முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய ரூபாயினைக் கணிணியில் உள்ளிடுவது எப்படி?




நண்பர்களே,
அனைவருக்கும் எனது இனிய சுதந்திர திருநாள் வாழத்துகள்!!

இந்த இனிய நாளில், நமது இந்திய ரூபாயின் குறியீட்டைப் பற்றி அறிந்து கொள்வோமா?



இந்திய அரசு 15 ஜூலை 2010 அன்று தனது ரூபாய் பண மதிப்பைக் குறிப்பதற்கு என தனியே ஒரு சிறப்பு குறியீட்டைக் கொண்டு வந்தது. இதன் மூலம், ரூபாய் மதிப்பைப் பயன்படுத்தும் பிற நாடுகளிடம் (பாகிஸ்தான், இலங்கை, நேபாளம்) இருந்து தனது மதிப்பை வேறுபடுத்திக் காட்டியது.

கணிணிகளில் இந்திய ரூபாய்:


விண்டோஸ் (Windows Vista/ Windows 7) :
தற்போது  யூனிக்கோடு எழுத்துருவில் (Unicode-6) இந்திய ரூபாய் நாணயம் இடம் பெற்றுள்ளது. எனவே, எல்லா எழுத்துருக்களிலும் (Font) ரூபாய் வடிவத்தை எழுதலாம். 
நிறுவுவதற்கு:
மைக்ரோசாப்ட் ஆதரவு பக்கம் சென்று, தகுந்த கோப்பைத் தரவிறக்கிக் நிறுவிக் கொள்ளுங்கள். 
எழுதுவதற்கு:
கீழ்காணும் வரிசையினை அடித்தால், இந்திய ரூபாய் வடிவம் கிடைக்கும்:
20B9 + Alt + x 


விண்டோஸ் XP:
நிறுவுவதற்கு:
 கொஞ்சம் பழைய வழி தான்..
  • முதலில், Foradian தளம்  சென்று,கோப்பைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
  • கோப்பினைப் பிரித்து (Extract), உள்ளிருக்கும் எழுத்துருவினை (Font) நிறுவுங்கள்.
எழுதுவதற்கு:
  • எழுத வேண்டிய இடத்தில், Rupee Foradian என்கிற எழுத்துருவினைத் தேர்ந்தெடுங்கள்.
  • தட்டச்சுப் பலகையில் இருக்கும் ` என்கிற பொத்தானை அழுத்துங்கள்.
     

லினக்ஸ்: 
indian ruppee
இந்திய ரூபாய் குறியீட்டு மாற்றத்தை முதன்முதலில் கணிணி பயன்பாட்டில் கொண்டு வந்தது உபுண்டு இயங்குதளம் தான் (விண்டோஸ் எல்லாம் பின்னால் தான்!!). உபுண்டு தனது 10.10 பதிப்பில் இந்த குறியீட்டைச் சேர்த்துக் கொண்டது. பின்னாளில், பெடோராவும் தனது 15 ஆம் பதிப்பில் ரூபாய் குறியீட்டைச் சேர்த்து கொண்டது.

ரூபாய் குறியீட்டை லினக்ஸ் இயங்குதளங்களில் எப்படி உள்ளிடுவது?
விண்டோஸ் இயங்குதளம் போல இதற்கென தனியே ஒரு எழுத்துருவினை நீங்கள் நிறுவ வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. எந்த எழுத்துருவையும் நிறுவாமலேயே, மிக எளிதாக இதைச் செய்து முடிக்கலாம்!!
  • கணிணி அமைப்புகள் (System Settings) மூலம் விசைப்பலகை இட அமைப்புகளுக்குச் (Keyboard Layout) செல்லுங்கள் .
  • அங்கு இருக்கும் Options (தேர்வுகள்) என்பதனைச் சொடுக்குங்கள்
  • "Adding currency signs to certain keys" என்பதில், "Rupee on 4" என்பதை தேர்வு செய்யுங்கள்
  • Key to choose 3rd level” என்பதில், உங்களுக்கு தகுந்த விசையைத் தேர்வு செய்யுங்கள். (.தா: Right Alt)
  • அனைத்தையும் சேமியுங்கள்

அவ்வளவு தான்!! இனி நீங்கள் உங்கள் விருப்ப விசையை அழுத்தி "4” (நான் கூறிய உதாரணத்தில் Right Alt + 4) அழுத்தினால் அந்த இடத்தில் ரூபாயின் குறியீடு வந்துவிடும்.

கொசுறு:
Udaya Kumar
படத்தில் இருப்பவரைத் தெரிகிறதா? என்ன அதுக்குள்ள மறந்துட்டீங்க?
இவர் தான் உதய குமார் - இந்திய ரூபாய்க்கு வடிவம் கொடுத்தவர்!!

டிஸ்கி:
இந்த கட்டுரையின் பிற்பகுதி (லினக்ஸ்) கணியம் இதழுக்காக (கணியம்- இதழ் 7)  "லினக்ஸ் இயக்குதளங்களில் இந்திய ரூபாய்!" எழுதப்பட்டது. முற்பகுதி, கொசுறு, ஆகியவை பின்னர் சேர்க்கப்பட்டவை!

பிறிதொரு சமயத்தில் ரூபாய் பற்றிய மேலும் சுவாரசியமான தகவல்களுடன் சந்திப்போம்.

நன்றி: கணியம் இதழ், Youtube (காணொளி), Google படங்கள், விக்கிபீடியா.

அவிழ்மடல்

கருத்துகள்

  1. உதயகுமாரை நினைவூட்டியதுக்கு நன்றிகள்! சாதனைத் தமிழர்!

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி நண்பா! உதயகுமாரை நினைவுபடுத்தியது நன்று!

    பதிலளிநீக்கு
  3. விரிவான விளக்கம்... பாராட்டுக்கள்... மிக்க நன்றி...(TM 4)

    பதிலளிநீக்கு
  4. உபுண்டுவில் இதை செயல் படுத்தி விட்டேன். உங்களுக்கு ₹. 1/- பரிசு, கொடுக்கலாம் என இருக்கிறேன்!!

    பதிலளிநீக்கு
  5. அறிந்து கொண்டேன்.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  6. உதயகுமார் பற்றி வாசித்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி... ஆனால் அவர் தமிழராக இருந்து ஹிந்தி எழுத்து வடிவில் அந்த குறியை அமைத்தது கொஞ்சம் ஆதங்கமாகத் தான் உள்ளது. என் கருத்தைச் சொன்னேன். அவ்வளவுதான். ஆனால் தமிழர் என்பதால் தலைநிமிர்கிறேன். என் பதிவு
    http://varikudhirai.blogspot.com/2012/08/the-silence-of-lambs.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதயகுமார் - தமிழ்வரி வடிவம் வருவது போல் அமைத்திருந்தால் நிச்சயம் தேர்வு பெற்றிருக்காது.

      நீக்கு
  7. நன்றி..! பகிர்வுக்கு நன்றி..! நண்பர் Arunprasath Varikudirai கூறிய கருத்தும் ஒரு வகையில் ஏற்புடையதாகவே இருக்கிறது. மேலும் இதுபோலன்றி தமிழ் வடிவிலான ரூபாய் மதிப்பிற்கான லோகோவை வடிவமைத்திருந்தால் நிச்சயம் தேர்வுக்குழுவால் அந்த லோகோ நிராகரிக்கப்பட்டிருக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

    பதிலளிநீக்கு
  8. கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றி!

    பதிலளிநீக்கு
  9. நம்ம கடைப் பக்கம் வாங்க!!

    ஹிக்ஸ் போஸான்: கடவுளுக்கும் கடவுள் துகளுக்கும் என்ன சம்பந்தம்?

    http://jayadevdas.blogspot.in/2012/08/blog-post_1900.html

    பதிலளிநீக்கு
  10. கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும