முன்குறிப்பு:
இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே.
எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!!
இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!!
கதை இதோ:
இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள
புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள
வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த
கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில்
சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும்
பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில்
செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.
இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.
இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு
அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால்
நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம்
முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை...
(ஆதாரம்: ஆன்மீகக்கடல்)
இந்த செய்தியை நம்பி திருநள்ளாறினை நினைத்து வியக்காதவர் இல்லை..
ஆனால், இது "திருநள்ளாறு" என்ற புனிதத்தலத்தின் பேரில் அனைவருக்கும் தண்ணி காட்டிய கதை!!
உண்மை
இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில் 1 சதவிகிதம் கூட உண்மையாக இருக்க முடியாது!!! இது அறிவியல் விதிகளுக்கு எதிரானது!
முதலில் செயற்கைக்கோள்கள் ஏன் பூமியை சுற்றுகிறன என்பதை அறிந்து கொள்வோம்..
பொருண்மை உள்ள அனைத்துப் பொருட்களும் கால வெளியில் ஓர் விசையை உருவாக்குகின்றன. அவ்விசையின் காரணமாக அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன. இந்த ஈர்ப்பு விசையே புவியீர்ப்பு விசை (gravitation) என்றழைக்கப்படுகிறது.
எப்போதும் வலிய பொருள் எளியதைத் தன்னை நோக்கி மிக வேகமாக ஈர்க்கும்..
வலிய பொருளின் ஈர்ப்பால் இழுபடாமல் இருக்கவே, செயற்கைக்கோள் பூமியைச் சுற்றுகிறது!
தற்போது அது நடக்க ஏன் சாத்தியம் இல்லைகா என்பதற்கான காரணங்களுக்கு வருவோம்:
காரணம் #1: செயற்கைக்கோள் சுற்றும் போது அரை நொடி அப்படியே ஸ்தம்பித்து நின்றாலும், அது பூமியை நோக்கி விழத் துவங்கி விடும்.
காரணம் #2: உலகில் உள்ள 8 கி.மீ/ நொடி வேகத்தில் செல்லும் எந்த பொருளையும் நொடிப்பொழுதில் நிறுத்த முடியாது!
காரணம் #3: அப்படி விழுந்து மேலெலுப்படுகிறது என்றாலும், 88 மீ மேலே தூக்க
வேண்டும்... எத்தனை சிறிய செயற்கைக்கோளாக இருந்தாலும், இவ்வளவு உயரத்தை
நொடிப்பொழுதில் (ஸ்தம்பித்த நிலையில் இருந்து) எட்டுவது எப்படி சாத்தியம்?
காரணம் #4: செயற்கைக்கோள் ஸ்டம்பித்து இருக்கும் கால அளவுக்குள் 90 கி.மீ தூரம் கடந்திருக்கும்.. இந்த தூரத்தை செயற்கைக்கோள் எவ்வாறு எட்டும்?
மேலும்...
ஒரு சக்திமையத்தில் (Energy Source ) இருந்து தான் சக்திகள் விதவிதமாக வரமுடியும்..
மற்றவையால் தன்னிடம் வரும் சக்தியில் ஒரு பகுதியை திருப்பி விட மட்டுமே முடியும்!!
சூரிய குடும்பத்தில் உள்ல ஒரே சக்தி மையம் சூரியன்..
சனி கிரகம் தன்னிடம் வரும் சக்தியில் ஒரு பகுதியைத் திருப்பத் தான் முடியும்..
அங்கு பட்டு ஒளிரும் வெளிச்சமே நமக்கு கோளாகத் தெரிகிறது!!!
பிறகு எப்படி கருநீலக் கதிர்கள் (UV Rays)அடர்த்தி மாறும்?
சிலர் இதற்கு வேறு விதமாக விளக்கம் சொல்கிறனர்.. அதாவது, செயற்கைக்கோள் ஸ்தம்பிப்பபது என்றால், மிண்ணணு சாதனங்களை மட்டுமே குறிக்கும். விசையைக் குறிக்காது என்று..
அப்படி என்றால், புகைப்பட கருவியும் வேலை செய்து இருக்காது தானே? எப்படி கூகிள் மேப்பில் திருநள்ளாறு படம் இருக்கிறது???
இணையத்தில் கிடக்கும் சில தவறான தகவல்களுள் இதுவும் ஒன்று..
திருநள்ளாறு சனி பகவானிற்காக கட்டப்பட்ட ஒரு புண்ணிய தலம்..
தவறான தகவல்களைப் பரப்பி அதன் புகழை மங்கச் செய்து விட வேண்டாம்!
அன்பர்களே , அறிவியல்ரீதியாக இதனை விளக்கி உள்ளேன்.. உங்கள் கருத்துகளை
இங்கே பதிந்து செல்லுங்கள்!!
தொடரின் முந்தைய பதிவு: தீபாவளி இரவினில் இந்தியா
அடுத்த பதிவு:
nalla padivu nanbara.......
பதிலளிநீக்குதளம் அல்ல நண்பரே .....தலம்
பதிலளிநீக்குsariya soninga.. ethanai periyaar vanthaalum ivangalai thirutha mutiyathu ipdi ethavathu puthusu puthusa kilappiten thaan irupanga...
பதிலளிநீக்குஇத்தனை அறிவியல் விதிகளும் அந்த இடத்தில் செயல்படவில்லை என்பதுதான் நண்பரே அந்த மின்னஞ்சலின் சாரம்.
பதிலளிநீக்கு//காரணம் #1: செயற்கைக்கோள் சுற்றும் போது அரை நொடி அப்படியே ஸ்தம்பித்து நின்றாலும், அது பூமியை நோக்கி விழத் துவங்கி விடும்.
காரணம் #2: உலகில் உள்ள 8 கி.மீ/ நொடி வேகத்தில் செல்லும் எந்த பொருளையும் நொடிப்பொழுதில் நிறுத்த முடியாது!
காரணம் #3: அப்படி விழுந்து மேலெலுப்படுகிறது என்றாலும், 88 மீ மேலே தூக்க
வேண்டும்... எத்தனை சிறிய செயற்கைக்கோளாக இருந்தாலும், இவ்வளவு உயரத்தை
நொடிப்பொழுதில் (ஸ்தம்பித்த நிலையில் இருந்து) எட்டுவது எப்படி சாத்தியம்?
காரணம் #4: செயற்கைக்கோள் ஸ்டம்த்து இருக்கும் கால அளவுக்குள் 90 கி.மீ தூரம் கடந்திருக்கும்.. இந்த தூரத்தை செயற்கைக்கோள் எவ்வாறு எட்டும்//
நீங்கள் கேட்டதெல்லாம் கேள்வி நண்பரே, அதற்கான காரணம் அந்த இடத்தில் உள்ள ஆலயம்தான். எனவே நீங்கள் காரணம் என்ற இடத்தில் கேள்வி1,2 என டைப் செய்து பதிலாக அந்த மின்னஞ்சலை வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மட்டுமல்ல உங்கள் நண்பர்கள் உறவினர்கள், உங்கள் வலைப்பூவிற்கு வருபவர்கள், அவர்தம் உறவினர் எல்லோரும் பல லட்சம் ஆண்டுகள் எந்த கதிர் வீச்சாளும் பாதிக்கபடாமல் வாழ்வீர்கள்
சூனியவிகடன்: தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே..
பதிலளிநீக்குதிருத்தி விட்டேன்
படித்து கருத்துரையிட்ட உங்களுள் ஒருவன், சூனியவிகடன், தோழி மற்றும் வெங்காயம் ஆகியோருக்கு நன்றி
பதிலளிநீக்குவெங்காயம்:
பதிலளிநீக்குஅன்பரே... மற்றவற்றைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே!!
சனிக்கிரகமும் கதிர்வீச்சு வெளியிடுகிறதா?
திருநள்ளாறு மேல் பறக்கும் விமானங்கள் ஏன் ஸ்தம்பித்து நிற்கவில்லை?
மேலும், ஸ்தம்பித்து நிற்கிறன என்றால்,
திருநள்ளாறில் டிஷ் ஆண்டெனா எப்படி வேலைசெய்கிறது? (Signal வந்தால் தானே!!)
திருநள்ளாறு செயற்கைக்கோள் படம் எப்படி கிடைத்தது?
ஆலயத்தின் புகழைப் பரப்புகிறேன் என்று புரளிகளைப் பரப்பாதீர்!!
இருக்க முடியாது, வாய்ப்பில்லை, நம்பமுடியவில்லை என்பதாகவே உங்கள் வாதம் இருக்கிறது. இல்லை என்ற நிரூபணம் தந்தால் அல்லவா உங்கள் வாதம் எடுபடும்? வந்த மின்னஞ்சலின் சாரமே இத்தனை அறிவியல் விதிகளுக்கும் தண்ணி காட்டுகிறது திருநள்ளாறு என்பதே.இதனை மறுத்துப்பேச வாய்ப்பில்லை, நம்பமுடியவில்லை, அறிவியல் விதிகளுக்கு உட்படவில்லை என்று பேசுவது மேலும் மின்னஞ்சலின் கருத்துக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது...மின்னஞ்சல் தவறு என்பதை ஆணித்தரமாக ஆதாரத்துடன் நிரூபித்துவிடுங்களேன்!!
பதிலளிநீக்கு//வந்த மின்னஞ்சலின் சாரமே இத்தனை அறிவியல் விதிகளுக்கும் தண்ணி காட்டுகிறது திருநள்ளாறு என்பதே.//// நாசாவின் நேரடி தலத்தில் இருந்து இது குறித்த ஆதாரம் தாருங்கள் சகோ... நம்பலாம்... இப்படி அனானி மெயில்ல்களை எப்படி எதன் அடிப்படையில் நம்புவது??? உண்மை இல்லை என்று நிரூபிக்க ஆதாரம் கேட்கும் நீங்கள் அது உண்மை என்பதை நிருபிக்கும் ஆதாரம் கொடுங்கள்..!
நீக்குஇந்த கதையெல்லாம் வெறும் பொய் brother… வதந்தி…
நீக்குஇந்த வதந்தியைப் பரப்பியவர்களுக்கு செயற்கைக்கோளைப் பற்றி தெரியவில்லை;… செயற்கைக்கோள் ஸ்தம்பித்தால்! நிலைநிறுத்தப்பட்ட தனது சுற்றுப்பாதையிலிருந்து ஏதோ ஒரு விசை செயற்கைக்கோளை நிறுத்துமேயாயின் அது பூமியின் காற்று மண்டலத்திற்குள் வேகமாகக் கீழறங்கத் தொடங்கும் . நாம ஒழுங்கா ''communication'' - லாம் பண்ணமுடியாதுப்பா...செயற்கைகோள் position மாறிடும்.
மூன்று வினாடி ஸ்தம்பித்தால் தனது சுற்றுப்பாதையிலிருந்து இறங்கும் இடைவெளியை செயற்கைக்கோளால் மீண்டும் எட்டமுடியாது. அதை, சரியான இடத்தில் உந்தித் தள்ளுவதற்கு ராக்கெட் இருக்காது. புரியுதா?.
செயற்கைகோளின் speed தெரியுமா?. speed of something like 6 miles per second (nearly 10 kilometers per second) இவ்வளவு வேகத்துல சுற்றி வருகிற செயற்கைகோள் - ஐ 3 second -ல speed brake போட்டெல்லாம் நிறுத்த முடியாதுப்பா...... அப்படி நிறுத்தினா செயற்கைகோளுக்கும் பூமிக்குமான location மாறிடும். தொடர்ந்து TV- ல programme பார்க்க முடியாது புரியுதா?.
அருண் அம்பி,
பதிலளிநீக்குகருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
திருநள்ளாறின் செயற்கைக்கோள் புகைப்படமே மின்னஞ்சல் தவறு என்பதற்கான ஆதாரம்...
இது உண்மை தான் என்பதற்கு நீங்கள் ஏன் ஒரு ஆணித்தரமான ஆதாரத்துடன் நீரூபிக்கக்கூடாது?
Ariviyalukkum., aanmeegathirkum evvalavu nall than potti vaippathu...
பதிலளிநீக்குஅருண் அம்பி,
பதிலளிநீக்குகருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
திருநள்ளாறின் செயற்கைக்கோள் புகைப்படமே மின்னஞ்சல் தவறு என்பதற்கான ஆதாரம்...
இது உண்மை தான் என்பதற்கு நீங்கள் ஏன் ஒரு ஆணித்தரமான ஆதாரத்துடன் நீரூபிக்கக்கூடாது?
நான் சொல்கிறேன் நண்பா,
உங்கள் அனைவருக்கும் அறிவுள்ளது சிந்தியுங்கள்.
படம் என்கிருந்து எடுக்கப்பட்டது அதன் நேர்கோட்டில் எடுக்கப்படதா
படம் எப்படி வேண்டுமனாலும் எடுக்கலாம்.
கரு நீலக் கதிர்வீச்சு என்று ஒன்றும் கிடையாது... ஒருவேளைப் புறவூதாக் கதிர்களாக இருக்கலாம். சரி புறவூதக்கதிர்களை ஈர்க்கிறது... இது நிச்சயம் பொய்..
நீக்குஒருவேளை புறவூதாக் கதிர்களை கவர்ந்து கொள்கிறது எனலாம்.. இதை எல்லா கரும் பொருளும் செய்கின்றன.. அவை தன்மேல் விழும் ஒளியைக் கவருந்து கொள்கின்றன...
ஒருவேளை ஈர்ப்பதாக இருந்தால்.. விண்வெளியில் உள்ள கருந்துளைகளைச் சுற்றி நிகழ்வது போல புற ஊதாக் கதிர் வளைந்து அதன் மேல் விழ வேண்டும்.
ஒருவேளை இது நடக்கிறது எனக் கொள்வோம்.. அதே நேரத்தில் மின் சாரக் கருவிகள் இயங்கவில்லை என்ற கருத்தையும் பார்ப்போம். கோவிலிலுள்ள மின்விளக்குகள் அருகிஇல் உள்ள மின்விளக்குகள் வேலைச் செய்கின்றன.. அப்படியானால். மின்சாரக் கருவிகள் வேலை செய்கின்ற்ன..அனால் செயற்கைக் கோள் மட்டும் இயங்க வில்லை அதாவது.. நுண்ணலைகள் (மைக்ரோ வேவ்) இயங்கவில்லை.. ஆக செயற்கைக் கோளில் இருந்து வெளிப்படும் இந்த நுண் அலைகளையும் கோவில் ஈர்த்துக் கொள்வது என்பது தான் அறிவார்ந்த புரிதல்..
இப்பொழுது நுண்ணலைகளையும் கோவில் இழுக்கிறது... புறஊதாக் கதிர்களையும் இழுக்கிறது.. அனால் இடையில் உள்ள கண்ணுறு ஒளியை மட்டும் இழுக்கவில்லை என்பது எப்படி சரி???
//படம் என்கிருந்து எடுக்கப்பட்டது அதன் நேர்கோட்டில் எடுக்கப்படதா
பதிலளிநீக்குபடம் எப்படி வேண்டுமனாலும் எடுக்கலாம்.//
நண்பரே, படத்தை எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று ஒப்புக்கொள்கிறேன்..
ஆனால், நேர்க்கோட்டில் எடுத்தால் தானே முழு விவரமும் தெரியும்?? (பக்கவாட்டில் எடுத்தால் சில அம்சங்கள் மறைந்து விடும்)..
மேலும், செயற்கைக்கோள்கள் சராசரியாக பூமியைச் சுற்றி வர 90 நிமிடங்கள் எடுக்கிறன (40,008 கி.மீ).
திருநள்ளாறு அமைந்திருக்கும் காரைகாலின் மொத்த பரப்பளவே 16 சதுர கி.மீ தான்!!
இதை கடக்க செயற்கைக்கோளிற்கு (அதாவது செயற்கைக்கோள் உதித்து மறைய) 2.16 நொடிகள் போதும்.
அப்படி இருக்க 3 நொடிகள் ஸ்தம்பித்தால், படம் எப்படி எடுப்பது?
Aalunga,
பதிலளிநீக்குExcellent post. I do PhD in Physics. So happy to see ur clear explanation in terms of Physical laws. As neatly explained by you, this 'Thirunallaaru-NASA' story is 100% fabricated.
1. Satellites can not be struck in a position, even for a split second, because the gravitational force will win over the centripetal force and suck the satellite.
2. There are no radiation sources in Saturan, except heat and light. Only light from Saturn will reach earth. That too, since both earth and Saturn rotate on its own axis, sharp radiation from Saturn continuously falling at Thirunallaaru as a focussed spot is not possible. No other strong radiations are reaching earth from Saturn.
3. NASA has never experienced any satellite delay as explained in that article. If anyone has to prove anything, it is the people who wrote this article. Let them first give a proper reference for their claims.
For every thesis, there is an anti-thesis. Let those who believe in thesis, believe the same and let those who do not believe, let them believe the anti-thesis. No compulsions pl., to convince thesis or anti-thesis. There are certainly many things, beyond reason and logic also. To those who believe `God is nowhere', the same message can be read as `God is now here' also.
பதிலளிநீக்குidhu
பதிலளிநீக்குசனிக்கு மட்டுமல்ல குரு, சுக்கிரன், ராகு, கேது என்றுத் தொடங்கி நவக்கிரகங்கள் அனைத்துக்கும் நம் நாட்டில் கோயில்கள் உண்டு. இப்படி எல்லாக் கிரகங்களும் அவற்றின் பேரால் அமைந்த கோயில்களுடன் கதிர்வீச்சின் மூலம் தொடர்பு வைத்திருந்தால்... பாவம் செயற்கைக் கோள்கள் என்ன செய்யும்..?
பதிலளிநீக்குஇதேப் போல மெக்கா நகரத்தைப்பற்றியும், எகிப்திய பிரமிடுகளைப் பற்றியும் கதைகள் உண்டு. நம் முன்னோர் மிகச்சிறந்த அறிவாளிகள். அவர்கள் தங்கள் அறிவியல் செய்திகளை நேரடியாக ஆவணப்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் தொன்மங்கள் மூலமும், புராணங்கள் மூலமும் நமக்கு உணர்த்த விரும்பியது அறிவியலேயன்றி மூட நம்பிக்கையல்ல. பிரபஞ்ச ரகசியத்தை குறிப்பால் உணர்த்தும் சிதம்பர நடராஜர் ஒரு அறிவியல் குறியீடு. இதனை நாம் உணர வழியில்லாத வகையில் மூட நமபிக்கைகளும், புனைந்துரைக்கப்பட்டக் கதைகளும் நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இன்று நடராஜர் மூலம் பண்டைய தமிழர் உணர்த்த விரும்பிய பிரபஞ்ச அறிவியல் என்னவென்பதை ஆராய முற்படாமல், நடராஜர் முன்னால் தமிழில் தேவாரம் பாடலாமா அல்லது சமஸ்கிருதம் ஒன்றே அர்ச்சிப்புக்கு உரிய மொழியா என்று அடிதடி நடத்துகின்ற அளவுக்கு நம்பிக்கைகளில் விழுந்து கிடக்கிறோம். நியூட்ரினோ துகள்களை ஆராய அமைக்கப்பட்ட CERN ஆராய்ச்சிக் கூட வளாகத்தின் முன்னால் நடராஜர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது (இது உண்மைச் செய்தி) ஏனென்றால் நம்மிடம் இருந்து அறிவு சார்ந்த விஷயங்களை வெளிநாட்டார் ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. ஆனால் நாம் நம்மிடம் அறிவியல் விஷயங்கள் நிறைய இருந்தும் அதனை உணராமல் வெறும் கட்டுக்கதைகளை நம்பியும், அறிவைப் புறந்தள்ளி உணர்வு சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து முன்னோர்களை அவமரியாதை செய்து வருகிறோம். அவர்களுக்கு உண்மையில் செய்யும் மரியாதை அவர்கள் புதிர்களாக விட்டுச்சென்ற அறிவியலைக் கண்டு உணர்வதேயல்லாமல் இடைக்காலத்தில் செருகப்பட்டக் கட்டுக்கதைகளின் பால் கவனத்தைசெ செலுத்துவது அல்ல.
ingu prachinai seyarkkai kol nindru vittathu enbathalla. athan sila mukkiyamaana karuvigal seyal ilanthu vittathu enbathe.
பதிலளிநீக்குநானும், முன்னொரு காலத்தில் இதைப்படித்துவிட்டு, சந்தேகப்பட்டு, நாசா வின் தளத்திலே தேடினேன், ஒரு செய்திகூட கிடைக்கவில்லை, அவர்கள், நாசா நண்பர்கள், ஆராந்திருந்தால், நிச்சயம் இதற்கான காரண சகிதம் வெளியிட்டிருப்பர்கள்.
பதிலளிநீக்குநீங்கள் சொன்னது போல ச்தம்பித்தி விடுவதேல்லாம், ஸ்கூல் படிச்ச பையனுக்கே தெரியும் லூசுத்தனமான கதை என்று....
நல்ல பதிவு நன்றி
கௌதமன் ஐயா சொல்லியது முற்றிலும் உண்மை, நம் முனோர்கள் சொல்ல வந்த அதிவிஞ்சான உண்மைகளை நாம் மறந்து விட்டோம்.
பதிலளிநீக்குCERN இல் உள்ள நடராஜர் சிலை
http://www.thepeoplesvoice.org/TPV3/Voices.php/2010/11/14/the-large-hadron-collider-and-the-statue-5
பயனுள்ள பகிர்வு.. நன்றி சகோ..
பதிலளிநீக்குஇது பக்கா கட்டுக் கதை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. யார் இதையெல்லாம் நேரில் போய் விசாரிக்கப் போகிறார்கள் என்று கதை கட்டி விட்டார்கள். நீங்கள் சொன்னமாதிரி செயற்கைக் கோள் ஒரு போதும் நிற்காது, மேலும் Solar Flare மட்டுமே செயற்கைக் கோள்களின் செயல்பாட்டை பாதிக்கின்றன, புற ஊதாக்கதிர்களால் எந்த பாதிப்பும் இல்லை. மேலும், சூரியனில் இருந்து சனி கிரகத்தின் மேல் படும் ஒளியில் இருக்கும் புற ஊதாக்கதிர் Photonகள் அங்கேயே absorb ஆகி வெப்பமாக மாறி விட்டிருக்கும், திரும்ப பூமிக்கெல்லாம் வந்து சேராது, மேலும் புற ஊதாக்கதிர் திருநள்ளாருக்கு மட்டும் போகும் படியான எந்த விசே ஷ அமைப்பும் சனி கிரஹத்தில் இருப்பதாக இது வரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. அந்த செயற்கைக் கோள் திருநள்ளாருக்குமேலே பறக்கிறது என்றால் என்ன அர்த்தம் என்று இன்னமும் எனக்கு விளங்க வில்லை. 35000 km-85000 km உயரத்தில் பறக்கும் செயற்கைக் கோள், அதன் வட்டப் பாதை உள்ள plane னில் திருநள்ளாரு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அப்படியே இருந்தாலும் இங்கிருந்து அங்கே புற ஊதாக்கதிர் மூன்று வினாடிக்கு மட்டும் அடிக்கும் படி போகாது, அது மட்டுமல்ல புற ஊதாக்கதிர்களால் அதன் இயக்கத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
பதிலளிநீக்குஉண்மையை விளக்கியதற்கு நன்றி நான்பரே. நானும் இந்தனை நாட்களாக அந்த கட்டுக்கதையை உண்மை என்றே நம்பிக்கொண்டிருந்தேன்.
பதிலளிநீக்குஇந்த செய்தியை வெளிட்டு தன்னை உலகமகா புத்திசாலி என நிறுபிக்க நினைக்கிறான்......... இநடத பட்டிகாட்டான் நாசவையும் மிஞ்சி அறிவு கொளுந்தா....?????
பதிலளிநீக்குகாரணம் #1 யில் குறிப்பிட்டிருப்பதே அவனுடைய முட்டாள்தனத்திற்கு நல்ல உதாரணம்,செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுவது அதன் அலை வீச்சு அதாவது signal மட்டுமே ஸ்தம்பிதமாகுறது. புவியின் மேல் பரப்பில் எந்த செயற்கை கோல்களாலும் நிற்க முடியும் விழுவதற்கு அங்கு பூவியீர்ப்பு விசை இல்லை. ஒரு ஆப்பிளை வீசினால் கூட அது மிதந்துகொண்டேதான் இருக்கும் கீழ் விழுவதில்லை.
இந்த கருத்தை முன்வைப்பவன் நிச்சயமாக பகுத்தறிவென கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றும் நாதாரி அல்லது வேற்றுமத நாயாகதான் இருக்க வேண்டும்.
நண்பரே,
நீக்குவணக்கம்
\\ காரணம் #1 யில் குறிப்பிட்டிருப்பதே அவனுடைய முட்டாள்தனத்திற்கு நல்ல உதாரணம்,செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுவது அதன் அலை வீச்சு அதாவது signal மட்டுமே ஸ்தம்பிதமாகுறது. \\
நீங்கள் கட்டுரையை மேலோட்டமாக வாசித்து கருத்திட்டுள்ளது போல் இருக்கிறது. ஆழ்ந்து படித்தால், அதனைப் பற்றியும் நான் எழுதி விளக்கியிருப்பது தெரியும்...
>>>>சிலர் இதற்கு வேறு விதமாக விளக்கம் சொல்கிறனர்.. அதாவது, செயற்கைக்கோள் ஸ்தம்பிப்பபது என்றால், மிண்ணணு சாதனங்களை மட்டுமே குறிக்கும். விசையைக் குறிக்காது என்று..
அப்படி என்றால், புகைப்பட கருவியும் வேலை செய்து இருக்காது தானே? எப்படி கூகிள் மேப்பில் திருநள்ளாறு படம் இருக்கிறது???<<<<
\\ புவியின் மேல் பரப்பில் எந்த செயற்கை கோல்களாலும் நிற்க முடியும் விழுவதற்கு அங்கு பூவியீர்ப்பு விசை இல்லை. ஒரு ஆப்பிளை வீசினால் கூட அது மிதந்துகொண்டேதான் இருக்கும் கீழ் விழுவதில்லை. \\
தவறான புரிதல்...
புவியின் மேல் பரப்பின் மேல் ஈர்ப்பு விசையே இல்லையென்றால், நிலா எப்படி பூமியைச் சுற்றுகிறது? கொஞ்சம் சொல்லுங்க...
பூமியின் ஈர்ப்பு விஞையில் இருந்து விலகி நிற்க வேண்டுமானால், குறைந்தபட்சம் 9.25 லட்சம் கி.மீ தள்ளி நிற்க வேண்டும் (நிலாவே 4.5 லட்சம் தான்!!)
ஒரு ஆப்பிளை பூமியில் இருந்து வீசினால் நிச்சயம் விழுந்து விடும்... அதே நேரம், விண்கலத்திலிருந்து வீசினால் உடனே விழாது.. காரணம், அது ஒரு சம இயக்க வேகத்தில் வீசப்படுகிறது. பூமியில் இருந்து அப்படி நிற்பது போல தோன்றுமாறு (அதாவது பூமியுடன் ஒருங்கிணைந்து சுழலும் படி) குறைந்த பட்சம் நொடிக்கு 8 கி.மீ வேகத்தில் வீச வேண்டும்..
\\இந்த செய்தியை வெளிட்டு தன்னை உலகமகா புத்திசாலி என நிறுபிக்க நினைக்கிறான்......... இநடத பட்டிகாட்டான் நாசவையும் மிஞ்சி அறிவு கொளுந்தா....????? \\
நீக்கு\\ இந்த கருத்தை முன்வைப்பவன் நிச்சயமாக பகுத்தறிவென கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றும் நாதாரி அல்லது வேற்றுமத நாயாகதான் இருக்க வேண்டும்.\\
நான் அவ்வளவு பெரிய அறிவுக் கொழுந்து இல்லை.... ஒத்துக் கொள்கிறேன்...
இவ்வளவு எழுதும் நீங்கள் ஏன் தகுந்த ஆதாரத்தைக் காட்டக் கூடாது?
நாசாவின் வலைத் தளத்தில் இருந்தோ வேறு இடங்களில் இருந்தோ தகுந்த ஆதாரங்களைக் காட்டுங்களேன்...
\\அன்பே சிவம்\\
உங்கள் கருத்துகளின் மூலம் உங்கள் அன்பை என் மேல் பொழிந்தமைக்கு நன்றி!!
இந்த பட்டிகாட்டு எருமை நாசவையும் மிஞ்சிய அறிவு கொளுந்தா....? இதையும் சபாஷ் என போடும் வெற்றுமத நாய்களும், பகுத்தறிவு நாய்களும். அதுக்கு பெயர்தான் வைத்தெறிச்சல்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇதைக் கட்டுக்கதை என்றோ, அல்லது நீவிர் கூறிய காரணங்கள் சரி என்றோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பதிலளிநீக்குஎப்படி கருநீலக் கதிர்கள் (UV Rays)அடர்த்தி மாறும்?
முதலில் சிலவற்றை புரிந்து கொள்ளவும், எந்த ஒரு கிரகமும் ஓர் நிலையான இடத்தில் நிற்பதில்லை. அனைத்தும் சூரியனைச் சுற்றி ஓர் நீள்வட்டப் பாதை (Elliptical orbits) யில் பயணித்துக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட நொடிப்பொழுதில், ஜோதிட மொழியில் கூறுவதானால் ஒரு குறிப்பிட்ட நாழிகை அல்லது விநாழிகையில் அவை இருக்கும் இடத்தைப் பொருத்து அக்கிரகத்தின் கதீர்வீச்சு அடர்த்தி, ஈர்ப்பு விசை திண்ணம், அந்த கிரகத்தின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாறுபடும். In English, At an instance, the density of the rays emitted or reflected by a planet and the gravitational force varies, depending on the position of th planet.
ஓர் சிறிய உதாரணம், அமாவாசை மற்றும் பொளர்ணமி சமயங்களில் கடல் அலைகளின் சீற்றம், அமைதி என மாறுபட்ட நிலையைக் காணலாம். காரணம்? சந்திரன் பூமியை விட்டு தூரம் விலகிச் செல்வதாலும், மிக நெருங்கி வருவதாலும் ஏற்படும் விளைவு. அதைப் போன்றே மனிதனின் மன நிலையும் மாறுபாட்டைச் சந்திக்கும், இந்த இரு நாட்களில். ஆதாரம் வேண்டுமென்றால் ஒரு மனநல மருத்துவரிடம் கேட்கவும், அவர் நீங்கள் எதிர்பார்க்கும் அளவு தொழில்நுட்ப ரீதியாக விளக்குவார்.
அது பூமியை நோக்கி விழத் துவங்கி விடும்.
ஸ்தம்பிப்பது என்றால் நின்று விடுவது என்று பொருளல்ல, வழக்கமான செயல்பாட்டில் ஏற்படும் தொய்வு, அல்லது ஒரு பிறழல் என்றுக் கொள்ள வேண்டும். ஸ்தம்பித்த ஒரு பொருள் மறுபடியும் சீரான நிலைக்கு வர வாய்ப்பே இல்லை என்று அர்த்தம் அல்ல. உதாரணத்திற்கு நமது கணிணி சில வேளையில் அதிக பாரம் (Technically saying processing load) காரணமாக ஸ்தம்பிக்கும் ஆங்கிலத்தில் The computer is Hanged. எனக் கூறுவோம். அது ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்த்தவுடன் மீண்டும் சரியாக இயங்க ஆரம்பித்து விடுவது போலத்தான் செயற்கைக்கோள்களின் ஸ்தம்பிப்பும்.
அப்படி என்றால், புகைப்பட கருவியும் வேலை செய்து இருக்காது தானே? எப்படி கூகிள் மேப்பில் திருநள்ளாறு படம் இருக்கிறது?
இந்த கேள்விக்கு சில விதிகளை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கோவிலின் மேற்புறத்தில் மட்டுமே இருந்து எடுக்கப் பட்ட படம் என்பதற்கு எவ்வித உறுதியும் கிடையாது. அது டிஜிடல் முறையில் பல படங்களை ஒன்றிணைத்துக் கொடுக்கப் பட்ட படங்களாக இருக்கும் வாய்ப்பு நிறைய உள்ளது. உதாரணமாக ஒருவரை ஒரு அறையின் நடுவே நிற்க வைத்து, அந்த அறை மேலே 45 டிகிரியில் இருந்து ஒரு படம், -45 டிகிரியில் இருந்து படம் எடுத்து, இந்த படங்களில் உள்ள தகவல்களைக் கொண்டு அறையில் நிற்பவரின் தலை உச்சியைத் தெளிவாக கொணர முடியும். அதற்கு 0 டிகிரி அதாவது சரியாக நேர்கோட்டில் இருந்து படம் எடுக்க வேண்டும் என அவசியம் இல்லை. தேவைகேற்ப எடுக்கும் படங்களின் அளவுகளையும் கோணங்களையும் மாற்றினாலே போதும். Google Maps இல் இருக்கும் எந்த ஒரு படமும் கணிணியின் உதவி கொண்டு மாற்றம் செய்யப் படாத படம் கிடையாது. அது பல்வேறு நிலையான Processing நிலையைக் கடந்து வருகிறது. இது தான் Digital Image Processing எனப்படும் தொழில்நுட்பம்.
இரண்டாவது சாத்தியக்கூறு, புகைப்படக் கருவி என்பது ஒரு மின்னணு சாதனமாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அது ஒளியைப் பதிவு செய்யும் ஆற்றல் பெற்றவையாக இருந்தால் மட்டும் போதும். மற்ற மின்னணு சாதனங்கள் ஸ்தம்பித்த வேளையில், புகைப்படக் கருவி கிரகித்த ஒளிக் காட்சிகளை எப்பொழுது வேண்டுமானலும் உபயோகித்துக் கொள்ளலாம். ஆக மின்னணு சாதனங்கள் அனைத்தும் செயல் இழந்துவிடும் என்றால் புகைப்படக் கருவியும் செயல் இழந்து விடும் அல்லது புகைப்படங்களை எடுத்திருகாது என்ற வாதம் ஏற்புடையதல்ல.
நண்பரே,
நீக்குவணக்கம்....
\\ஒரு குறிப்பிட்ட நொடிப்பொழுதில், ஜோதிட மொழியில் கூறுவதானால் ஒரு குறிப்பிட்ட நாழிகை அல்லது விநாழிகையில் அவை இருக்கும் இடத்தைப் பொருத்து அக்கிரகத்தின் கதீர்வீச்சு அடர்த்தி, ஈர்ப்பு விசை திண்ணம், அந்த கிரகத்தின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாறுபடும். \\
ஒரு சக்திமையத்தில் (Energy Source ) இருந்து தான் சக்திகள் விதவிதமாக வரமுடியும்..
மற்றவையால் தன்னிடம் வரும் சக்தியில் ஒரு பகுதியை திருப்பி விட மட்டுமே முடியும்!!
சூரிய குடும்பத்தில் உள்ல ஒரே சக்தி மையம் சூரியன்..
சனி கிரகம் தன்னிடம் வரும் சக்தியில் ஒரு பகுதியைத் திருப்பத் தான் முடியும்..
நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும், (அதாவது சனிக் கிரகத்தில் பட்டு தெறிக்கும் கதிர்கள்) அது இடையில் வரும் எல்லா பொருட்களையும் பாதிக்க வேண்டும் தானே??
இதுவரை ஒரு முறை கூட ஒரு விமானத்திற்கு இப்படி ஒரு நிலை வந்ததாக தகவல் இல்லை...
\\அது டிஜிடல் முறையில் பல படங்களை ஒன்றிணைத்துக் கொடுக்கப் பட்ட படங்களாக இருக்கும் வாய்ப்பு நிறைய உள்ளது. \\
இதற்கு சாத்தியம் உண்டு நண்பரே..
ஆனால், இந்த எல்லா கோணங்களையும் உள்ளடக்கிய காலம் தான் 2.16 நொடிகள்.. அதாவது, 0 டிகிரியில் உதித்து 180 டிகிரியில் மறைவது.. (Rise Time to Set time).... இந்த காலக்கட்டத்திற்குள் எடுத்தால் தான் உண்டு.... இல்லையேல் விழாது.
மேலும், விண்கலன்களில் இருக்கும் எல்லா அறிவியற் பயன்பாட்டு சாதனங்களும் மிண்ணனு சார்ந்தவையே...
அப்படியே செயற்கைக் கோளில் படம் விழவில்லை என்று வைத்துக் கொண்டாலும் அந்த சக்தி வீச்சு இருக்கும் கோட்டில் விழக் கூடாது தானே??
இன்று திருநள்ளாறின் மேல் பலர் எடுத்த எத்தனையோ புகைப்படங்கள் உண்டு. அவை எப்படி வந்தன???
உங்கள் வாதத்தை வரவேற்கிறேன்...
நீக்குஆரோக்கியமான எதிர் வாதங்களுக்கு நன்றி
செயற்கைக்கோள் உதித்து மறைய 2.16 நொடிகள் போதும். அப்படி இருக்க 3 நொடிகள்
பதிலளிநீக்கு2.16 நொடிகள் மட்டுமே செயல் இழ்ந்திருக்க வேண்டும் ஆனால் ஏன் 3 நொடிகள் செயல் இழக்கின்றன என் இங்கு உள்ள ஒரு கமெண்டில் பார்கிறேன். இதற்குடைய சாத்தியக் கூறைப் பார்க்கலாம்.
இரு தகவல் தொடர்பு சாதனங்கள் தகவல்களைப் பரிமாறுகிறது என்றால், அதற்கு நடுவில் ACK எனப்படும் ஒரு சிக்னல் அனுப்பப் படும். அதவாது Acknowledgement எனப்படும். ஒரு தகவலை ஒரு சாதனம் மற்றொன்றிற்கு அனுப்புகிறது என்றால் தகவலைப் பெற்றவுடன் அந்த மற்ற சாதனம் இந்த ACK சிக்னலை அனுப்பும். நான் தகவலைப் பெற்றுக் கொண்டு விட்டேன், எனும் பாணியில். நாம் பேசும் போது "ம்" கொட்டுகிறோமே அதைப் போல். ஆக ஸ்தம்பித்த அந்த செயற்கைக் கோளுக்கு பூமிக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த அனுப்பப் பட்ட தகவலுக்கு (Technically called as PING), மறுமொழியாக செயற்கைக் கோள் ACK சிக்னல் அனுப்பியவுடனே செயற்கைக் கோள் செயல்பாட்டிற்கு வந்ததற்கான அடையாளமாகக் கொள்ளலாம். அதற்குரிய கால வேளையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தகையான தகவல் பரிமாற்றம், விமானங்களில் பயன்படுத்தப் படுகின்றன. ACK சிக்னல் விமானத்தில் இருந்து வரவில்லை எனும் நிலையைத் தான் "விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப் பட்டுள்ளது" என கூறுகிறோம்.