முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்றாவது ரேங்க்!

17 வருடங்களுக்கு முன்பு...

இதே நாள் (13 ஜூலை 1994)..

நான் நான்காம் வகுப்பு என்ற பெரிய படிப்பு படித்த காலம்...
வகுப்பறைக்குள் ஆசிரியை  உள்ளே நுழைந்தார்...

"யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே" என்பார்களே.. அது போல, முன்னால் எங்கள் டீச்சர் கையில் ரிப்போர்ட் கார்டு கொண்டு வந்தார்... பின்னாலேயே,ஸ்கேலும்  வந்தது!!

எங்கள் ரிப்போர்ட் கார்டுக்கும், ஸ்கேலிற்கும்  ஒரு தொடர்பு   உண்டு..
கார்டில் எத்தனை சிவப்பு கோடுகள் உண்டோ அத்தனை சிவப்பாக உங்கள் கைகள் மிளிர ஸ்கேல் உதவி செய்யும்!!

எங்கள் டீச்சருக்கு ஒரு பழக்கம் உண்டு... முதலில், நான்காம் ரேங்க் முதல் பாஸ் ஆனவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர்.. அதன் பிறகு,  பெயில் ஆனவர்களுக்கு அதகளம் ஆரம்பிக்கும். இறுதியாக, முதல் மூவர்.

நான் ஏனோ தானோ ரகம் தான்... எப்பாடுபட்டாவது பாஸ் ஆகிடுவோம்.. ஆனா, ரேங்க் எல்லாம் கேட்டா ரேகிங் தான் நடக்கும்.. என்ன ஓகேவா?

அழைப்பு ஆரம்பமானது...

அனைவரும் கார்டு வாங்க வாங்க  மனதுக்குள் போராட்டம் அதிகமானது... நம்ம வீட்டு அம்மா அப்பாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாததா...
இங்கும் ஒரு தொடர்பு உண்டு...

உங்கள் ரேங்க் பிந்த பிந்த அப்பா அம்மாவிடம் இருந்து கிடைக்கும் திட்டுக்கள் அதிகரிக்கும்.. இதில் உங்கள் கூட பிறந்தவர்கள் அதிகமாக ரேங்க் எடுத்தால் அவ்வளவு தான்..

என் தங்கையும் நான் படிக்கும் பள்ளியில் தான் எல்.கே.ஜி படித்தாள். அவள் மூன்றாவது ரேங்க்..
எங்கள் அப்பா, அடிக்கடி "பார்த்தியாடா.. உன் தங்கச்சி எடுத்த எடுப்பிலேயே தேர்ட் ரேங்க். நீயும் தான் இருக்கியே" என்று அவளைப் புகழ்ந்து கொண்டிருந்தார்..
நான் எடுத்த எடுப்பிலேயே (கடைசியில் இருந்து) இரண்டாவது ரேங்க் எடுத்தது அடிக்கடி அவர் நினைவுக்கு வந்தது தான் காரணம் என்று நினைக்கிறேன் !! அதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்!!

சரி.. கதைக்கு வருவோம்!!

அனைவரும் கார்டு வாங்க வாங்க  மனதுக்குள் போராட்டம் அதிகமானது.. மூன்றாவது ரேங்க் எல்லாம் நமக்கு "மலை " போல... ரொம்ப கஷ்டம்!!
ஒரு பத்து, பதினைந்து ரேங்க் வாங்கினால், திட்டு கொஞ்சம் கம்மியாக இருக்கும்!
ஆனால், எண்ணிக்கையோ இருபதைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது!!

டீச்சர் ஸ்கேலை எடுத்தார் "இதுவரைக்கும் எல்லாம் பாஸ் ஆகிட்டீங்க".. இனி, பெயில் ஆனவங்க எல்லாம் வாங்க பார்ப்போம் என்று பெயரை வாசிக்க ஆரம்பித்தார்..

போச்சு.. எல்லாம் போச்சு!! பாஸ் ஆனாலே தாங்காது.. இப்ப அதுவும் இல்லையா!!
நமக்கு ஆப்பு தான்.. மாப்பு.. வச்சுக்கிட்டியே ஆப்பு!!

வயிற்றுக்குள் புளியைக் கரைத்தாற் போல ஒரு உணர்வு..
என்ன செய்வது என்றே தெரியவில்லை..

"சரி.. எப்படியும் அடி வாங்குறதுன்னு முடிவு ஆகிடுச்சு. எவ்வளவு  அடிச்சா என்ன?" மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்..

டீச்சர் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே என் பெயரை அழைத்தார்..
மனதில் பயம், கால்களில் தயக்கம்..
பவ்யமாக டீச்சர் முன்பு போய் நின்றேன் அடி வாங்குவதற்குத் தயாராய்!!

ஆனால், அவர் என்னைச் சட்டை செய்ததாகவே தெரியவில்லை..

"எல்லாரும் அருணுக்கு கைத்தட்டுங்க பார்ப்போம்"
(Class, Everyone give a big clap for P. Arun)

எனக்கு ஒன்றும் புரியவில்லை.. ஒரு வேளை எல்லாவற்றிலும் சிவப்பு கோடு விழுந்து பெரிய அடிக்கு முன்னதாக....

டீச்சர் சிரித்து கொண்டே "பையன் னா இவனைப் போல இருக்கணும்.. போன வருசம் வரைக்கும் சுமாரா படித்துக்கொண்டு இருந்தான். இந்த முறை பாருங்க.. தேர்ட் ரேங்க் வாங்கி இருக்கான்" என்றார்..



எனக்குத் தலைசுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது!!
மூன்றாவது மாணவனாய் வந்ததில் பெருமிதமும், அப்பா திட்ட மாட்டார் என்கிற நிம்மதியும், நம்பவே முடியாத இன்ப அதிர்ச்சியும் ஒரு சேர என்னைத் தாக்கியதில் திக்குமுக்காடிப் போனேன்!!

கருத்துகள்

  1. உன் தங்கையும் நீயும் ஒரே வகுப்பா?

    எல்லா வகுப்பிலயுமா? கஷ்டம் தான்.

    பதிலளிநீக்கு
  2. உன் தங்கையும் நீயும் ஒரே வகுப்பா? ==> என் தங்கையும் நான் படிக்கும் பள்ளியில் தான் எல்.கே.ஜி படித்தாள்.
    திருத்தி விட்டேன். தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  3. ithu nejamave nalla irukku.. nanum kuda ippadithan adikkadi teacher kitta adi vanguvomnu nenaichu first rank eduthuduven.....

    பதிலளிநீக்கு
  4. நன்றாக இருந்தது!

    // நான் ஏனோ தானோ ரகம் தான்... எப்பாடுபட்டாவது பாஸ் ஆகிடுவோம் //

    // நான் எடுத்த எடுப்பிலேயே (கடைசியில் இருந்து) இரண்டாவது ரேங்க் எடுத்தது அடிக்கடி அவர் நினைவுக்கு வந்தது //

    அருண்! நீங்களா? நம்பவே முடியவில்லை!

    பதிலளிநீக்கு
  5. உண்மை தான் பாலாஜி...

    மேற்கண்ட சம்பவத்தால் ஏற்பட்ட ஒரு உந்துதல் தான் எனக்கு படிப்பின் மீது ஒரு ஆர்வத்தை உருவாக்கி என்னை முதல் மாணவனாக ஆக்கியது!!

    பதிலளிநீக்கு
  6. Hi alaunga,
    Good Inspiration that you have experienced.

    I think,I too experienced the same one,But I didn't treat this the way you took it.
    I appreciate you still you remembered and shared this with us..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும...

செவ்வாய் கிரகத்தில் கியூரியோசிட்டி தரையுளவி [Curiosity Rover]

  நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியோசிட்டி  தரையுளவி (Curiosity  Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது. 06 ஆகஸ்ட் 2012 அன்று கேல் எரிமலைப்பள்ளத்தாக்கில்(Gale Crater) இறங்கியது. அதன் சிறப்பம்சம் என்ன? எப்படி செவ்வாயின் பரப்பை அடைந்தது? அதன் திட்டக் நோக்கம் என்ன? என்ன விதமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது? செவ்வாயில் உயிர்கள் இருப்பைப் பற்றி எதுவும் கண்டறியுமா? சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர்  நாசா விஞ்ஞானிகள். நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய Curiosity என்கிற தரையுளவி (Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததாம். புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம். அந்த படங்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து புதிது புதிதாக அப்லோட் செய்கிறதாம்.. அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்து தனது ஸ்டேடஸை அப்டேட் செய்கிறதாம் (பேஸ்புக்கில் அல்ல!) !!    ...