முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரட்டைச் சூரியன்களைச் சுற்றும் இரட்டைக் கோள்கள் (மெய்யாலுமே நம்புங்க!)

ஒரு இனிய காலைப் பொழுதில் வானத்தில் இரண்டு சூரியன்களை பார்த்தால் எப்படி இருக்கும்?


உண்மையில் அப்படி இரு சூரியன்கள் தெரியும் கோள்கள் உண்டு!!


அமெரிக்காவில் உள்ள  நாசா ஆராய்ச்சி நிறுவனத்தால் "உயிர் வாழ தகுதியான கோள்கள் தேடல்" என்ற ஆய்வுக்காக கெப்லர் (Kepler) என்ற விண்கலன் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கெப்லர் விண்கலம் கண்டறிந்தது தான் இந்த அதிசயத்தக்க உண்மை!!

ஒரு சூரியனைச் சுற்றும் கோள்களைக் கொண்ட சூரிய குடும்பங்களையோ (Multi-planet systems)  , அல்லது  இரு சூரியன்களைச் சுற்றும் ஒரே கோளையோ (Circumbinary planetary system) கொண்ட சூரிய குடும்பங்களையோ தான் இதுவரை கெப்லர் கண்டறிந்துள்ளது.

 தற்பொழுது  கெப்லர் கண்டறிந்துள்ள சூரிய குடும்பம் மிகவும் வினோதமானது!

அதில் இரண்டு சூரியன்கள் இருப்பது விசித்திரமல்ல! இரட்டைச் சூரியன்களை இரண்டு  கோள்கள் சுற்றுவது தான் அதிசயம்!!

அந்த கண்கொள்ளாக் காட்சி எப்படி இருக்கும்? ஒரு ஓவியரின் கற்பனை இதோ:

 
என்ன நண்பர்களே? 'நம்பாதீங்க' படித்து படித்து இதை நம்ப மனம் மறுக்கிறதா?



ஆனா, மெய்யாலுமே இதை நம்பலாம்!!  

இந்தத் தகவலை நாசா அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அந்த அதிசய குடும்பத்திற்கு கெப்லர் 47 (Kepler 47)  என்று பெயரிடப்பட்டுள்ளது.  நம் பூமியில் இருந்து சுமார் 4900 ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ள சிக்னஸ் [Cygnus] நட்சத்திரக் கூட்டத்தில்  உள்ளது!!
[4900 ஒளிஆண்டுகள் = 46 மத்தியம் கி.மீ = 4.6 லட்சம் கோடி கோடி கி.மீ!! {தவறாக இரு முறை கோடி என்று எழுதவில்லை!}]

கெப்லர் 47 குடும்பத்தில் உள்ள ஒரு  நட்சத்திரம் நமது சூரியனின் அளவில் உள்ளது. ஆனால், அதன் ஒளி சூரியனைப் போல் அவ்வளவு பிரகாசமாக இல்லை. சூரியனுடன் ஒப்பிடுகையில், சுமார் 84% பிரகாசமாக  உள்ளது.

மற்றொன்றோ, சூரியனில் மூன்றில் ஒரு பங்கு அளவில், 1% -க்கும் குறைவான பிரகாசத்துடன் உள்ளது. ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கே வரும் போது, 7.5 (பூமி) நாட்களுக்கு ஒரு முறை கிரகணங்கள் ஏற்படுகிறன.

இரட்டை சூரியன்களுக்கு அருகில் உள்ள கெப்லர்  47 b (Kepler-47b) கோள் இவற்றைச் சுற்றி வர சுமார் 50 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இது பூமியைப் போல மூன்று மடங்கு பெரிதாய் இருக்கிறது.  

வெளியில் உள்ள கெப்லர்  47 c (Kepler-47c) நெப்டியூனின் அளவினை விட சிறிது பெரிதாய் இருக்கிறது (பூமியைப் போல 17 மடங்கு). இரு சூரியன்களைச் சுற்றி வர  303 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.



கெப்லர்  47 c உயிர் வாழத் தகுந்த தூரத்தில் (Habitable zone) இருந்தாலும், அது ஒரு வளிமப் பெருங்கோளாக (Gas giant) இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. அப்படி இருப்பின், அங்கு உயிர்கள் வாழ வாய்ப்பில்லை. ஏனெனில், தண்ணீர் அடர்ந்த நீராவி வடிவத்தில் தான் இருக்கும். இதனைப் பற்றிய ஆய்வுகள் தொடர்கிறன.

"உயிர்களின் செல்ல கோளுக்கான தேடல்" இன்னும் தொடர்கிறது. நமது பூமியைத் தவிர வேறு எதையும் கெப்லர் கண்டறியுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!!


ஆதாரம்:  நாசா வலைத்தளம்

கொசுறு:
  • கெப்லர் 16  கண்டறியப்பட்ட பின்னர்,  கெப்லர் 34, கெப்லர் 35, கெப்லர் 38 என மேலும் மூன்று இரட்டை சூரியகுடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  கெப்லர் 47 நான்காவது ஆகும். 

  • 4900 ஒளிஆண்டுகள் = 46 மத்தியம் கி.மீ = 4.6 லட்சம் கோடி கோடி கி.மீ!!             {தவறாக இரு முறை கோடி என்று எழுதவில்லை!}

அவிழ்மடல்

கருத்துகள்

  1. //

    4900 ஒளிஆண்டுகள் = 46 மத்தியம் கி.மீ = 4.6 லட்சம் கோடி கோடி கி.மீ!! {தவறாக இரு முறை கோடி என்று எழுதவில்லை!}
    //

    இதனை கட்டுரையிலும் மாற்றிவிடுங்கள் நண்பரே!

    ஏனெனில் கொசுறுவை எல்லோரும் படிப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள், புரிதலுக்கு நன்றி!

    அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  2. உங்களால் தான் அரிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்... (TM 3)

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு மிக்க நன்றி... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் தோழா... எப்போதும் வானியலில் கலக்குகிறீர்களே? உங்கள் பேவரிட்டா?

    பதிலளிநீக்கு
  5. அருமை..எளிமையான விளக்கம். அரிதான தகவல்கள்..!

    இதுதான் ஆளுங்க அவர்களின் திறமை.. !!!

    பதிலளிநீக்கு
  6. படித்து கருத்திட்ட வரலாற்று சுவடுகள், திண்டுக்கல் தனபாலன், ஆட்டோமொபைல்,
    அருண்பிரசாத் வரிக்குதிரை மற்றும் தங்கம் பழனி ஆகியோருக்கு என் நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...