மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..
" ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?"
"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!"
"தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?"
எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!!
பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்...
அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!!
இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!!
**************
2004 ஆம் ஆண்டு..
பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி.
"பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"
"நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கிறோம்"
அடுத்த பொதிகை நிகழ்ச்சியிலேயே, மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என்று அருமையாக விளக்கினார்கள்.
அன்று மின்னஞ்சல் உருவாக்க வழி கேட்டவர் இன்று கணிணித் துறையில் பெரிய புலியாக இருக்கிறார். பலருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் கணிணி மெம்பொருட்களைப் பற்றி தனது தளத்தில் விளக்கி வருகிறார். திறமூல சமூகத்திலும் ஆர்வம் கொண்டு இருக்கிறார்.
அவர் வேறுயாருமல்ல... நமது "தமிழ் CPU " ந.ர.செ.ராஜ்குமார்!
****************
இப்ப இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்!!
2003 ஆம் ஆண்டு
"ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்.. கவனமா கேட்டுக்க!!!"
இத நான் சொல்லலீங்க.. எங்க பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க..
அவங்க அப்பவே MBA முடிச்சு ஒரு பேங்க்ல வேலை செய்துகிட்டு இருந்தாங்க!
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பின்னால், மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பில் சேர்த்து விடும் முயற்சியில் தீவிரமாக இருந்தார் என் அப்பா.
அப்போது தான் முதல் முறையாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைய விண்ணப்பங்கள் (Online Application) வந்த நேரம். அதில் விண்ணப்பிக்க கட்டாயம் மின்னஞ்சல் முகவரி வேண்டும். அப்படித் தான் எனக்கு மின்னஞ்சல் முகவரிக்கான தேவை ஏற்பட்டது.
அப்போது தான் நான் அக்காவின் உதவியை நாடினேன். அவர் பொறுமையாக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கும் முறையினைச் செயல் வடிவத்தில் காட்டினார். அந்த செயலாக்கத்திலேயே எனது முதல் மின்னஞ்சல் முகவரியும் உருவானது. (அப்போது யாஹூ தான் பிரபலம் எனவே, அதில் தான் உருவானது)
"தம்பி.. ஈமெயில் ஐடி கிரியேட் பண்றது முக்கியமில்ல. பாஸ்வேர்ட மறக்காம வெச்சுக்கணும்" என்றார். நானும் சரி என்பது போல் தலையாட்டினேன்.
அதன் பிறகு, நான் இணையத்தில் விண்ணப்பிக்காமல் நேரடியாக விண்ணப்பித்தது வேறு விசயம்!
*********
சில மாதங்கள் கழித்து..
கல்லூரியில் சேர்ந்தாயிற்று. மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பிரவுசிங் சென்டர் போனோம்.
"யோவ் ஆளுங்க.. நீ மெயில் எல்லாம் செக் பண்ண மாட்டியா?"
"இதுவரைக்கும் பண்ணதில்ல"
"அடிக்கடி செக் பண்ணிப் பார்க்கணும் மச்சான்!! சரி, உன் மெயில் ஐடி, பாஸ்வேர்ட் சொல்லு"
"பாஸ்வேர்ட் யாருக்கும் சொல்ல மாட்டேன்.. வேண்டும்னா நானே அடிக்கிறேன்"
"சரி..போ!! உன் மெயில் ஐடி சொல்லு"
"அப்படின்னா??"

rompa paduththireenka...
பதிலளிநீக்குஹி ஹி ஹி .., உங்கமேல தப்பில்லை அவங்க பாஸ்வேர்ட் தானே பத்திரமா வச்சுக்க சொன்னாங்க ஈமெயில் ஐடியை சொல்லலையே ஹி ஹி ஹி ..!
பதிலளிநீக்குஹி.. ஹி..
நீக்குசூப்பர்... மாமு.. நல்லா சிரிச்சுட்டேன்.. எனக்கு இருந்த டென்சனெல்லாமே குறைஞ்சிடுச்சு....!!!!!
பதிலளிநீக்குஆளுங்க.. இப்படி கூட எழுதுவாரா???....நான் அவருக்கு தொழில்நுட்பம் மட்டும்தான் தெரியும்னு நெனைச்சேன்... !!!
பதிவோட ஹைலைட்டே இதுதான்... "சரி..போ!! உன் மெயில் ஐடி சொல்லு"
"அப்படின்னா??"
பதிவை முழுசும் படிச்சாதான் இந்தப் பதிவிற்கான பலனும் கிடைக்கும்...!!!
நன்றி!
நீக்குஎன்னை ஏன் பாஸ் இதில இழுக்குறீங்க? கணினித் துறை புலின்னு சொல்றதுக்கு பதில் புளின்னு வேணும்னா திட்டிக்கோங்க. :)
பதிலளிநீக்குசும்மா தாங்க... பதிவு எழுதும் போது உங்க ஞாபகம் வந்தது.. அதான்!
நீக்குsureshkumar@rediffmail.com இதுதான் என் முதல் மெயில் ஐடி....ஜிமெயில் வந்து பல மெயில் காலியாகிருச்சு!
பதிலளிநீக்குஉண்மை தான்....
நீக்குஹா ஹா கலக்கிறீங்க சார் !
பதிலளிநீக்குகருத்திட்ட அனைவருக்கும் என் நன்றிகள்!
பதிலளிநீக்குMigavum sirappu.... Nalla pathivu
பதிலளிநீக்குIDE
பதிலளிநீக்கு