புராணக்கதைகளில் ராட்சதர்கள் பற்றிய கதைகளைப் படித்திருப்போம். அவர்கள் மனிதர்களை விட மிக உயரமாவும், திடமாகவும் இருந்ததாக இருக்கும். வேதங்கள் அசுரர்களை ராட்சதர்களாக சித்தரிக்கிறன. பீமனின் மகன் கடோத்கஜன் கூட ராட்சதன் தான்..
இதோ இந்த எலும்பு கூடுகள் உங்களுக்குப் பதில் சொல்லும்!!
மகாபாரதத்தில் வருகின்ற வீர கதா நாயகர்களில் ஒருவன் கடோத்கஜன். இவன்
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான வீமனுக்கும் இடும்பி என்கிற அரக்கிக்கும்
பிறந்தவன். இவன் மலை போன்று உயரமான பிரமாண்ட உடலை கொண்டவன் என்று
சித்திரிக்கப்படுகின்றான். ஏன் இந்த பீடிகை என்று யோசிக்கின்றீர்களா?
கடோற்கஜன் போன்ற அரக்கர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா? என்று நீங்கள்
கேள்வி எழுப்பக் கூடும். ஆனால் நம்ப முடியாத உண்மை ஒன்று நிகழ்ந்து உள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் வட இந்தியாவில் உள்ள சிறிய பாலைவனம் ஒன்றில்
தேசிய புவியியல் ஆய்வு (National Geographic Channel) நிபுணர்கள் இராணுவத்தின் உதவியுடன் ஒரு பிரதேசத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பிரதேசம் இராணுவ நியாயாதிக்கத்தின் கீழ் உள்ளதாலேயே இராணுவத்தின் உதவி பெறப்பட்டது.
இவர்கள் நிலத்துக்கு கீழ் இருந்து மிக மிகப் பெரிய எலும்புக் கூடுகளை
மீட்டனர். இவை கடோத்கஜன் போன்ற அரக்கர்களின் பிரமாண்ட உடலின் எலும்புக்
கூடுகள்தான் என்று இந்நிபுணர்கள் விசுவாசிக்கின்றனர். இந்த இடத்துக்கு
தேசிய புவியியல் (Natgeo)ஆய்வு நிபுணர்கள் தவிர வேறு யாரும் செல்ல முடியாது என
இந்திய அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.
இது குறித்த தகவல்களை அந்நாட்களில் Hindu Voice பத்திரிகை பிரசுரித்து இருந்தது.
இந்த செய்தி Times of India நாளிதழின் 22 ஏப்ரல் 2004 மும்பை பதிப்பிலும் வெளியானதாம். (தேடினால் கிடைக்கவில்லை)
செய்தி வெளியீடு:
Ghatotkach Skeleton : Mahabhart Bhima's son Found
Archeologists discover remains of a huge human skeleton
இந்த செய்தி தமிழிலும் வெளியாகியுள்ளது:
கடோத்கஜன் போன்ற இராட்சதர்களின் எலும்புக் கூடுகள் அதிர்ச்சிப் புகைப்படங்களுடன்
என்னங்க? ஆச்சரியமாக இருக்கா??
ஆனால்.............
இதெல்லாம் டூப்பு!! போட்டோசாப் தான் டாப்பு!!
பண்டைய காலத்தில் "Mastodon" என்கிற பெரிய யானைகள் (நாம் Mammoth என்று படித்து இருப்போம்!) இருந்தன. அவற்றின் எச்சங்களை (எலும்புகள்) வானில் இருந்து 2000 ஆம் ஆண்டில் எடுத்திருக்கிறார்கள்.
இந்த படத்தைக் கண்டார் கனடாவின் அயர்ன் கைட் (Iron Kite) என்பவர். அதில் யானைக்குப் பதில் மனிதனின் எலும்புகளை மாற்றி Archaeological Anomalies 2 என்கிற புகைப்பட போட்டிக்கு (2003 இல்) அனுப்பி வைத்தார். படம் அந்த போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றது.
அந்த படத்தைப் பார்த்த யாரோ செய்த திருவிளையாடல் தான் இது!!
சரி, முதல் படம் சரி.. மற்றவை??
இரண்டாம் படம் - உருவாக்கியவர்: அனாகின் (Anakinnnn)
மூன்றாம் படம் - உருவாக்கியவர்: அமரன்டோ (Amaranto )
[சடலத்தின் கையில் துப்பாக்கி உள்ளதைக் கவனிக்கவும்]
மூன்று படங்களும் Worth1000 என்கிற தளம் 2003-இல் நடத்திய Archaeological Anomalies 2 என்கிற போட்டிக்கு அனுப்பப்பட்ட பதிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடோத்கஜனாக இருக்கும் இந்த ராட்சத எலும்பு ஒவ்வொரு நாட்டிலும் (கிரேக்கம், மலேசியா, போர்த்துகல், எகிப்து, கென்யா, தென்னாப்பிரிக்கா) அந்த ஊரின் ராட்சதரின் பெயரில் உலாவுகிறது!!!
எனவே, இது ஒரு பொய் படம் என்று நேசனல் ஜியாகரபி (National Geography) விளக்கம் கொடுத்துள்ளது: "Skeleton of Giant" Is Internet Photo Hoax
IronKite அந்த படத்தை உருவாக்க 2 மணி நேரம் தான் பிடித்ததாம். ஆனால், இந்த படம் ராட்சதர்களைக் கண்டுபிடித்ததாக 9 வருடங்களாக வலம் வருகிறது.!!
நன்றி: பத்மாசீனிவாஸ், ஹோக்ஸ்லேயர்
நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண: நம்பாதீங்க- தொடர்
அப்படிப் பட்ட ராட்சதர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா?அதற்கு எதுவும் ஆதாரம் உண்டா?

உண்மை

நம்ப முடியாத விஷயங்கள்.. படிக்க படிக்க தெளிவாகியது..
பதிலளிநீக்கு"நம்பாதீங்க" தலைப்பு பொருத்தமே.. அருமையான முயற்சி அருண். தொடருங்க...
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.. வாழ்த்துகள்...
நம்பி வாசிச்சேன் கடைசில கவுத்துடீங்களே ..!
பதிலளிநீக்குஅதான் பேர்லயே "நம்பாதீங்க" என்று போட்டிருக்கேனே!!
நீக்குநம்பாதிங்க பகுதியில் உண்மையை சொல்லி நம்ப வச்சுட்டிங்க.....
பதிலளிநீக்குதொடருங்கள்
நல்ல விளக்கங்கள் ! நம்ப மாட்டேன்க !
பதிலளிநீக்குபடித்து கருத்திட்ட தங்கம் பழனி, வரலாற்று சுவடுகள், தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கு என் நன்றி!
பதிலளிநீக்குநம்புவதற்கு ஒரு கூட்டம் உள்ள வரை இப்படி கட்டுக்கதைகள் வரத்தான் செய்யும்
பதிலளிநீக்கு