முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலா அது வானத்து மேலே (நம்பாதீங்க - பகுதி 12)

சூரிய உதயமும், மறைவும் காண்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.படத்தில் நீங்கள் காண்பது, பூமியின் வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம். நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!! கொஞ்சம் பொறுங்க.. வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம் உண்மையில் இப்படித் தான் இருக்குமா?இங்கு அலசுவோம்!                         


சூரிய உதயமும், மறைவும் காண்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். பூமியின் வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம் இப்படித் தான் இருக்கும்!!


இதைக் காண கண்கோடி வேண்டும்... பார்த்து மகிழுங்கள்... படத்தில் நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!!

 என்ன நண்பர்களே!! சூரிய அஸ்தமனம் எப்படி? ரொம்ப நல்லா இருக்கா!!
ஆனால், இது உண்மை இல்லை!!

ஏன்? மேலும் படிங்க!!

உண்மை

உண்மையில் இப்படி இது ஒரு புகைப்படமே அல்ல... ஒட்டுவேலையோ என்று நினைக்கிறீர்களா? அதுவும் இல்லை...

இது இங்கா நீல்சன் (Inga Nielsen) எனும் ஓவியரால் வரையப்பட்ட அழகிய ஓவியம்!!
(படத்தின் கீழே பாருங்கள்.. கருப்பு பட்டியில் அவர் பெயர் இருக்கும்!!)


இது நாசாவால் "இன்றைய வானியல் படம்" என்று 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது!!


இப்படி ஒரு காட்சி பூமியில் ஏற்பட வாய்ப்பே இல்லை..

சரி, அப்ப வடதுருவத்தில் சூரிய அஸ்தமனம் எப்படி இருக்கும்?

பூமியில் இருந்து பார்த்தால் சூரியனும், நிலாவும் கிட்டத்தட்ட ஒரே  கோணவிட்டம் (Angular Diameter) உடையவை..


 

சூரியனின் கோணவிட்டம் = 14 லட்சம் கி மீ/ 15 கோடி கிமீ =  0.00903

சந்திரனின் கோணவிட்டம் = 3474 கிமீ / 3.84 லட்சம் கிமீ = 0.00905

இதனால் தான், சூரிய கிரகணத்தின் போது சந்திரன் சூரியனை முழுதும் மறைத்தாலும், சூரியனின் ஒளி வளையம் (Corona) நமக்குத் தெரிகிறது.

எனவே, அங்கும் நமக்குத் தெரிவது போலத் தான் இருக்கும்!!


இன்னும் விரிவான ஆய்வுக்கு (ஆங்கிலத்தில்): An unreal picture of sunset at the north pole

நன்றி: கூகிள் படங்கள்,  Codecogs (Latex)

நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண:  நம்பாதீங்க- தொடர்

அவிழ்மடல்

கருத்துகள்

  1. பதிவும், அதற்கான விளக்கமும் அருமை நண்பரே....

    அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  2. படம் பார்ப்பதற்கு உண்மையானதாக தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  3. காண கண்கோடி வேண்டும்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. என்னதாங்க சொல்ல வர்றீங்க? ஒரு எழவும் புரியல! சரி, விடுங்க! இத்ன பேருக்கு புரிஞ்சிருக்கு, எனக்குதானே புரியல! ஆனா, அந்த photo ரொம்ப super-ஆ இருக்குங்க! அத மட்டும் save பண்ணிட்டேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் வேலை மெனக்கெட்டு இது ஃபோட்டோ இல்லைன்னு பதிவு போட்டா கடைசில ஃபோட்டோ சூப்பர்னு சொல்லிட்டீங்களே சதா...

      நீக்கு
    2. நண்பரே,
      காட்டப்பட்ட படம் உண்மையல்ல.. அது ஒரு ஓவியம்!!
      நான் சொல்ல வந்தது இதைத் தான்!!

      நீக்கு
    3. நீங்க சொல்றது நேக்கு புரியறது! But, அந்த பாழாப்போன computer'க்கு புரியமாட்டேங்குதே! நா அத save பண்ணுனா, image file'ஆ தான் காட்டுது! அவா ஒரு மாரி சொல்றா, இவா ஒரு மாரி காட்றா! ஈஷ்வரா, நேக்கு என்ன பண்றதுன்னே தெரியலை!

      65-66 ஆம் விடுதலை நினைவாண்டின் வாழ்த்துக்கள்!

      நீக்கு
    4. நண்பரே,
      ஓவியங்கள் (Drawings) வரையப்படுபவை. புகைப்படங்கள் (Photos) கருவியால் பிடிக்கப்படுபவை!
      நாம் பார்ப்பதையோ, பார்க்க விரும்புவதையோ பிரதிபலிப்பதால், இவை இரண்டுமே படம் (Image) என்கிற பகுப்புக்குள் வருகிறன!

      http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D

      நீக்கு
    5. இதனால் தாங்கள் சொல்லவிருப்பது?

      (ஆனா, நல்லா பாடம் நடத்துறீங்க!)

      ஹி......... ஹி........ ஹி................

      நீக்கு
  5. படம் மற்றும் விளக்கம் மிக அருமை நன்றி........

    பதிலளிநீக்கு
  6. நான் கூட உண்மையான நிகழ்வு என்றே இத்தனை நாளாய் நினைத்துவிட்டேன். விளக்கத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. 65வது சுதந்திர தின வாழ்த்துக்கள். நண்பரே. அருமையான விளக்கம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  8. கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  9. ஆச்சர்யமூட்டக்கூடிய படம்.. அதற்கு தாங்கள் கொடுத்த விளக்கம் மேலும் ஆச்சர்யப்பட வைக்கிறது.. பாராட்டுகள் ஆளுங்க.. ! தொடர்ந்து "நம்பாதீங்க" தொடரை எழுத வேண்டுகிறேன்... பகிர்வுக்கு நன்றி..!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...