முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராமனால் ஏற்பட்ட விளைவு

10 டிசம்பர் 1930

ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது..

அன்று நோபல் பரிசு வழங்கும் தினம்.
அப்போது, 
அங்கு ஒரு இந்தியரும், அவரது மனைவியும் வந்து சேர்ந்தனர்..

வந்திருந்த பலரும் அவர் ஏதோ  இலக்கியத்திற்குப் பரிசு வாங்க வந்தார் என்றே  நினைத்திருந்தனர்..
ஆனால்...
நடந்ததோ வேறு..

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசிற்கு அவர் அழைக்கப்பட்டார்..
வந்திருந்த பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

பின்னே, மேலை நாட்டைச் சேராத ஒருவர் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெறுவதென்றால் சும்மாவா?!!


அறிவியல் துறையில் சிறந்து விளங்கியமைக்கு நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியரே அவர் தான் !!!

அவர் தான் சர்.சி.வி ராமன்..

அந்த ஆண்டு நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படவர்களில் பலரும் அணுக்கள் தொடர்பாகவே ஆராய்ந்திருந்தனர். ஒளியைப் பற்றி ஆராய்ந்தவர் இவர் ஒருவர் தான்..

அது (இன்றும் தான்), அணுக்கள் ஆபத்தானவை என்று அறியப்பட்ட  காலம்.


நோபல் அறக்கட்டளையின்  கொள்கைப்படி,  நோபல் பரிசு அமைதியான வழியை நாடும் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட வேண்டும். அத்துடன், கண்டுபிடிப்பு அனைவராலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்..
இந்த இரண்டு கொள்கைகளுக்கும் உட்பட்ட ஒரே கண்டறிதல் "ராமன் விளைவு" மட்டுமே!!

இதுவே  ராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது..

இதன் காரணமாக இன்னொரு பெருமையும் ராமனை  அடைந்தது..உலகிலேயே கண்டுபிடிப்பிற்காக குறைந்த நாட்களில் (இரண்டு ஆண்டுகள்) நோபல் பரிசு பெற்றவர் ராமன் அவர்கள் தான்!!


இன்று (7 நவம்பர்) அவரது பிறந்த நாள் ஆகும்..
அறிவியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் தமிழரும் ஒரே இந்தியரும் ஆன மேதை சர். சி. வி. ராமன் அவர்களைத் தலைவணங்குவோம்!! 


கொசுறு தகவல்:

உலகிலேயே நோபல் பரிசை செலவிடமுடியாமல் போனவர்களில் ராமனும் ஒருவர்.
அவர் பிற்காலத்தில் ஒரு  கல்விமையம் அமைக்க வேண்டி மொத்த பணத்தையும் "கோபால ராவ் வங்கி" என்கிற தனியார் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார்..
ஆனால், சிறிது காலத்திற்குப் பின் அந்த நிறுவனம் நொடிந்ததாக அறிவித்தது..
போட்ட மொத்த பணத்தையும் ராமன் இழந்தார்..

அன்றே  நிதிநிறுவனம் என்கிற பெயரில் ஒருவர் எப்படி மோசடி செய்துள்ளார் என்று பாருங்கள்!!

பி. கு:
* இன்று ராமன் அவர்களின் பிறந்த நாள் என்று நினைவூட்டிய நண்பர் மாணவனுக்கு நன்றி (அவரது கட்டுரை: 'சர்' சி.வி.ராமன் (அறிவியல் மேதை) - வரலாற்று நாயகர்!)

* வெளிநாட்டில் சென்று மீண்டும் தாயகம் வராமல் அங்கேயே தங்கி விட்டு, தங்கள் மூளையை அங்கு அடகு வைத்து, அந்த நாட்டின் பெயரால் நோபல் பரிசு பெற்றவர்களை, 'இந்தியாவில் பிறந்தார்கள்' என்கிற ஒரே காரணத்திற்காக,"இந்தியர்" என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

கருத்துகள்

  1. நல்ல தகவல் நண்பரே ,அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. அருமையாக தொகுத்து பதிவிட்டுள்ளீர்கள் நண்பரே! சர் சி.வி. ராமன் ஐயா பற்றிய சிறப்பானதொரு பதிவை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. //அறிவியல் துறையில் சிறந்து விளங்கியமைக்கு நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியரே அவர் தான் !!!

    அவர் தான் சர்.சி.வி ராமன்..//

    அதுமட்டுமல்லாமல் நோபல் பரிசை வென்ற முதல் தமிழரும் அவர்தான்....
    இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்ற தகுதியை ஒரு தமிழனால் பெற முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர் சர் சி.வி. ராமன் ஐயா அவர்கள்!

    பதிலளிநீக்கு
  4. //நல்ல தகவல்கள் நண்பா - "என் ராஜபாட்டை"- ராஜா//

    நன்றி நண்பா!

    பதிலளிநீக்கு
  5. //நல்ல தகவல் நண்பரே ,அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே - MR//
    நன்றி நண்பா!

    பதிலளிநீக்கு
  6. //அருமையாக தொகுத்து பதிவிட்டுள்ளீர்கள் நண்பரே! சர் சி.வி. ராமன் ஐயா பற்றிய சிறப்பானதொரு பதிவை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

    அதுமட்டுமல்லாமல் நோபல் பரிசை வென்ற முதல் தமிழரும் அவர்தான்....
    இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்ற தகுதியை ஒரு தமிழனால் பெற முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர் சர் சி.வி. ராமன் ஐயா அவர்கள்!- மாணவன்//

    நன்றி நண்பரே..
    அதனையும் ஏற்கனவே எழுதியுள்ளேன்...

    "அறிவியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் தமிழரும் ஒரே இந்தியரும் ஆன மேதை சர். சி. வி. ராமன் அவர்களைத் தலைவணங்குவோம்!!

    பதிலளிநீக்கு
  7. அறிந்துக் கொள்ள உதவியமைக்கு நன்றி அருண்

    பதிலளிநீக்கு
  8. வெளிநாட்டில் சென்று மீண்டும் தாயகம் வராமல் அங்கேயே தங்கி விட்டு, தங்கள் மூளையை அங்கு அடகு வைத்து, அந்த நாட்டின் பெயரால் நோபல் பரிசு பெற்றவர்களை, 'இந்தியாவில் பிறந்தார்கள்' என்கிற ஒரே காரணத்திற்காக,"இந்தியர்" என்று அழைப்பதில் எனக்கும் உடன்பாடில்லை.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா9 மே, 2012 அன்று 6:54 AM

    ungal karuththukku udanpadugiren anbu nandri
    surendran

    பதிலளிநீக்கு
  10. தொப்பிக்கு பதில் தலைப்பாகை கட்டி கொண்டு இருந்ததினால் இலக்கியவாதின்னு நினைத்திருப்பான் "அந்த காலத்திலும் பாம்பாட்டிக தேசம்னு இளப்பமா தான் பார்த்திருப்பார்கள்" கடைசி கொசுறு வருத்தத்தை தரும் தகவலே "ம்..அனுபவிக்க அவருக்கு கொடுத்து வைக்கல" கடைசியா ஒன்னு சொல்லிருக்கீங்க வெளிநாட்டுலேயே இருந்து அவங்களுக்கு உழைத்து பெருமை தேடித்தந்தா இந்தியன்கர பெருமை அவனுக்கு இல்லை என்று...வாஸ்தவம் தான்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...