“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே”
வழுவல கால வகையினானே”
- நன்னூல்
மொழிகளின் தொன்மைக்குச் சான்றே அவற்றின் பழம்பெரும் இலக்கியங்ளே. எனவே, அவற்றிற்கு "பழையன கழிதல்" என்பது பொருந்தா. ஆனால், மொழிகளின் உய்விற்கு புதியன புகுதல் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
பண்டைய மொழிகளின் தற்கால நிலை:
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்கள் மட்டுமே அறியப்பெற்றிருந்த காலங்களில் உலகில் கோலோச்சிய பண்டைய மொழிகள் ஆறு என்று மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகிறனர்.
அவை தமிழ், சமஸ்கிருதம், சீனம், கிரேக்கம், இலத்தீன் மற்றும் எபிரேயம் (ஹீப்ரு) ஆகியன.
இவற்றில், இலத்தீன் மொழி சமஸ்கிருதமும் வழக்கொழிந்து போய் பிரார்த்தனைக்கு மட்டுமே பயன்படுகிறன. கிரேக்கமும், ஹீப்ருவும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது மீண்டிருக்கிறன. சீனமோ தன்னைப் படையெடுத்து வந்தவர்களிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டது. பல்வேறு படையெடுப்புகளையும் தாங்கி, பிற மொழிக் கலவைகளாலும் பாதிப்புறாமல் இன்றும் தழைத்தோங்கும் மொழி தமிழ் ஒன்று தான்.
இவற்றில், இலத்தீன் மொழி சமஸ்கிருதமும் வழக்கொழிந்து போய் பிரார்த்தனைக்கு மட்டுமே பயன்படுகிறன. கிரேக்கமும், ஹீப்ருவும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது மீண்டிருக்கிறன. சீனமோ தன்னைப் படையெடுத்து வந்தவர்களிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டது. பல்வேறு படையெடுப்புகளையும் தாங்கி, பிற மொழிக் கலவைகளாலும் பாதிப்புறாமல் இன்றும் தழைத்தோங்கும் மொழி தமிழ் ஒன்று தான்.
முற்காலங்களில் தமிழ்:
சங்கக்காலத்தில் தமிழ் மொழி மூன்று வகைகளின் மூலம் செழித்தோங்கியது. அவை இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய பெயர்களில் வளர்ந்தது. உலகிலேயே மிகவும் தொன்மையான இலக்கன நூலான "தொல்காப்பியம்" தமிழ் மொழி அன்றே ஒரு முழு வடிவம் பெற்றிந்தமைக்குச் சான்றாக விளங்குகிறது.
அதன் பின், பாமரரும் படித்து புரிந்து கொள்வதற்கு என "உரைநடைத் தமிழ்" வந்தது. வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் உருவான பின், தமிழ் மொழி அவற்றின் மூலமாகவும் மக்களை அடைய முனைந்தது.
அணுத்தமிழ்:
ஆங்கிலேயர்கள் உலகை ஆண்ட போது, உலகெங்கும் ஆங்கில மொழி புகுந்தது. அதன் விளைவாக, பெரும்பாலான ஊடகங்களிலும் ஆங்கிலமே பிரதான மொழியாக மாறியது.
இன்றைய காலத்தில், மொழியின் வளர்ச்சிக்கு அது எல்லா ஊடகங்களிலும் பரப்ப வல்லதாக இருத்தல் வேண்டும். இதை உணர்ந்த சில தமிழ் ஆர்வலர்களின் முயற்சியால் தான் இன்று உலகெங்கும் அணுத்தமிழ் உதித்து வளர்ந்து வருகிறது.
கணிணித் தமிழ்:
அணுத் தமிழ் வளர்ச்சியின் முதல் படியே கணிணியில் தான் துவங்கியது. விண்டோஸ் இயங்கு தளம் உருவாகும் முன்னரே, கணிணித் தமிழ் பயன்பாட்டில் இருந்தது.
மக்கள் மத்தியில் விண்டோஸ் உருவான பிறகே கணிணி பிரபலமாகத் துவங்கியது. விண்டோஸ் அறிமுகப்படுத்த போது, ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மக்களின் அறியாமை காரணமாக இடையில், கணிணித் தமிழ் பெரிதாய் வளர்ச்சியின்றி முடங்கியிருந்தது. எனவே, தமிழ் மொழி பெரும்பாலும் தட்டச்சு செய்வதற்கு மட்டுமே கணிணியில் உலா வந்தது.
இப்போது மீண்டும் தமிழ் ஆர்வலர்களின் ஆர்வத்தால், கணிணித் தமிழ் மறு எழுச்சி பெற்றுள்ளது. பலரின் அயராத முயற்சியால், இன்று கணிணி தமிழ் பேசுகிறது.
தமிழ் பேசும் இயங்குதளங்கள்:
லினக்ஸ் என்று சொல்லப்படும் கட்டற்ற திறமூல இயங்குதளங்கள் பலவும் இன்று தமிழ் பேசும் திறன் பெற்று விட்டன. விண்டோஸ் பதிப்பு தமிழில் கிடைக்கிறது என்றாலும், அதனைஅறிந்தவர்கள் மிகவும் குறைவு.
உபுண்டு இயங்குதளத்தில் தமிழ் பதிப்பு உள்ளது. மேலும், விரும்பினால், நிறுவல் மொழியையே தமிழாக வைக்க வகை செய்கிறது.
தமிழில் பயன்பாடுகள்:
பெரும்பாலான பயன்பாடுகள் தமிழில் உள்ளன. தமிழில் பயன்பாடு கிடைக்கும் போது ஆங்கிலத்தில் ஏன் பயன்படுத்த வேண்டும்?
உலாவிகளில் தமிழ்:
நெருப்பு நரி என்றழைக்கப்படும் பயர்பாக்ஸ் உலாவி தான் முதன்முதலில் தமிழை இணையத்தில் அறிமுகம் செய்தது. அதன் பிறகு, குரோம், எபிக், ஓபரா முதலிய உலாவிகள் தமிழில் பேசத் துவங்கின.
இணையத் தமிழ்:
பல காலமாக இணையத்தமிழ் இருந்தாலும், இணையத்தமிழ் வலைப்பூக்களின் அறிமுகத்திற்குப் பின் மிகவும் வேகமாக வளர்ச்சி அடையத் துவங்கியது. இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள தயங்கிய பலரும் வலைப்பூ துவங்கி தங்கள் எண்ணங்களையும், திறமைகளையும் பதிவு செய்ய ஆரம்பித்தனர். இப்படி எழுதத் துவங்கிய பலரும் பிறர் எழுதிய படைப்புகளையும் படித்து மகிழ இணையத்தமிழ் அசுர வளர்ச்சி அடைந்தது.
பதிவர்கள் பெருகியதால், பதிவர்கள் அனைவரும் தங்கள் பதிவுகளைத் தொகுக்க இன்ட்லி, தமிழ்10, யுடான்ஸ், வலைச்சரம் போன்ற பல திரட்டிகள் துவங்கப்பட்டன. திரட்டிகளின் வரவால் பதிவுகளின் தரம் மேலும் மேம்பட்டதோடு, பதிவுகள் மேலும் பலரைச் சென்றடைந்தது.
விக்கிபீடியா தனது தளத்தின் தமிழ் பதிப்பை வெளியிட்டதும் இணையத்தமிழ் வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும். இன்று பல தமிழ் பதிவுகள் உலகெங்கும் வலம் வருகிறன.
அலைத்தமிழ்:
இன்று பல அலைபேசிகளில் தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் வழிவகைகள் உள்ளன. நோக்கியாவின் பல அடிப்படை மாதிரிகளில் தமிழையே இயங்கு மொழியாக மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. (பிற மாதிரிகளில் காணோம்!!).
விலையுயர்ந்த பல அலைபேசிகளில் தமிழில் எழுதும் வசதிகளும் இருக்கிறன. தமிழ் மொழி ஆதரவு இல்லாத பல பேசிகளிலும் அவற்றைச் செயலாக்குவதற்கென்றே இணைய இணைப்புகள் உள்ளன.
பணத்தமிழ்:
இன்று பல தானியக்க வங்கி இயந்திரங்கள் வாடிக்கையாளர்களுடன் தமிழில் பணமாற்றம் செய்கிறன. ஆங்கிலம் அறியாதவரும் பயன்படுத்தும் வகையில், தானியக்க வங்கி இயந்திரங்களும் தமிழ் பேசுவது அணுத்தமிழ் வளர்ச்சிக்கு சான்றாக விளங்குகிறது.
வளரும் அணுத்தமிழ்:
இன்று மிண்ணணு சாதனங்கள் பலவற்றிலும் அணுத்தமிழ் புகுந்திருப்பதற்கு அதற்காக அயராது உழைத்தவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். Launchpad என்கிற தளம் மூலம், தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து பல கணிணி மற்றும் இணைய பயன்பாடுகளைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டே இருக்கிறனர்.
வளர்ச்சியும் முட்டுக்கட்டைகளும்:
அணுத்தமிழ் வளர்ச்சி அபரிதமாக இருந்தாலும், அதனைப் பயன்படுத்துபவர்கள் குறைவு என்பது வேதனை அடைய வைக்கிறது.
அறியாமையின் காரணமாக சிலரும், வறட்டு கெளரவம் காரணமாக பலரும், ஆங்கிலத்திலேயே பயன்படுத்தி பழகியமையால் இலகுவின் காரணமாக பலரும் அணுத்தமிழைப் புறக்கணிக்கிறனர்.
தமிழ் மொழி திரையில் இருந்தாலும், ஆங்கிலத்தையே பலரும் தெரிவு செய்வது வேதனைக்குரியது. இதில் தமிழுக்காக அறைகூவல் விடுபவர்களும் அடக்கம்.
முடிவுரை:
மொழியின் வளர்ச்சி மொழியினைப் பேசுபவர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. முடிந்தவரை தமிழ் மொழியை அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவோம். தமிழை வளர்ப்போம்.
...................................................................
மேலே உள்ள படங்களில் தமிழ், அலைபேசி, தானியக்க வங்கி இயந்திரம் தவிர மற்ற அனைத்தும் என் கணிணியிலேயே தமிழைப் பயன்படுத்தி படம் பிடிக்கப்பட்டன. இதுவே அணுத் தமிழ் வளர்ச்சிக்கு சிறந்த சான்று!!
மிக அழகாக தொகுத்திருக்கிறீர்கள். நன்றி நண்பா!
பதிலளிநீக்குதமிழைப் பயன்படுத்தும் வசதி இருந்தும் பலரும் புறக்கணிப்பதை நினைத்துத் தங்களைப் போலவே நானும் வேதனைப்படுகிறேன்.
பதிலளிநீக்குதங்களின் தமிழ்ப் பற்றும் தமிழ்ப் பணியும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நன்றி நண்பரே.
கருத்திற்கு நன்றி நண்பர்களே!
பதிலளிநீக்குதமிழின் வளர்ச்சி படிகளின் தொகுப்பு மிக அருமை. நன்றி நண்பா!
பதிலளிநீக்குpadhivu arumai vaazhththukkal
பதிலளிநீக்குsurendran