தீப ஒளித் திருநாள்..
பண்டைய காலத்தில் தீபங்களின் மூலம் ஒளியை வரவேற்ற நாள் இது. எனவே தான் "தீப ஒளி" என்று கொண்டாடத் துவங்கிய பண்டிகை இன்று தீபாவளி என்று மருவிக்கிடக்கிறது
(அசுரனை அழித்த பண்டிகை என்பதில் எனக்கு உடன்பாடில்லை!)
எந்த ஒரு நடைமுறை என்றாலும், சமகால மனிதருக்கும், வருங்காலச் சந்ததியினருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்றால், அந்நடைமுறைகளை மாற்றுவதில் தவறில்லை அல்லவா!!
பண்டிகைகள் என்றாலே புத்தாடை அணிந்து பலகாரம் உண்டு பிறருடனும் பகிர்ந்து மகிழ வேண்டிய நாளன்றோ!!
தீப ஒளித்திருநாள் அன்றோ பலரும் பட்டாசுகளைக் கொளுத்தியும் நம் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கிறோம்.
ஆனால், பட்டாசு கொளுத்துவதால் ஏற்படும் தீங்கினை யாரும் யோசிப்பதில்லை..
பட்டாசுகள் தீபாவளி அன்று மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், அவற்றால் பின்னாளில் பல கேடுகள் காத்து இருக்கிறன.
பட்டாசில் கந்தகம், நைட்ரேட் போன்றவற்றுடன் காப்பர், மெர்க்குரி, அமோனியம் போன்ற உலோகங்களும் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் சுவாசம் தொடர்புடைய பல நோய்கள் ஏற்படுகிறன.
பட்டாசு வெடிக்கையில் திடீரெனக் கேட்கும் அதீத ஒலி, கேட்கும் திறனைப் பாதிக்கலாம்.
பட்டாசு வெடிக்கும் போது உருவாகும் வெம்மை, புவி வெப்பமடைதலை அதிகரிக்கிறது.
மேலும், பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்றவை காற்றுமண்டலத்தை அசுத்தப்படுகின்றன. மழைப் பொழிவு பாதிக்கிறது.
பனிமலைகளில் மீது படியும் கார்பன் படிவங்கள், சூரிய ஒளியை எதிரொலிப்பதற்குப் பதில், கிரகிக்கின்றன. வெப்பத்தால், பனி உருகி கடல் நீர் மட்டம் உயர்கிறது. சங்கிலித் தொடர் விளைவாக உயிர்ச்சூழல் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
எனவே, நாம் ஒரு நாள் பட்டாசு வெடிப்பதன் மூலம் பல ஆண்டுகள் பூமியின் வளத்தைக் கெடுக்கிறோம்.. ஒரு நாள் மகிழ்ச்சிக்காக நிரந்த சூழல் கேட்டை உருவாக்குகிறோம்.
அது மட்டுமா??
நாம் ஒரு நாள் வெடிக்க பட்டாசு தயாரிப்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் பல நோய்களால் அவதியுற நேர்கிறது.
நமது அருகில் வசிக்கும் பிற உயிர்களும் பட்டாசுகளால் ஏற்படும் மாசாலும், சத்தத்தாலும் பாதிக்கப்படுகிறன!!
எனவே, தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்ப்போம். தீபாவளி என்ற பெயருக்கு ஏற்ப, வண்ணத் தீபங்களை வரிசையாக ஏற்றி மகிழ்வோம்.
இருளைப் போக்கவே ஒளி தேவைப்படுகிறது.
ஒரு மிகப்பெரிய அறையின் இருட்டைப்போக்க ஒரு சிறு துளி ஒளியே போதும்.
'அறியாமை' என்கிற இருளில் மூழ்கியுள்ள நாம் 'சுடர்' போன்ற ஒளியால் தெளிவு பெறுவோமாக!!
மாசற்ற தீபாவளி கொண்டாடுவோம்; மகிழ்ச்சியுடன் வாழ்வோம்
நன்றி: தினமலர், கூடல்.காம்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பரே!
பதிலளிநீக்குதீபாவளி நாளன்று 10% கூடியிருக்காம்.
பதிலளிநீக்குஎன்னதுன்னு கேட்கிறீங்களா, வேறென்ன காற்றில் கலந்துள்ள மாசின் அளவு.
நரகாசுரனை வதம் செய்த நாளுன்னு சொல்லி இப்போ நரன்களை வதைக்க ஆரம்பிச்சுட்டோம்.
//தீபாவளி நாளன்று 10% கூடியிருக்காம்.
பதிலளிநீக்குஎன்னதுன்னு கேட்கிறீங்களா, வேறென்ன காற்றில் கலந்துள்ள மாசின் அளவு. //
இதற்குத் தான் ஆணியே புடுங்க வேண்டாம் என்பது போல் சொன்னேன்!
நன்றி
@மாணவன்:
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் (தாமதத்திற்கு மன்னிக்கவும்!!)