முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழைச் சிதைக்கும் புதர்களைக் களை எடுப்போம் !! (Google Report Offensive Content))

கூகிளின் சிறப்பே அது பல மொழிகளையும் கற்று வரும் தேடல் களம் என்பது தான். ஆனால், எல்லா மொழிகளையும் அதனால் முழுமையாகக் கற்க முடியவில்லை. மனிதர்களாகிய நமக்கே கடினமாக இருக்கும் போது, கணிணி எந்த பட்சம்?


அதனாலோ என்னவோ, சில மானிடப் பதர்கள்  அதனைச் சற்று ஏமாற்றி தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

நீங்கள் பாதுகாக்கப்பட்ட தேடலைத் (SafeSearch Filtering) துவங்கிய பிறகும், சில தகாத வலைத்தளங்களை தேடலில் காண வாய்ப்பு உண்டு..

சில உதாரணங்கள்:
  • தமிழ் என்று தேடிப் பாருங்கள்... முதலில் வரும் பதில் உங்களைத் திகைக்க வைக்கும்.
  • தமிழ் மொழியின் உறவுகள் பெயரைத்  தேடிப் பாருங்கள். கிடைக்கும் பதில்கள் உங்களை முகம் சுளிக்க வைக்கும்
 மேலே கூறப்பட்ட செய்திகள் Moderate Filter மட்டும் அல்ல.. Strict Filter முறையிலும் வரும் என்பது தான் சோகமான செய்தி!!

பதில்களில் வரும் 'அது' போன்ற வலைத்தளங்கள் மிக வில்லத்தனமானவை.. அவற்றை எழுதி பிறரைக் குறி வைப்பவர்கள் மனிதர்களாக வாழவே லாயக்கு அற்றவர்கள்.


சில குறிசொற்களைக் கொண்டு வடிப்பானை (Filter) ஏமாற்றி வந்து விடுகிறன...
இவற்றைக் குழந்தைகள் காண நேர்ந்தால் என்ன ஆகும்?
எழுதும் பதர்கள் ஏனோ இவற்றைப் பற்றி யோசிப்பதில்லை. பின்னே, யோசித்தால் அவர்களின் பிழைப்பு என்னாவது?

இது தொடர்பான எனது பதிவு:  அம்மாவுக்கு நேர்ந்த கொடுமை

அந்த வகையான தளங்களை பின்னுக்கு தள்ளி, நல்ல தகவல்களை முன்னெடுக்கும் பொருட்டு எழுதியவை கீழே உள்ள இரண்டும். 

தமிழ் மொழிக்கு இழுக்கைத் தரும், தமிழர் பண்பாட்டைச் சிதைக்கும் இது போன்ற தளங்களைத் தேடலில் இருந்து  நாம் களைய வேண்டாமா????
அவற்றைப் புறந்தள்ள வேண்டாமா?

 கீழ்காணும் பக்கத்திற்குச் செல்லுங்கள்:

https://www.google.com/webmasters/tools/safesearch



குறிப்பிட்ட வலைத்தள முகவரியை உள்ளிட்டு, "Report Content" என்பதனைச் சுட்டுங்கள்.

இதனை ஒருவராக மட்டும் செய்தால் பெரிய பலன் இருக்காது. ஆனால், "எறும்பு ஊரக் கல்லும் தேயும்" என்பது போல, பலரும் சேர்ந்து செய்தால் அது போன்ற தளங்களைத் தேடலில் இருந்து தவிர்க்கலாம்..


தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்வோம்.. புதர்களைக் களை எடுப்போம்!!

பதிவர்கள் அனைவரும் "தமிழ்", "அம்மா" ஆகிய இரு தலைப்புகளிலும் குறைந்த பட்சம் ஒரு பதிவாவது எழுதுங்கள். இயன்றவரை இவற்றை மையப்படுத்தி எழுதுங்கள்.. குறைந்தபட்சம் இவ்விரு சொற்களையாவது சிதைவில் இருந்து காப்போம்!!

கற்போம் தளத்தில் வெளியான கூகிள் தேடலில் (Google Search) விரும்பத்தகாத தளங்களை தவிர்ப்பது எப்படி? என்கிற எனது பதிவின் ஒரு பகுதி.


கருத்துகள்

  1. தமிழின் மீது தாங்கள் கொண்டுள்ள உண்மையான பற்று என்னை நெகிழ வைத்தது.
    தங்கள் பரிந்துரையை ஏற்று, ‘தமிழ்’, ‘அம்மா’ ஆகிய தலைப்புகளில் விரைவில் பதிவிடுவேன்
    தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
    மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  2. ”நான் யார்?” என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்கிறீர்கள்.
    நான் பதில் தருகிறேன்........
    தமிழ் மொழிப் பற்றும் இனப்பற்றும் உள்ள பண்புமிக்க இளைஞர் நீங்கள்.
    மேலும் வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அவசியமான விழிப்புணர்வு பதிவு நண்பா! விரைவில் களைகள் எடுக்கப்படும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  4. அவசியமான பதிவு நானும் தமிழ் பற்றி பதிவு இட்டு இருக்கிறேன் dynamic view இல் நான் பார்த்த முதல் தமிழ் தளம் இது ஒட்டுபட்டை தான் காண வில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே!!

      இயக்கக்காட்சிகளில் (Dynamic Views) Javascript வேலை செய்யாது. எனவே, ஓட்டுப்பட்டைகள் தெரியாது!!

      விரும்பினால், நீங்கள் முகநூல், ட்விட்டர் மற்றும் கூகிள்+ ஆகியவற்றில் இந்த செய்தியைப் பகிருங்கள்!

      நீக்கு
  5. மிகச்சிறந்த பதிவு.. களைகளைக் களைவோம். தமிழ் வளர்ப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி "ஆளுங்க" சார்.

    நானும் நான்கு தளங்களை புகார் செய்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும