முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெஸ்டம்பர் (Festember)

9 செப்டம்பர்  2005, வெள்ளிக் கிழமை

என்னுடன் இயந்திரவியல் படித்த நண்பர்களால் மறக்க முடியாத நாள்..

அந்த நாள் பெற்ற சிறப்பினை அறியும் முன்னர், சில தகவல்களை அறிவோம்!!

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (National Institute of Technology - NIT, Trichy) அதன் கல்விக்கு மட்டுமன்றி கலை நிகழ்ச்சிகளுக்கும் பெயர் பெற்றது.
அந்த கல்லூரி நடத்தும் கலை நிகழ்ச்சி தான் பெஸ்டம்பர் (Festember) - செப்டெம்பர் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வார இறுதியில் நடைபெறும் கலை நிகழ்ச்சி.
 



 இந்திய அளவில் அனைத்து கல்லூரி மாணவர்களும் கூடும் நிகழ்ச்சி என்பதால், அரங்கமே களைகட்டும்.. பெஸ்டம்பர்  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை, பார்க்கவாவது கல்லூரி இளவட்டம் குவிவது வழக்கம்!

இப்படி பலராலும் எதிர்பார்க்கப்படும் பெஸ்டம்பர் செப்டம்பர் 8 ஆம் தேதி (2005) துவங்குவதாக தகவல் பலகையில் ஒரு அழைப்பிதழ் தொங்கியது! பார்த்த உடனே அனைவருக்கு மனதிலும் நிகழ்ச்சியைக் காண ஆசை!
வெறும் 150 கி.மீ தூரம் எங்களைப் பார்க்க விடாமல் இருக்க செய்து விடுமா?

8 ஆம் தேதி துவக்க விழா.. அன்று பெரிதாக கலை நிகழ்ச்சிகள் ஏதும் இருக்காது! மறுநாள் மாலை தான் களைக்கட்டும்!

ஆனால், 9 ஆம் தேது வெள்ளிக்கிழமை ஆயிற்றே?
எல்லாரும் சேர்ந்து கிளாஸை மாஸ் கட் செய்யலாம்!!
என்ன!!  HOD கூப்பிட்டு திட்டுவார்.. இதுக்கெல்லாம் அசரும் ஆட்களா நாங்கள்!!


ஆனால், ஷிவ் கெரா அவர்கள் கூறியது எங்கள் அனைவரின் ஞாபகத்திற்கு வந்தது:
" வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை. அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்."

 அன்று அதிகாரப்பூர்வமாக (??!!) கிளாஸ் கட் செய்வது (!!) என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!!! ஆனால் எப்படி?
ஒரே வழி.. ஒரு தொழிலகப் பயணம் (industrial Visit- IV) மேற்கொள்வது!!

திருச்சி தானே.. இருக்கவே இருக்கு பாரத மிகுமின் நிறுவனம் (BHEL)!!
எங்கள் வகுப்பின் மூலமாகவே முகவர்கள் உண்டு.. (அதாங்க.. அங்கு வேலை செய்பவர்களின் வாரிசுகள்!)
ஒரு வழியாக அங்கு ஒரு நாள் சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கியாயிற்று!

சரி.. அடுத்து எங்களுடன் வருவதற்கு ஒரு விரிவுரையாளர்..
எங்கள் திட்டம் மறைமுகமாகத் தெரிந்தாலும், எங்கள் உதவி பேராசிரியர்  ஒப்புக் கொண்டார்!!  (அவர் எங்க ஆளாச்சே...)

ஆனால், இரு நாட்களுக்கு முன் தான் அந்த இடி விழுந்தது!!
எங்கள் உதவி பேராசிரியர் 'மனைவிக்கு உடல் நிலை சரியில்லை.. எனவே, வர இயலாது' என்று சொல்லி அனுப்பினார்..

இது என்ன புது சோதனை?? யாராவது ஒரு ஆள் வேண்டுமே!!

ஒவ்வொரு விரிவுரையாளரையாய்ப் போய் பார்த்து வரும் படி அழைத்தோம்.. ஆனால், எங்களைப் பற்றி ஒரு மிக நல்ல (??!!) பெயர்  இருந்ததால் யாரும் வர விரும்பவில்லை!!

எங்களுக்கு வேண்டியதெல்லாம் 'சரி' என்கிற ஒரே ஒரு வார்த்தை.. ஓஹோ என்ற வாழ்க்கை!

இறுதியில், விரிவுரையாளர் கட்டதுரையைப்  (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  பார்க்க சென்றோம்...

 கட்டதுரை துப்பறியும் நிபுணர் ஆகியிருக்க வேண்டிய ஆள்.. எப்படியோ தப்பி, எங்களிடம் மாட்டிக் கொண்டார்!!
எங்கள் திட்டத்தை (யாரும் அதைப் பற்றி மூச்சு விடாமலேயே!!) எப்படியோ கண்டுபிடித்து விட்டார்!!!

"இங்கப் பாருங்கப்பா.. நான் உங்க கூட வர ரெடி!! ஆனா, மூன்று கண்டிசன்.."

"சொல்லுங்க... சார்" (என்ன கொடுமை சாமி!)

"முதலாவது, பஸ்ல யாரும் சத்தம் போட கூடாது!! டான்ஸ், பாட்டு எல்லாம் கட்.. அப்படி எதாவது பண்ணீங்க.. பஸ்ஸ அப்படியே காலேஜ் பக்கம் திருப்பிடுவேன்"

"சரி.. சார்" (உருப்பட்டாப்ல தான்!!)

"ரெண்டாவது, யாரும் IV அப்ப எடக்கு மடக்கா கேள்வி கேட்க கூடாது! என்ன சொல்றாங்களோ அதைக் கேட்டுட்டு விட்றணும்"

"ஓகே சார்"

"அப்புறம் , எல்லாரும் போன பஸ்லயே திரும்ப வந்திடணும்!!! ஊரு அது இதுன்னு யாரும் அங்கயே தங்க கூடாது!"

 இதைக் கேட்ட அனைவரும் சற்று அதிர்ந்து தான் போனோம்!!
'அடப்பாவி!! அதுக்குத் தானே போறோம்! அதுக்கு இங்கயே இருந்திடலாமே!!'

"என்னப்பா... சத்ததையே காணோம்?  இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டா நான் வரேன்.. என்ன டீலா நோ டீலா?"

வேறு வழியில்லை.. யாராவது வேண்டும்..

"ஓகே சார்" என்று அரைமனதாக அனைவரிடம் இருந்தும் பதில் வந்தது!

ஏதோ தைரியத்தில் ஓகே சொல்லி விட்டோம்!!  என்ன செய்வது?

மீண்டும் ஷிவ் கெரா கை கொடுத்தார்:
" வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை. அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள்."

"மச்சான்.. கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை.. நம்ம கூட விளையாடுறதே வேலையாப் போச்சு!"

"சரி.. கட்டம் கட்டிருவோம்!! ஏற்கனவே தீர்க்க வேண்டிய பழைய பாக்கி ஒண்ணு இருக்குல!! இப்ப முடித்துடுவோம்!"

**********************************
வெள்ளி விடிந்தது..
திருச்சி செல்லும் பேருந்து எங்கள் கல்லூரி வளாகத்துக்குள் வந்தது!!


 ஒரு சின்ன சத்தம் கூட போடாமல், அமைதியாக நாங்கள் பஸ்ஸில் ஏறுவதை எங்கள் கல்லூரியே வேடிக்கை பார்த்தது!

******************************

மதியம்

அனைவரும் அமைதியாக தொழிலகத்தைச் சுற்றிப் பார்த்தோம்..

"இத்தனை ஒழுக்கமா எந்த காலேஜ் பசங்களும் வந்ததில்ல.. ஆனாலும், நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் சார்!"

கட்டதுரையைப் பார்க்க வேண்டுமே.. அவர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்..
பின்னே, "மோசமானவங்களேயே முக்கியமானவங்க" என்று பெயர் எடுத்திருந்த எங்கள் வகுப்பை 'எடுப்பார் கைப்பிள்ளை' போல நடத்துவது என்பது அவ்வளவு சுலபமா!!

பாவம்.. இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப்போவது அவருக்குத் தெரியாது!!

***********************************
அன்று மாலை...
IV முடிந்து எல்லாரும் BHEL வளாகத்திற்கு வந்தோம்..


கட்டதுரை மட்டும் எதையோ தேடிக் கொண்டிருந்தார்...

"தம்பிகளா.. இந்த பஸ்காரன் எங்க போனான்? அவனையும் காணோம்! பஸ்ஸையும் காணோம்!!"

"எந்த பஸ் சார்?"

"நம்ம வந்த பஸ் தான்"

"அது ####### கம்பெனி பஸ் சார்.. அவங்க டிப்போல இருக்கும்! இல்லனா சவாரி போய் இருக்கும்"

"என்னப்பா காமெடி பண்றீங்க? அப்ப நாம எப்படி போறது?"

"பஸ்ல தான்!"

"அட என்னப்பா.. அதான் எப்ப?"

"ஞாயிற்றுக் கிழமை"

"என்னது?"

"ஆமா சார்... திருச்சி வர மட்டும் தான் புக் பண்ணினோம்.. போறதுக்கு நாளைக்குத் தான் போய் புக் பண்ணணும்..  உங்களுக்குத் தெரியாதா?"

கட்டதுரையின் முகத்தில் அதிர்ச்சியின் சாயல்.. இவ்வளவு கரி அவர் முகத்தில் பூசப்பட்டதே கிடையாது.. இனி பூசவும் முடியாது!!!


அப்புறம், ஒரு பஸ்சில் ஏற்றி அவரை அனுப்பி வைத்தது தனி கதை!

திங்கள் கிழமை நாங்கள் எண்ணியவாறே விடிந்தது...
சரமாரியான திட்டுக்களுடன்!!!
(ஷிப்ட் போட்டு திட்டினாங்க என்றால் பார்த்துக்கோங்களேன்!!)

ஆனால், அதற்கு எல்லாம் கவலைப்பட முடியுமா?


திட்டு வாங்குவதற்கு பயப்பட்டு இருந்தால், அவ்வளவு சிறப்பாக இரு நாட்கள் பொழுது போய் இருக்குமா?

வள்ளுவர் சும்மாவா சொன்னார்:
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு.


பி. கு: நாங்கள் இப்படி பார்த்த பெஸ்டம்பர் 2005 அந்த ஆண்டிற்கான சிறந்த கலை நிகழ்ச்சிக்கான பரிசை தமிழக அரசிடம் பெற்றது ஒரு கூடுதல் தகவல்!

கருத்துகள்

  1. ஹாய் அருண்
    நான் பாலாஜி (EEE Mullu Balaji )..... இன்று தான் உன்னுடைய வலைப்பதிவை பார்வையிட்டேன்.... என் வலைப்பூ முகவரி.... http://balajib2bl.blogspot.com

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும