அன்பு நண்பர்களே,
எனது பிறந்த நாளான 13 ஜூலை 2011 அன்று இந்த வலைப்பூவினைத் துவங்கினேன். ஏதோ ஓர் ஆர்வத்தில் துவங்கிய எனது வலைப்பூவில் இதோ எனது ஐம்பதாம் பதிவினை (50*) எழுதும் பொன்னான தருணம் வந்துவிட்டது.
எனது பணிசூழல் காரணமாகவும், தமிழக மின்சூழல் காரணமாகவும் அடிக்கடி பதிவு எழுதுவதற்கு விடுப்பு எடுக்க வேண்டி வந்தது. எப்போதாவது எழுதும் எனக்கு பல பதிவர்கள் ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தனர்.
வலைப்பூக்களைத் தொடுத்து உருவாக்கப்பட்ட வலைச்சரத்தில் எனது மூன்று பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றை எனது எழுத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்கிறேன். இவையே ஊக்கம் கொடுத்து மேலும் மேலும் என்னை எழுதத் தூண்டுகிறன.
தொடர்ந்து எனக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
வலைப்பூ துவங்கும் போது, வலைப்பூவிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த போது, எனது மனதில் பல பெயர்கள் தோன்றின.
எனது அம்மா சொன்ன பெயரான "அவிழ்மடல்" என்னும் பெயர் தான் எனது வலைப்பூவில் நீங்காமல் நின்று விட்டது.
.......................................................................................................................................................................................................
பூமிக்கு வரும் முன் ஒரு குழந்தை இறைவனிடம் கேட்டது: "நாளை நான் பூமிக்குச் செல்ல வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால், நான் அங்கு எப்படி வாழ்வேன்?"
"உன் வருகைக்காக அங்கு ஒரு தேவதை காத்துக் கொண்டிருப்பாள். அவள் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார்" என்றார் கடவுள்.
"என்னை யார் காப்பாற்றுவார்?" என்றது குழந்தை.
"அந்த தேவதை எப்போதும் உன்னைக் காத்துக் கொண்டு இருப்பாள். தனது உயிரை விட மேலாக உன்னை கருதுவாள்" என்றார் கடவுள்.
"தேவலோகத்தில் இருந்த மகிழ்ச்சி அங்கு எப்படி கிடைக்கும்?" என்றது குழந்தை.
"உன் தேவதை உனக்காக பாடுவாள். அவள் அன்பின் கதகதப்பினால் நீ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாய்" என்றார் கடவுள்.
"ஆனால், பூமியில் உள்ள மொழி எனக்குத் தெரியாதே?" என்றது குழந்தை.
"கவலை வேண்டாம். உன் தேவதை உன்னிடம் அழகிய, இனிய சொற்களால் பேசுவாள். மிக்க அன்புடனும், கனிவுடனும், பொறுமையுடனும் உனக்கு அவர்களது மொழியைக் கற்று தருவாள்" என்றது குழந்தை.
"அப்படியா! எனது தேவதையின் பெயரைச் சொல்லுங்களேன்.. ஆசையாக இருக்கிறது" என்றது குழந்தை.
"நீ அவளை 'அம்மா' என்று அழைப்பாய்" என்றார் கடவுள்.

- கடவுளே! - அறிமுகம் செய்தவர்: சகோதரி 'குட்டி சுவர்க்கம்' ஆமினா [ வித்தியாசமாய் ]
- பயணச்சீட்டால் பயங்கர பல்பு வாங்கிய பிரபல பதிவர் - அறிமுகம் செய்தவர்: நண்பர் வீடு சுரேஷ் குமார் [ பதிவுலகில் விழிப்புணர்வு! ]
- வண்ணங்களும் பெண்களும் - அறிமுகம் செய்தவர்: கீதமஞ்சரி அக்கா [ ஆசை அன்பு இழைகளினாலே... ]
இவற்றை எனது எழுத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்கிறேன். இவையே ஊக்கம் கொடுத்து மேலும் மேலும் என்னை எழுதத் தூண்டுகிறன.
தொடர்ந்து எனக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
வலைப்பூ துவங்கும் போது, வலைப்பூவிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த போது, எனது மனதில் பல பெயர்கள் தோன்றின.
எனது அம்மா சொன்ன பெயரான "அவிழ்மடல்" என்னும் பெயர் தான் எனது வலைப்பூவில் நீங்காமல் நின்று விட்டது.
.......................................................................................................................................................................................................
பூமிக்கு வரும் முன் ஒரு குழந்தை இறைவனிடம் கேட்டது: "நாளை நான் பூமிக்குச் செல்ல வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால், நான் அங்கு எப்படி வாழ்வேன்?"
"உன் வருகைக்காக அங்கு ஒரு தேவதை காத்துக் கொண்டிருப்பாள். அவள் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார்" என்றார் கடவுள்.
"என்னை யார் காப்பாற்றுவார்?" என்றது குழந்தை.
"அந்த தேவதை எப்போதும் உன்னைக் காத்துக் கொண்டு இருப்பாள். தனது உயிரை விட மேலாக உன்னை கருதுவாள்" என்றார் கடவுள்.
"தேவலோகத்தில் இருந்த மகிழ்ச்சி அங்கு எப்படி கிடைக்கும்?" என்றது குழந்தை.
"உன் தேவதை உனக்காக பாடுவாள். அவள் அன்பின் கதகதப்பினால் நீ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாய்" என்றார் கடவுள்.
"ஆனால், பூமியில் உள்ள மொழி எனக்குத் தெரியாதே?" என்றது குழந்தை.
"கவலை வேண்டாம். உன் தேவதை உன்னிடம் அழகிய, இனிய சொற்களால் பேசுவாள். மிக்க அன்புடனும், கனிவுடனும், பொறுமையுடனும் உனக்கு அவர்களது மொழியைக் கற்று தருவாள்" என்றது குழந்தை.
"அப்படியா! எனது தேவதையின் பெயரைச் சொல்லுங்களேன்.. ஆசையாக இருக்கிறது" என்றது குழந்தை.
"நீ அவளை 'அம்மா' என்று அழைப்பாய்" என்றார் கடவுள்.
கடவுள் காட்டிய தேவதையான எனது அம்மாவிற்கு இந்த பதிவினைஅர்ப்பணிக்கிறேன்!!!!!!
தரமான பதிவுகளை எழுதிவரும் நீங்கள் மேலும் நல்ல பதிவுகளை தந்து பதிவுலகில் பெயரோடும் சிறப்போடும் இருக்க வாழ்த்துகிறேன்! வாழத்துகள் நண்பரே!
பதிலளிநீக்குஅம்மாவை பற்றி சொல்லியது நன்று! தேவதையின் ஆசி மட்டுமல்ல நல்ல நட்புகளின் ஆசியோடு தொடரட்டும் உங்கள் பணி! வாழ்க வளமுடன்!
ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா! அம்மா வைத்த பெயர் அழகாக உள்ளது.
பதிலளிநீக்குஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்... மென்மேலும் சிறந்த பதிவுகள் எழுத வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குஅம்மா வைத்த அவிழ்மடல் பெயர் அருமை....
அட ஐம்பதா ..? பெரிய விஷயம் தான்.., வாழ்த்துக்கள் அண்ணே ..!
பதிலளிநீக்குமே தின வாழ்த்துகள்
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
we can get more traffic, exposure and hits for you
To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்
நன்றி
தமிழ்.DailyLib
congrats for your 50th posting boss ..
பதிலளிநீக்குkalakungaa
from,
http://tamil.dailylib.com
உங்கள் பிறந்த திகதியில் தான்(மே-13). மேற்கத்தைய நாடுகள் பலவற்றில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.அவதானித்தீர்களா? அம்மா என்பவள் ஒவ்வொருவருக்கும் அவிழ்மடல் தான். அன்பு என்கின்ற தேன் தர குழந்தைகளுக்காய் மலர்ந்த மடல்.
பதிலளிநீக்குநல்ல தகவல்.. மகிழ்ச்சி!!
நீக்கு(நான் பிறந்த நாள் ஜூலை 13)
வாழ்த்து கூறி கருத்திட்ட வீடு சுரேஸ்குமார், அப்துல் பாசித், தமிழ்வாசி பிரகாஷ், வரலாற்று சுவடுகள், கிரிஷி, மற்றும் தீபிகா ஆகியோருக்கு என் நன்றி!!
பதிலளிநீக்கு