முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படை எடுக்காத ஒரே நாடு (நம்பாதீங்க - பகுதி 9 )

நமது இந்திய தேசத்தைப் புகழ்ந்து பலரும் பல செய்திகள் எழுதுவர். அப்படி யாரோ எழுதிய இந்த செய்தி தான் பலராலும் இந்தியாவின் பெருமையைப் புலப்படுத்த பரப்பபடுகிறது: இந்தியா என்கிற தேசம் தனது 10,000 ஆண்டு வரலாற்றில் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை  இது உண்மையல்ல என்பதை சில வரலாற்று ஆய்வாளர்கள் அறிவர். உண்மை பன்னெடுங்காலமாக இந்திய தேசத்தின் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் பல நாடுகளின் மேல் போர் தொடுத்து இருக்கிறனர் (இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைக் கணக்கில் சேர்க்காமலேயே சொல்கிறேன்).. மிக எளிதான உதாரணங்களைத் தமிழ் மன்னர்களிடத்திலேயே காணலாம்: இராசராச சோழன் இலங்கையின் மீதும், மாலத்தீவின் மீதும் படையெடுத்து வெற்றி கண்டவன் 'கடாரம் கொண்டான்' எனப் புகழ் பெற்ற இராசேந்திர சோழன் தற்போதைய மலேசியா (ஸ்ரீவிஜயம்), இந்தோனேசியா (இலாமுரி தேசம்) ஆகியவற்றின் மீது படையெடுத்து கைப்பற்றினான். இந்தியா என்கிற தேசமே ஆங்கிலேயர் வந்த பின் தான் உருவானது. எனவே, 'இந்தியா என்கிற தேசம் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை' என்று சொன்னால் அது சரியே!! என்பவர

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

கடோத்கஜன் போன்ற இராட்சதர்களின் எலும்புக் கூடுகள் (நம்பாதீங்க - பகுதி 8 )

புராணக்கதைகளில் ராட்சதர்கள் பற்றிய கதைகளைப் படித்திருப்போம். அவர்கள் மனிதர்களை விட மிக உயரமாவும், திடமாகவும் இருந்ததாக இருக்கும். வேதங்கள் அசுரர்களை ராட்சதர்களாக சித்தரிக்கிறன. பீமனின் மகன் கடோத்கஜன் கூட ராட்சதன் தான்.. அப்படிப் பட்ட ராட்சதர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா?அதற்கு எதுவும் ஆதாரம் உண்டா? இதோ இந்த எலும்பு கூடுகள் உங்களுக்குப் பதில் சொல்லும்!!                                                                                                                          மகாபாரதத்தில் வருகின்ற வீர கதா நாயகர்களில் ஒருவன் கடோத்கஜன். இவன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான வீமனுக்கும் இடும்பி என்கிற அரக்கிக்கும் பிறந்தவன். இவன் மலை போன்று உயரமான பிரமாண்ட உடலை கொண்டவன் என்று சித்திரிக்கப்படுகின்றான். ஏன் இந்த பீடிகை என்று யோசிக்கின்றீர்களா? கடோற்கஜன் போன்ற அரக்கர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா? என்று நீங்கள் கேள்வி எழுப்பக் கூடும். ஆனால் நம்ப முடியாத உண்மை ஒன்று நிகழ்ந்து உள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் வட இந்தியாவில் உள்ள சிறிய பாலைவனம் ஒன்றில் தேசிய புவியியல் ஆய்வு  (National

அணுத் தமிழ்

“பழையன கழிதலும் புதியன புகுதலும்  வழுவல கால வகையினானே”                                                                - நன்னூல் மொழிகளின் தொன்மைக்குச் சான்றே அவற்றின் பழம்பெரும் இலக்கியங்ளே . எனவே , அவற்றிற்கு " பழையன கழிதல் " என்பது பொருந்தா . ஆனால் , மொழிகளின் உய்விற்கு புதியன புகுதல் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் . பண்டைய மொழிகளின் தற்கால நிலை : ஆசியா , ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்கள் மட்டுமே அறியப்பெற்றிருந்த காலங்களில் உலகில் கோலோச்சிய பண்டைய மொழிகள் ஆறு என்று மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகிறனர் . அவை தமிழ் , சமஸ்கிருதம் , சீனம் , கிரேக்கம் , இலத்தீன் மற்றும் எபிரேயம் (ஹீப்ரு) ஆகியன .   இவற்றில் , இலத்தீன் மொழி சமஸ்கிருதமும் வழக்கொழிந்து போய் பிரார்த்தனைக்கு மட்டுமே பயன்படுகிறன . கிரேக்கமும் , ஹீப்ருவும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது மீண்டிருக்கிறன . சீனமோ தன்னைப் படையெடுத்து வந்தவர்களிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டது . பல்வேறு படையெடுப்புகளையும்

உபுண்டு 12.04 (Precise Pangolin)- என்ன புதுசு?

'உபுண்டு' என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு? உபுண்டு ஒரு  இயங்குதளம் ஆகும் (Operating System). விண்டோஸ் இயங்குதளம் போல அல்லாமல், இது ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும் ( Open Source software). இதனைப் பயன்படுத்த நீங்கள் கட்டணம் கட்டவோ, தவறாக நகலெடுக்கவோ தேவையில்லை. இலவசமாக பயன்படுத்தலாம்!!!  இலவசம் என்றால், ஏதாவது குறை இருக்குமோ? பயன்படுத்திப் பாருங்க!! விண்டோஸ் இயங்குதளத்தை விட இது எவ்வளவு மேல் என்பதை நீங்களே உணர்வீர்கள்!! இனி கட்டுரை  .......................................................................................................................................... உபுண்டு 12.04 இ தோ வெளிவந்து விட்டது . வழக்கமாக வெளிவரும் வழு நீக்கல்கள் (Bug Fixes) மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருட்கள் தவிர , உபுண்டுவில் வேறு என்ன மாற்றங்கள் ? இங்கு பார்ப்போம் !!!!   உபுண்டுவின் யூனிட்டி பணிமேடை சூழல் (Unity Desktop Environment) நன்கு மெருகூட்டப்பட்டிருக்கிறது . அதில் பல புதிய அம்சங்களும் , அமைப்பு வடிவமைப்புகளும் (Configurations) இடம் பெற்றுள்ளன .  உபுண்டுவின் புதிய பத

நெற்றிக் கண் (நம்பாதீங்க - பகுதி 7)

இறைவனின் இருப்பைப் பற்றிய விவாதங்களும் சர்ச்சைகளும் இன்னும் தீர்ந்த பாடில்லை. இறைவனை நம்புபவர்கள் அதற்காக பல விவாதங்களை முன்வைக்கிறனர். நாத்திகர்களும் அதற்கு இணையான விளக்கங்களின் மூலம் மறுக்கிறனர். நாசாவின் ஒரு புகைப்படத்தை வைத்து பலர் கடவுளைக் காட்டிய கதை இது: படத்தில் இருக்கும் பொருள் கண் போலவே தோன்றுகிறது அல்லவா? இந்த படம் பலருக்கு இறைவனைக் காட்டியது. அதைப் பற்றிய  செய்தி (தமிழாக்கம்):  கடவுள் இருக்கிறார்!! கடவுள் உண்டா இல்லையா என்பது இன்று வரை சர்ச்சையாக இருக்கிறது.. ஆனால், நாசா எடுத்த ஒரு புகைப்படம் மூலமாக கடவுள் இருப்பது உறுதியாகி விட்டது!! இது நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி எடுத்த அரிய படம். இது 3000 வருடங்களுக்கு ஒரு முறையே நடக்கும் என்று நாசா அறிவித்துள்ளது! இது "கடவுளின் கண்" என்றழைக்கப்படுகிறது.. இதை எளிதாக அஞ்சல் பெட்டியில் இருந்து அழிக்கலாம்.. ஆனால், அதை விட எளிதாக பரப்பலாம்.. கடவுள் நம்மையெல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறார்! உண்மை இது தான்          இந்த படம் நாசாவால் எடுக்கப்பட்டது தான்!! இந்தப் படம் மே 10, 2003 அன்று நாசாவின் " சி

பொதிகையின் எதிரொலி

06 மே 2012 சாப்பிடும் போது மட்டுமே தொலைக்காட்சி சேனல்களை நோண்டும் பழக்கம் உடையவன் நான். (மீதி நேரத்தில் தொலைக்காட்சியில் வீட்டிலுள்ளவர்கள் ராஜ்ஜியம் தான் என்பதால், அங்கு அமர்வதே இல்லை) ஞாயிறு அன்று இரவு சன் டிவியில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" என்று ஓடிக்கொண்டிருந்தது. 'வர வர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே சூதாட்டம் போல் ஆகி விட்டன' என்று சொல்லிக் கொண்டே ரிமோட்டால் சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்தேன். அப்போது தான் "பொதிகை தொலைக்காட்சி" வந்தது. முன்பு DD5 ஆக இருந்த காலத்தில், தொலைக்காட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்று வாசகர்களிடம் ஆலோசனை கேட்டு, வாக்கெடுப்பு நடத்தி 'பொதிகை' என்ற அழகான பெயரைத் தொலைக்காட்சிக்கு சூட்டினர் நிலையத்தார். கேபிள் டிவி வருவதற்கு முன் அரசனாக கோலோச்சிய பொதிகையைத் தற்போது பார்ப்பவர்கள் அரிது. இந்த பதிவினை எழுதத் தூண்டியதே அவர்கள் தொன்று தொட்டு செய்து வரும் ஒரு செயல் தான். அப்படி என்ன செய்தார்கள் என்று கேட்கிறீர்களா? தங்களுக்கு நேயர்கள் எழுதிய கடிதங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியின் பெயர் "