முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கூகிள் தேடலில் (Google Search) விரும்பத்தகாத தளங்களை தவிர்ப்பது எப்படி? (Safe search)

கூகிள் ஒரு அருமையான தேடல் களம். அதே நேரம் ஒரு கண்ணாடி. நாம் என்ன விரும்புகிறோமோ அதனை பிரதிபலிக்கும் திறம் கொண்டது. நீங்கள் கூகிள் தேடுபொறியில் (Google Search Engine) சில குறிச்சொற்களைக் (keywords) கொண்டு தேடும் போது, உங்களுக்காக பல அதிர்ச்சிகள் காத்து இருக்கலாம். நீங்களே விரும்பாத தளங்கள்,  சொற்களின் பயன்பாட்டால்,  தேடலின் முதல் பக்கத்தில் குவியலாம்.   காமக்களியாட்டங்கள் அல்லது விரும்பத்தகாத செய்திகளை உள்ளடக்கிய வலைத்தளங்களை உங்கள் தேடலில் வராமல் எப்படி தவிர்ப்பது என்று யோசிக்கிறீர்களா? அப்ப சரியான இடத்திற்குத் தான் வந்து இருக்கீங்க!! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்: கூகிள் தேடலின் போது வலது பக்கம் பாருங்கள். அங்கு இருக்கும் சக்கரத்தைச்   சுட்டுங்கள். அதில் ' Search Settings' ஐ சொடுக்குங்கள். அடுத்து வரும் பக்கத்தின் முதலிலேயே "SafeSearch Filtering" என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே உங்கள் விருப்பங்களைப் பதிவு செய்யுங்கள்!!! வரும் பக்கத்தில் , "SafeSearch Filtering" என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே உங்கள் விருப்பங்களைப் பதிவு

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் என்றார் பாரதியார். பல மொழிகளைக் கற்று உணர்ந்த பாரதியால், தமிழ் மொழியின் இனிமையை உணர முடிந்தது.    தமிழ் மற்றும் தமிழரின் பெருமைகளை  ஒன்று முதல் எட்டு வரை பார்ப்போமா? ஒரே மொழி: 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே' உதித்த மூத்த மொழி நம் தமிழ் மொழி. கி.மு 200 ஆம் ஆண்டிற்கு முன்னரேயே இலக்கணத்திற்கு என தனி நூல் (தொல்காப்பியம்) கொண்ட ஒரே மொழி நம் தமிழ் மொழி தான்! இரு வாழ்க்கை: தமிழர் தன் வாழ்க்கையை அகம், புறம் என இரு வகையாகப் பிரித்து வாழ்ந்தனர். இல்லத்தில் இருக்கும் அன்பும், காதலும் இயைந்த வாழ்க்கை அக வாழ்க்கை. வெளியே நடக்கும் வீரம், கொடை முதலிய கொண்ட வாழ்க்கை புற வாழ்க்கை. முத்தமிழ்: இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூன்று களங்களிலும் தமிழை வளர்த்தனர் தமிழர். இயல் என்பது எழுத்து மற்றும் பேச்சில் பயன்படுத்தப்படும் தமிழ்.  இசை என்பது பண் இசைத்துப் பாடப்படும் தமிழ். நாடகம் என்பது கூத்து மற்றும் ஆடலால் உணர்த்தப்படும் தமிழ். நான்மறை: அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை நான்கு உறுதிப் பொருட்களை

பிராட் ஹாக் வாங்கிய சச்சினின் கையெழுத்து (நம்பாதீங்க - பகுதி 6)

  சாதனைகள் செய்வது அளப்பரிய செயல். சாதனையாளர்கள் மேல் எழும் குற்றச்சாட்டை மறுக்கும் போது, புள்ளிவிவரங்கள் மூலமே பலரும் மறுப்பர். ஆனால், அந்த விவரங்களில் சில தவறுகள் இருக்க வாய்ப்பு உண்டு. இந்த வார ஆனந்த விகடனில் (மார்ச் 28, 2012) வந்த செய்தியும் அது போலத் தான். சச்சினைப் புகழ்ந்து "இனி, இரண்டாவது இன்னிங்ஸ்!" என்கிற கட்டுரை வெளிவந்துள்ளது. 2004 இல் ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியில் சச்சினை சுழல்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் அவுட் ஆக்கி விட்டார், போட்டி முடிந்ததும் சச்சினின் விக்கெட்டைப் பறித்த அந்தப் பந்தைக் கொண்டு வந்து அவரிடமே ஆட்டோகிராஃப் கேட்டு இருக்கிறார் பிராட் ஹாக். 'வாழ்த்துக்கள்... ஆனால், இது இன்னொரு முறை நடக்காது!' என்று எழுதிக் கையெழுத்துப் போட்டார் சச்சின். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, 21 போட்டிகளில் ஹாக்கின் பந்து வீச்சை எதிர்கொண்டு இருக்கிறார் சச்சின். அதில் ஒரு முறை கூட ஹாக்கின் பந்து வீச்சில் அவுட் ஆனது இல்லை.       சில நாட்கள் முன்பு வரை இந்த சம்பவம் பற்றி What is Confidence and Dedication?      என்கிற பெயரில் ஒரு மின்னஞ்சல் உலாவி

சச்சின் 100* # பகுதி 1

            சச்சின் தெண்டுல்கர் நூறு சதங்கள் கடந்து அளப்பரிய சாதனை புரிந்திருக்கிறார் .  சதங்களில் ஒரு சதம் (16 மார்ச் 2012- 100 சதங்கள்) இந்த சாதனை அவரது ரசிகர்களை ( நான் உட்பட ) மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது .              அவர் இதுவரை புரிந்த 100 சாதனைகளைத் தொகுத்து வழங்கும் முயற்சியே இந்த பதிவின் வெளிப்பாடு . அவர் எடுக்கும் ஒவ்வொரு ஓட்டமும் சாதனை தான் என்றாலும் , அவர் புரிந்த மாபெரும் சாதனைகளின் தொகுப்பு சச்சின் 100*.         முதலில் ஒரு நாள் போட்டி களில் அவர் செய்த சில சாதனைகளைப் பார்ப்போம் . முதல் இரட்டை சதம் கண்டவர் : ஒரு நாள் போட்டியில் முதன் முதலில் இரட்டை சதம் அடித்த சாதனை சச்சினுக்குச் சொந்தம் . இந்த சாதனையை 24 பிப்ரவரி 2010 அன்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக புரிந்தார் . ( இடம் : குவாலியர் , இந்தியா )  ஒரு நாள் போட்டியின் முதல் இரட்டை சதம் (24 பிப்ரவரி 2010) 2. அதிக ரன்கள் எடுத்த வீரர் :   ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் என்கிற பெருமையை அன்று பெற்றார் . அதன் பின் , சச்சின் குவிக்கும் ஒவ்வொரு ரன்னுமே அதிக ரன்னிற்கான சாத