என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.
ரயிலில் பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.
சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன
நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய
இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு
ரயிலைப் பயன்படுத்துகிறனர்.
சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்?
"ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி. அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.
ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?
முதல் எழுத்து:
முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர் )
Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)
இரண்டாம் எழுத்து:
இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி
இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.
மூன்றாம் எழுத்து:
மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)
G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்
சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா? அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).
எடுத்துக்காட்டாக, WDM 3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும்.
அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.
சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்!! அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள். உதாரணத்திற்குக் கீழே உள்ள படத்தில் உள்ளதை வாசித்துப் பாருங்கள் !!
பதிவில் உள்ள படங்களின் மேல் சுட்டியைக் (Mouse) கொண்டு செல்லுங்கள்!! அவை எந்த வகை இஞ்சின் என்று அறிந்து கொள்ளலாம்.
நன்றி: இந்திய ரயில்வே ரசிகர் குழு (Indian Railways Fan Club) , விக்கிபீடியா
படங்கள் கூகிள் தேடலின் மூலம் பெறப்பட்டவை.
இந்த பதிவினை எழுத தூண்டுகோலாக இருந்த ரவிசந்திரன் (ட்விட்டர்: @2nrc) அவர்களுக்கு என் நன்றி!
ரயிலில் பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.
சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்?
"ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி. அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.
ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?
ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?
முதல் எழுத்து:
முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர் )
Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)
இரண்டாம் எழுத்து:
இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி
இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.
மூன்றாம் எழுத்து:
மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)
G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்
சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா? அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).
எடுத்துக்காட்டாக, WDM 3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும்.
அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.
சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்!! அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள். உதாரணத்திற்குக் கீழே உள்ள படத்தில் உள்ளதை வாசித்துப் பாருங்கள் !!
என்ன இனி உங்கள் முன் ஒரு ரயில் இஞ்சின் போனால், அது எந்த வகை என்று எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள் தானே?
பதிவில் உள்ள படங்களின் மேல் சுட்டியைக் (Mouse) கொண்டு செல்லுங்கள்!! அவை எந்த வகை இஞ்சின் என்று அறிந்து கொள்ளலாம்.
நன்றி: இந்திய ரயில்வே ரசிகர் குழு (Indian Railways Fan Club) , விக்கிபீடியா
படங்கள் கூகிள் தேடலின் மூலம் பெறப்பட்டவை.
இந்த பதிவினை எழுத தூண்டுகோலாக இருந்த ரவிசந்திரன் (ட்விட்டர்: @2nrc) அவர்களுக்கு என் நன்றி!
இரயில் பற்றிய சுவையானத் தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஆளுங்க. இந்திய இரயிலில் பயணிக்கும் அனுபவம் நேரும்போது இவற்றை நினைவுபடுத்திக்கொள்வேன்.
பதிலளிநீக்குபுது செய்தியா இருக்கே...நல்லாவே இருக்கு..
பதிலளிநீக்குஇரயில் வண்டியை பற்றிய தகவல்கள்....உங்கள் தேடல் தொடரட்டும்!
பதிலளிநீக்குஇரயில் என் வாழ்வில் மறக்க முடியாத நண்பர்களில் ஒருவன். அந்த நினைவுகளை நியாபகப்படுத்தி விட்டீர்கள்.. அருமை..
பதிலளிநீக்குநட்புடன்
கவிதை காதலன்
தங்களின் இப்பதிவு மனதைக் கவர்கிறது.
பதிலளிநீக்குமகிழ்ச்சி.
‘பதிவர்களுக்குப் பத்து பரிந்துரைகள்’ என்னும் என் பதிவைப் பாராட்டிய தங்கள் நல்லுள்ளத்துக்கு என் நன்றி நண்பரே.
அட நியூஸ் புதுசா இருக்கு ...!
பதிலளிநீக்குபுதிய தகவல்களை அறிந்துக் கொண்டேன். நன்றி நண்பா!
பதிலளிநீக்குஹெயா!!! இவ்வளவு இருக்கா
பதிலளிநீக்குபதிவினைப் படித்து கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி!
பதிலளிநீக்குNow I knew few things about train..Thanks for sharing this..
பதிலளிநீக்குமிகவும் புதிய தகவலாக உள்ளது சகோ. சூப்பர் பதிவு.
பதிலளிநீக்குputhiya thagaval
பதிலளிநீக்குபல புதிய தகவல்கள் நன்றி நண்பா
பதிலளிநீக்கு