முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நியூட்டனின் இயக்க விதிகள்

அறிவியல் படிக்கும் பலருக்கும் முதலில் நினைவில் கொள்ள வேண்டிய விடயம் நியூட்டனின் மூன்று விதிகள் தான்... விதிகள் எளிமை என்றாலும், அவற்றை நினைவில் கொள்வது மாணவர்களுக்குச் சற்று சிரமமான காரியம் தான்... அவற்றை நினைவில் வைக்க எளிய வழியாய் உருவாக்கப்பட்டதே இந்த கதை!! நியூட்டன் தன் மூன்று விதிகளையும் எப்படி கண்டுபிடித்து இருப்பார் என்பதனை இப்படி எல்லோருக்கும் எளிதாக புரியும் வண்ணம் சுருக்கமாக சொல்லலாம் ------------------------------ ------------------------------ -------------------  ஒரு மாடு நடந்து போய்கொண்டு இருந்தது. நியூட்டன் அதை நிறுத்தினார்..மாடும் நின்றது. உடனே முதல் விதி உதயமானது ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது Every object continues in its state of rest, or of uniform motion in a straight line, unless compelled to change that state by external forces acted upon it அதன் பிறகு தன் பலம் முழுவதையும் சேர்த்து மாட்டிற்கு

தமிழ் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!

வணக்கம் நண்பர்களே... வழக்கம் போல எனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்! அதில் இணைய திரட்டியான தமிழ்10 தளத்தில் இருந்து ஒரு மடல் இருந்தது. "Stenzer உங்கள் இடுகையில் கருத்து தெரிவித்து ள்ளார்" என்று .. 'அடடா... நாம எழுதுறதையும் படிச்சு பார்த்து ஒருத்தர் கமெண்ட் சொல்லியிருக்காங்களே!' என்று ஆர்வமாக அஞ்சலை வாசித்தேன்!!!! வணக்கம் aalunga,  தமிழ்10 தளத்தில் நீங்கள் பகிர்ந்த " அவிழ்மடலும் இனி..... பிளாக்கருக்கு நன்றி!" என்னும் இடுகைக்கு "stenzer "கருத்து தெரவித்துள்ளார் . " ஹலோ செல்லம் என் பெயர் binta உள்ளது உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி ( bintajaafar@yahoo.com ) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கி

இந்தியப் பெண் பெற்ற 11 குழந்தைகள் (நம்பாதீங்க - பகுதி 11)

வணக்கம் நண்பர்களே.. நமது "நம்பாதீங்க" தொடர் வெற்றிகரமாக தனது 11 ஆம் பகுதியை வெளியிடுகிறது. 11 என்கிற எண்ணிற்கு என்ன சிறப்போ தெரியவில்லை.. இந்த பதிவும்  11 ஐப் பற்றியது தான்!! சில மாதங்களாக இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த விடயம் ஒரு அதிசய விடயமாகத் தான் மருத்துவ உலகால் நோக்கப்பட்டு வருகின்றது. இந்தியப் பெண் ஒருவர் ஒரே தரத்தில் 11 குழந்தைகளுக்கு தாய் ஆகி உள்ளார் என்கிற பரபரப்புச் செய்தி முன்னர் வெளியாகியிருந்தமை தொடர்பாக ஏராளமானோர் அறிந்து இருப்பீர்கள். உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி இவை பிறந்தன என்றும் தாயும், சேய்களும் நலமாக உள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது. பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஒன்றாக குழந்தைகளுடன் எடுத்துக் கொண்டவை என்று சொல்லப்படுகின்ற புகைப்படங்கள் இணையத் தளங்களில் பிரசுரம் ஆகி இருக்கின்றன. இது நம்ப முடியாத செய்திதான். ஆனால் நடக்க கூடிய காரியம்தான் என்கிற மருத்துவ உலகம். இந்த 11 குழந்தைகளும் ஒரே தாய்க்கு பிறந்தவைதான் என்று நிரூபிக்கின்ற பட்சத்தில் அதிக குழந்தைகளை ஒரே தரத்தில் பிரசவித

வெள்ளி இடைமறிப்பு (Venus transit) - 2012 - காணத்தவறாதீர்!!

இந்த ஜூன் மாதம் உண்மையிலேயே அரிய மாதம் என்று சென்ற பதிவிலேயே சொல்லியிருந்தேன் அல்லவா? அது ஏன்? ஜூன் 6 , 2012 இந்த நாள் அன்று வெள்ளி இடைமறிப்பு (Transit of Venus) ஏற்படவுள்ளது. அது என்ன வெள்ளி இடைமறிப்பு? நமது சூரிய குடும்பத்தில் எட்டு கோள்களும் , அவற்றின் துணைக்கோள்களும், மற்றும் சில சிறிய கோள்களும் உள்ளன. இவை அனைத்தும் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறன. இந்த  நகர்வின் போது அபூர்வமாக மூன்று கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வருவதுண்டு. அப்படி வரும் போது, இடையில் உள்ள பொருள் மற்றதை மறைக்கும். இதற்கு இடைமறிப்பு (Astronomical Transit) என்று பெயர். வெள்ளி இடைமறிப்பு (Transit of Venus) என்பது, வெள்ளி கிரகம் சூரியனுக்கும், பூமிக்கும், இடையில் வருவது ஆகும். அதாவது, சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். [ஒரு கோளும், அதன் துணைக்கோளும் சூரியனும் ஒரே கோட்டில் வந்தால் அது கிரகணம் (Eclipse). அதுவே, இரு கிரகங்களும் சூரியனும் வந்தால் அது இடைமறிப்பு (Transit) ]  அதில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? வெள்ளியும், பூமியும் சூரியனைச் சுற்றி

ஜூன் 2012 ஸ்பெ ஷல் (நம்பாதீங்க- பகுதி 10) June Special

வணக்கம் நண்பர்களே, திருமண தேவதையான ஜூனோவின் பெயர் கொண்ட இந்த ஜூன் மாதத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.  ஜூன் 2012 ஐப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கு.. தெரியுமா? ஒரே மாதத்தில் 5 வெள்ளி, 5 சனி, 5 ஞாயிறு வந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு அரிய சிறப்பைப் பெற்றது ஜூன் 2012 !! சந்தேகம் என்றால் நீங்களே காலண்டரைப் பாருங்க! இந்த அரிய நிகழ்வு 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் என்கிறார்கள் எண் கணித வல்லுனர்கள். சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் வேலைசெய்தால் சம்பளம் ஒன்றரை மடங்காக வழங்கப்படும் கம்பெனிகளில் வேலைசெய்வோருக்கு இம் மாதம் குரு உச்சம்தான், ஆனால் சனி ஞாயிறு தினங்களில் ஓய்வு எடுப்போர் இம் முறை கொஞ்சம் நீண்ட நாட்கள் எடுப்பர். எப்படிப் பார்த்தாலும் இம் மாதம் ஒருவகையில் யோகம் தான் ! என்னங்க? நிச்சயமா இது ஜூன் ஸ்பெ ஷல் தானே? கொஞ்சம் இருங்க!!மேலே இருப்பது சுத்த அக்மார்க் பொய்!! உண்மை: இந்த செய்தியை மின்னஞ்சலில் பார்த்து எத்தனை பேர் ஏமாந்தார்கள் என்று தெரியாது!! முதலில், ஜூன் மாதத்தில் 30 நாட்கள் தான். இது நடக்க சாத்தியம் இல்லை.  மே மாதம் பார்