முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படை எடுக்காத ஒரே நாடு (நம்பாதீங்க - பகுதி 9 )

நமது இந்திய தேசத்தைப் புகழ்ந்து பலரும் பல செய்திகள் எழுதுவர். அப்படி யாரோ எழுதிய இந்த செய்தி தான் பலராலும் இந்தியாவின் பெருமையைப் புலப்படுத்த பரப்பபடுகிறது:
இந்தியா என்கிற தேசம் தனது 10,000 ஆண்டு வரலாற்றில் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை
 இது உண்மையல்ல என்பதை சில வரலாற்று ஆய்வாளர்கள் அறிவர்.

உண்மை


பன்னெடுங்காலமாக இந்திய தேசத்தின் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் பல நாடுகளின் மேல் போர் தொடுத்து இருக்கிறனர் (இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைக் கணக்கில் சேர்க்காமலேயே சொல்கிறேன்)..

மிக எளிதான உதாரணங்களைத் தமிழ் மன்னர்களிடத்திலேயே காணலாம்:
  • இராசராச சோழன் இலங்கையின் மீதும், மாலத்தீவின் மீதும் படையெடுத்து வெற்றி கண்டவன்
  • 'கடாரம் கொண்டான்' எனப் புகழ் பெற்ற இராசேந்திர சோழன் தற்போதைய மலேசியா (ஸ்ரீவிஜயம்), இந்தோனேசியா (இலாமுரி தேசம்) ஆகியவற்றின் மீது படையெடுத்து கைப்பற்றினான்.
ராஜேந்திர சோழன் ஆட்சிபரப்பு

இந்தியா என்கிற தேசமே ஆங்கிலேயர் வந்த பின் தான் உருவானது. எனவே, 'இந்தியா என்கிற தேசம் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை' என்று சொன்னால் அது சரியே!! என்பவர்களுக்கு:

1961 ஆம் ஆண்டு நடந்த கோவா இணைப்பை (Annexation of Goa - 1961) ஒரு படையெடுப்பே.

"ஆபரேசன் விஜய்" என்று அழைக்கப்பட்ட, ஒரே ஒரு நாள் மட்டுமே நடந்த, அந்த போரின் காரணமாகவே போர்த்துகீய காலனிகளாய் இருந்த கோவா, டாமன், டையூரே ஆகியவை இந்தியாவுடன் இணைந்து இந்திய மண்ணில் இருந்து காலனியாதிக்கம் அன்று ஒழிந்தது!! அந்த போருக்குப் பிறகு காலனியாக்க அடிமைத்தனத்தில் இருந்து அந்த பகுதிகள் விடுதலைப் பெற்றன என்பது உண்மை தான்.

"Liberation of Goa" என்று நாம் சொன்னாலும், அந்த பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தமையால்,  அது ஒரு படையெடுப்பே!!!

நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண:  நம்பாதீங்க- தொடர்

அவிழ்மடல்

கருத்துகள்

  1. நண்பர்கள் சிலர் ஆட்சேபித்ததால், பின்னைய சில கருத்துகளை நீக்கி விட்டேன்.. மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  2. வேறொரு நாட்டின் மீது படையெடுக்காத நாடே கிடையாது!இந்திய மன்னர்கள் யாவரும் தன் படைப் பெருமை பேசவும் படையின் வேகத்தை சோதிக்கவும் படையெடுத்தனர் நல்லாட்ச்சிகள் நடத்தினர் கோயில் கலாச்சாரம் போன்றவற்றை அங்கு விதைகளாக ஊன்றினார்கள்! ஆனால் இந்தியாவின் மீது படையெடுத்தவர்கள் அனைவரும் கொள்ளையடிக்கவே படையெடுத்தனர்! மிகவும் அவர்களை மிரட்டியது நம் யானைப்படையே...ஒட்டகம் மட்டும் குதிரைகளை மட்டுமே பார்த்த முகலாய மன்னர்களுக்கு யானைப்படை சிம்ம சொப்பனமாக இருந்தது தைமூர் என்கிற கொடூர முகலாய மன்னனே யானைப்படைகளை வீழ்த்தினான் இரும்பு முள் உருண்டைகளை உருட்டிவிட்டான் அதை மிதித்த யானைகள் நடக்க முடியாமல் தினறின...ராஜபுத்திர மன்னர்களை வீழ்த்திய தைமூர் வெற்றி களிப்புடன் அனைத்து யானைகளையும் கட்டி அதன் மீது கொள்ளையடித்த பொன்னும் பொருளையும் வைத்து தன் நாட்டை நோக்கி புழுதி கிளம்ப சென்றான் அப்புழுதியடங்க பல நாட்கள் ஆனது! ஆதலால் தைமூரின் மதியே இந்தியா வீழக் காரணமாக இருந்தது...!

    பதிலளிநீக்கு
  3. வரலாற்று உண்மைகளை! ஆதாரத்துடன் பதிவிடும்போது உங்கள் மனசாட்சிபடி அதில் எந்த பொய்யும் இல்லை என தெளிவுடன் நீங்கள் பதிவிடும்போது யார் கூறினாலும் அதனுடைய பகுதிகளை நீக்குவது தவறு!

    இது என் கருத்து! யாருடைய பதிவிலும் அநாகரிகமான கருத்துகளை தவிர நீக்க சொல்லுவது கூடாது!அப்படி நீங்கள் நீக்கினால் நீங்களே தெளிவு பெறவில்லை என்று கருத வாய்ப்புள்ளது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி... நிச்சயம் கடைபிடிப்பேன்!

      நீக்கு
    2. அந்த பகுதிகளை சிறிது மாற்றி சேர்த்து விட்டேன்!

      நீக்கு
  4. பெயரில்லா28 மே, 2012 அன்று 4:11 AM

    //தைமூர் என்கிற கொடூர முகலாய மன்னனே யானைப்படைகளை வீழ்த்தினான் // He is not Mughal.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா28 மே, 2012 அன்று 10:45 AM

    thanks for this article. informative one.

    nagu
    www.tngovernmentjobs.in

    பதிலளிநீக்கு
  6. இந்திய வரலாறென்பது தமிழக / திராவிட மன்னர்களைத்தவிர்த்ததான வரலாறு என்பதறிக..!! அது இன்றும் அப்படியே..!

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப நாளாக எனக்கும் இது நெருடலாகவே இருந்தது .. உங்கள் பதிவு உண்மையை படம் பிடித்துக் காட்டி விட்டது. சிங்களவர்களின் வரலாற்றில் இந்தியா என்றாலே ( சோழர்கள் ) படையெடுப்பு செய்யும் நாடு என்று தான் அர்த்தப்பட்டு இருக்கின்றது .... !!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...