒருவர் தான்.. அது (இன்றும் தான்), அணுக்கள் ஆபத்தானவை என்று அறியப்பட்ட  காலம். நோபல் அறக்கட்டளையின்  கொள்கைப்படி,  நோபல் பரிசு அமைதியான வழியை நாடும் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட வேண்டும். அத்துடன், கண்டுபிடிப்பு அனைவராலும் பயன்படுத்தக்க

இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள்????

சமீபத்தில் நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்த இணைப்பு இது. இந்த காணொளியைப் பார்த்ததும், படைப்பின் விந்தைகளைக் கண்டு வியந்தேன்.. நீங்களும் இதைப் பாருங்கள்: இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள்- கடவுள் இல்லையென்று? பார்த்த பின் உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்!!

பலரும் மறந்த தந்தை

  இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா???    தொடர்ந்து படியுங்கள்..... அக்டோபர் 2011 இந்த மாதத்தை இன்றைய நவீன உலகில் பலரும் மறக்க மாட்டர். காரணம், இந்த மாதத்தின் 5 ஆம் நாள் அன்று தான் (5 அக்டோபர் 2011) ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார். அவரது மறைவிற்கு பல தொழில்நுட்ப நிபுணர்களும், ஊடகங்களும் பல்வேறு வகைகளில் இரங்கல் தெரிவித்துஅவரை வணங்கின. ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்நுட்பத் துறையில் ஒரு பிதாமகர் என்பதில் எந்த இரு வேறு கருத்துக்கும் இடம் இல்லை.. அதன் பிறகு, சில நாட்களிலேயே கணிணித்துறையின் மிகப்பெரும் பிதாமகர் ஒருவரும் இயற்கை எய்தினார். ஆனால்  அவரை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. சில ஊடகங்கள் சிறு பத்தியில் அவரைப் பற்றிய செய்தியை வெளியிட்டுத் தங்கள் கடமை  முடிந்து விட்டதாக நினைத்து விட்டன. அவர் ............... கணித்தல் துறையின் தந்தை தென்னிசு இரிட்சி அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா? அதற்கு முன்பு  C மொழியைப் பற்றிப் பார்ப்போம்!! இன்று பல கணிணி பயன்பாடுகள் இயங்க அடித்தளமாக இருக்கும் நிரலாக்க மொழி