06 மே 2012
சாப்பிடும் போது மட்டுமே தொலைக்காட்சி சேனல்களை நோண்டும் பழக்கம் உடையவன் நான். (மீதி நேரத்தில் தொலைக்காட்சியில் வீட்டிலுள்ளவர்கள் ராஜ்ஜியம் தான் என்பதால், அங்கு அமர்வதே இல்லை)
ஞாயிறு அன்று இரவு சன் டிவியில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" என்று ஓடிக்கொண்டிருந்தது. 'வர வர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே சூதாட்டம் போல் ஆகி விட்டன' என்று சொல்லிக் கொண்டே ரிமோட்டால் சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்தேன்.
அப்போது தான் "பொதிகை தொலைக்காட்சி" வந்தது.
முன்பு DD5 ஆக இருந்த காலத்தில், தொலைக்காட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்று வாசகர்களிடம் ஆலோசனை கேட்டு, வாக்கெடுப்பு நடத்தி 'பொதிகை' என்ற அழகான பெயரைத் தொலைக்காட்சிக்கு சூட்டினர் நிலையத்தார். கேபிள் டிவி வருவதற்கு முன் அரசனாக கோலோச்சிய பொதிகையைத் தற்போது பார்ப்பவர்கள் அரிது.
இந்த பதிவினை எழுதத் தூண்டியதே அவர்கள் தொன்று தொட்டு செய்து வரும் ஒரு செயல் தான்.
அப்படி என்ன செய்தார்கள் என்று கேட்கிறீர்களா?
தங்களுக்கு நேயர்கள் எழுதிய கடிதங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியின் பெயர் "எதிரொலி".
தாங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளுக்கு வரும் எதிரொலிகளைத் தான் அவர்கள் படித்தனர். தபால் அட்டைகள், உள்நாட்டு அஞ்சல்கள் மற்றும் பொது அஞ்சல்கள் முதலியவற்றில் தங்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிய நேயர்களின் கருத்துகளைப் படித்தனர். நிகழ்ச்சிகளைப் பார்த்து பதில் எழுதும் மக்கள் இதனைப் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்?
நிகழ்ச்சியில் இருந்து சில துளிகள்:

- ஒரு நிகழ்ச்சியைப் பாராட்டி பலர் எழுதியிருந்தால், அனைவரது பெயரையும் வாசித்து நன்றி கூறினர். அதுமட்டுமல்லாது, பிறரது மடல்களைப் படித்துக் காட்டததற்கு வருத்தமும் தெரிவித்தனர்.
- தங்களுக்கு வந்த பாராட்டுகளை மட்டும் அவர்கள் வாசிக்கவில்லை!! வசவுகளையும் வாசித்தனர். வசவுகளை வாசித்த பின்னர், அதற்கு மன்னிப்பு கோரி பிற்காலத்தில் குறைகள் எழாமல் பார்த்து கொள்வதாக கூறினர்.
- நிகழ்ச்சிகளின் நேரம் குறித்த கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளித்தனர்.
- நிகழ்ச்சிகளுக்கு வந்த ஆலோசனைகளையும் செயல்படுத்த முனைவதாக கூறினர்.
எதிரொலிக்கு எதிரொலி:
- நிகழ்ச்சியில் இயன்ற அளவு தமிழை மட்டுமே பயன்படுத்தினர் (நேயர்கள் எழுதியதைத் தவிர்த்து). அதுவும் அழகு தான்!
- ஒரு நிகழ்ச்சியைப் பாராட்டி சில நேயர்கள் கவிதை எழுதி அனுப்பினர். தொகுப்பாளர்கள் அனைத்து கவிதைகளையும் பொறுமையாக படித்துக் காட்டி எழுதியவர்களுக்கு நன்றியும் சொன்னார்கள் .
- ஒரு நேயர் பாட்டு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் பெண்ணின் தொடர்பு எண்ணைக் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு நாசூக்காக அவர்கள் மறுத்த விதம் அழகு!!
- ஒரு நேயர் பொதிகையில் போடுவதாய் சொல்லும் படம் ஒன்று; ஆனால், திரையிடும் படம் ஒன்று என்று குறை கூறியிருந்தார். தொகுப்பாளர்கள் பொதிகையில் என்றுமே ஒளிபரப்பாகும் படம் பற்றி விளம்பரப்படுத்துவதில்லை என்று தெரிவித்தனர். நேயர்கள் பல சேனல்களைப் பார்ப்பதால் தவறாக எண்ணியிருக்கலாம் என்றனர்.
- ஒரு நேயர் பொதிகையில் வெளிவரும் இசை நிகழ்ச்சிகள் பற்றி கேட்டு எழுதியிருந்தார். அனைத்தையும் அவர்கள் தங்கு தடையின்றி சொன்ன விதம் அருமை.
- நிகழ்ச்சியின் இறுதியில் கடிதம் எழுதிய பிற நேயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் கடிதத்தைப் படிக்கமல் விட்டதற்கு வருத்தம் தெரிவித்தனர்.
இன்று எத்தனை சேனல்கள் தங்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிய நேயர்களின் கருத்துகளை இப்படி படிக்கிறார்கள்?
மறுமொழிக்குப் பின்:
வந்திருக்கும் மறுமொழிகளைப் பார்க்கும் போது, இக்கட்டுரை நான் சொல்ல வந்த கருத்திற்கு எதிர்மறையாகப் பிரதிபலிக்கிறதோ என்கிற ஐயம் ஏற்பட்டு விட்டது.
இன்று நேயர்களை வைத்து சூதாட்டம் நடத்தி, அதன் மூலம் பல சேனல்களும் கோடிகளில் சம்பாதிக்கிறன. அவற்றையெல்லாம் நாம் அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறோம். அவற்றில் ஒன்று கூட நேயர்கள் தங்களுக்கு எழுதும் கடிதங்களைப் படிப்பதில்லை. நிகழ்ச்சியைப் பற்றி எழுதும் நேயர் ஒருவருக்குத் தன் கருத்து சென்றடைந்ததா என்று எப்படி தெரியும்?
சூதாட்டங்கள் எதிலும் ஈடுபடாத பொதிகை மட்டுமே தங்கள் நேயர்கள் (குறைவான அளவாக இருப்பினும்) எழுதுவதை வாசித்து காட்டுகிறது. இது நேயர்களின் கருத்துகளுக்குக் கொடுக்கப்படும் மதிப்பு அல்லவா?
ஒரு காலத்தில் பொதிகை பார்க்கும்போது போட்டிக்கு வேறு எந்த சேனல்களும் இல்லாத தால் நன்றாக இருந்தது.ஆனால் இப்போ அப்படி இல்லையே...
பதிலளிநீக்குகாலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாதவர்கள் வெற்றி பெற முடியாது, இதற்க்கு பொதிகை தொலைக்காட்சி நல்ல உதாரணம் ..!
பதிலளிநீக்குநண்பர்களே, எனது கருத்து பொதிகை வெற்றி பெறாமல் போனதைப் பற்றியது அல்ல. அவர்கள் தங்கள் நேயர்களுக்கு அளிக்கும் மதிப்பினைப் பற்றியது. வேறு எந்த சேனலும் தங்கள் நேயர்களின் நிறைகுறைகள் வெளிப்படையாக சொல்வதில்லை!
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குசரியாகச் சொன்னீர்கள் அருண். எட்டு வருடங்களுக்கு முன்னர் பொதிகையில் வெளிவந்த தகவல் தொழில்நுட்பம் நிகழ்ச்சிக்கு மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள் என ஒரு கடிதம் அனுப்பினேன். மறு நிகழ்ச்சியிலே என் விருப்பதை நிறைவேற்றி, ஒரு கிராமப்புற மாணவனின் ஆர்வம் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாகக் கருதுகிறோம் என நன்றி கூறியிருந்தனர். இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. இது சமூகத்திற்கான தொலைகாட்சி, காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு (மானாட மயிலாட போல அல்ல, தொழில்நுட்பத்தில்) தன் சேவையை அதிக மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். தற்போதைய சேனல்களில் டிஸ்கவரி தமிழ் என் உள்ளம் கொள்ளை கொண்ட மாதிரித் தொலைகாட்சி.
நீக்கு/*
பதிலளிநீக்குசூதாட்டங்கள் எதிலும் ஈடுபடாத பொதிகை மட்டுமே தங்கள் நேயர்கள் (குறைவான அளவாக இருப்பினும்) எழுதுவதை வாசித்து காட்டுகிறது. இது நேயர்களின் கருத்துகளுக்குக் கொடுக்கப்படும் மதிப்பு அல்லவா?
*/
நானும் ஆமோதிக்கிறேன்!