முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!

வணக்கம் நண்பர்களே...

வழக்கம் போல எனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்! அதில் இணைய திரட்டியான தமிழ்10 தளத்தில் இருந்து ஒரு மடல் இருந்தது.

"Stenzer உங்கள் இடுகையில் கருத்து தெரிவித்துள்ளார்" என்று ..

'அடடா... நாம எழுதுறதையும் படிச்சு பார்த்து ஒருத்தர் கமெண்ட் சொல்லியிருக்காங்களே!' என்று ஆர்வமாக அஞ்சலை வாசித்தேன்!!!!

வணக்கம் aalunga, 

தமிழ்10 தளத்தில் நீங்கள் பகிர்ந்த " அவிழ்மடலும் இனி..... பிளாக்கருக்கு நன்றி!" என்னும் இடுகைக்கு "stenzer "கருத்து தெரவித்துள்ளார் .

" ஹலோ செல்லம் என் பெயர் binta உள்ளது உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல். binta முத்தம் "

என்னய்யா இது? ஒன்றுமே புரியலையே!!  ஒரு வேளை சொல்ல வந்த கருத்தை மொழிபெயர்த்து போட்டிருக்காங்களோ என்று அதை கூகிள் மூலம் மொழிபெயர்த்தேன்!!!
பதிலைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகிட்டேன்

Hello dear

My name is binta

Your profile is so cute, I saw your profile today, you may be interested to know, here is my email address (bintajaafar@yahoo.com) I send you my photos, please send an e-mail me and I have to tell them about my self. Remember distance, color, religion or tribe does not matter but love matters (bintajaafar@yahoo.com) E-mail me.

Kiss binta

அதிர்ச்சியில் தமிழ்10 தளத்தைச் சொடுக்கினேன். எனது பழைய பதிவில் கமெண்ட் இருந்தது. யாரோ செய்யும் சில்மிஷம் என்று உணர்ந்து அந்த Stenzer இன் சுயவிவரப்பக்கம் போனேன்..


அந்த Profile சொந்தகாரான் (ரி) எந்த பதிவையும் இடவில்லை... மொத்தம் 646 கமெண்ட் மட்டும் போட்டிருக்கிறான்(ள்).....


என்னைத் தவிர பலருக்கும் அதே கமெண்ட் போட்டிருக்கிறான்.. பலருக்கும் ஆங்கில மொழியாக்கத்துடன்!!!

சிலருக்கு Binta என்கிற பெயரிலும், சிலருக்கு Stella என்கிற பெயரிலும் போட்டிருக்கிறான்!!
இதில் Stella என்கிற பெயரில் எழுதும் போது, நல்ல தமிழில் எழுதியிருக்கிறான்!!

இந்த கயவன் இது போல கமெண்ட் கொடுத்த சில தளங்கள்: பிளாக்கர் நண்பன் , வீடு, வந்தே மாதரம், அட்றாசக்க, வெங்காயம், கோவைநேரம் , பிளேட்பீடியா, சென்னை பித்தன்வேர்களைத் தேடி 
  

பதிவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்!!



அவிழ்மடல்

கருத்துகள்

  1. எனக்கும் மூணு நாளா வருது சகோ. நண்பர்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இரண்டு நாளுக்கு முன்னர் எனக்கும் மெயில் வந்தது நண்பா! இது பற்றி தமிழ் 10 தளத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். நிச்சயம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. TAMIL10தளத்தினர் தொடர்ந்து அந்த கமெண்ட் அனைத்தையும் அழித்து கொண்டு தான் உள்ளனர் இருந்தாலும் தொடர்ந்து கமெண்ட் போட்டு கொண்டே உள்ளது அந்த BAD BOY.....

      நீக்கு
  3. எனக்கும் வந்துருக்கு ம்ம்ம்ம் அலர்ட்டா இருப்போம் நன்றி...

    பதிலளிநீக்கு
  4. எச்சரிக்கை செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  5. இந்த மெயில் எனக்கு அளவுக்கு அதிகமாகவே வந்துள்ளது சகோ..... இருந்தாலும் நான் அடையாளம் கண்டுவிட்டேன். அழித்தும் விட்டேன்... பலருக்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி சகோ... நான் இது தொடர்பாக தமிழ் 10 தளத்திற்கு மெயில் அனுப்பியும் பதில் இல்லை.

    www.puthiyaulakam.com

    பதிலளிநீக்கு
  6. சார்................இரண்டு நாளா நாலு ஐடில இந்த மெசேஜ் வந்துகொண்டேயிருக்கு.....விட்டுடக்கூடாது இத யாரெண்டு கண்டுபுடிச்சேயாகனும்..:)

    பதிலளிநீக்கு
  7. எனக்கும் வந்து கொண்டே இருக்கிறது....யாராவது இதை தடுக்க ஐடியா சொல்லுங்கப்பா...

    பதிலளிநீக்கு
  8. எச்சரிக்கைக்கு நன்றி அன்பரே

    பதிலளிநீக்கு
  9. அய்யோ எனக்கு மெயில் வரலியே. நான் பிரபல பதிவர் இல்லியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை பார்த்து பயந்திருப்பாங்க போல..

      :D :D :D

      நீக்கு
  10. நன்றி நண்பா ,நல்ல தகவல்

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் வந்தது. தமிழ் 10 எனக்கு அறிவித்தது.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  12. எனக்கும் வந்தது சகோ...அவரது விபரத்தை தேடியபொழுது இந்த லிங்க் கிடைத்தது....http://www.romancescam.com/forum/viewtopic.php?f=4&t=43008

    பதிலளிநீக்கு
  13. எனக்கும் வந்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  14. தமிழ் 10 தளம் அடிக்கடி ஹேக்கர்களால் ஹேக் செய்யப்படுகின்றது...!எச்சரிக்கை பதிவுக்கு நன்றி! உங்கள் பர்சனல் மெயில் ஐடியில் யாரும் பிளாக் எழுத பயன்படுத்த வேண்டாம் பேங்க் போன்ற விசயங்களுக்கு இந்த ஐடியை கொடுக்க வேண்டாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் 10 யாராலும் ஹாக் செய்யப் படவில்லை , ஒருவர் பின்னூட்டம் இடுவதற்கு இணையத்தை ஹாக் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை . இது சாதரணமாக அனைத்து இணையங்களுக்கும் நடப்பது தான் , ஆனால் தமிழுக்கு இது புதிது என்பதால் அனைவரும் மிரட்சியுடன் பார்கின்றனர் .உங்கள் மின்னஞ்சலுக்கு அப்படி ஓர் தகவல் வந்திருந்தால் அதற்கு பதில் அனுப்பாமல் இருந்தாலே போதும் .இதற்கும் உங்கள் ஒடுப்பட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . மேலும் இதே பின்னூட்டங்கள் கூகிளின் பிளாக்கர் தளங்களுக்கும் இடப் பட்டுள்ளன .அப்படியாயின் கூகுளின் பிளாக்கர் தளங்களையே ஹாக் செய்து விட்டதாக அர்த்தம் ஆகாது . இணையத்தில் ஸ்பாம் அஞ்சல் என்பது மிகவும் சாதாரண விடயம் , எனவே இதனைக் கண்டு அஞ்சாமல் அதற்கு பதில் அளிக்காமல் விட்டு விடுங்கள் . இப்போது எமது பின்னூட்ட முறையில் மாற்றம் செய்திருப்பதால் இனி இவ்வாறான பின்னூட்டங்கள் வராது என நம்புகிறோம் .

      @ வீடு சுரேஷ்குமார் தயவு செய்து இவ்வாறு தவறான தகவல்களை வெளியிடாதீர்கள் .(எம் தளம் இது வரை ஒரு முறை கூட எவராலும் ஹாக் செய்யப் படவில்லை, ஒட்டுபட்டையில் மட்டும் ஒருமுறை சிறிய கோளாறு ஏற்பட்டது, எம் தளம் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கின்றது )

      நன்றி
      தமிழினி
      tamil10

      நீக்கு
    2. தங்கள் ஆலோசனைக்கு நன்றி...
      இனி புதிய முகவரியில் இருந்து ஆளுங்க தொடர்வான்!!

      நீக்கு
  15. tamil 10 திரட்டி லிங்கை பிளாக்கில் போட்டு வைத்திருப்பவர்கள் தூக்கிடரது நல்லதுன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. நண்பரே! தமிழ் 10 தளத்தினர் பதில் அனுப்பியிருந்தார்கள்.

    தற்போது பின்னூட்டத்தில் சில மாற்றங்கள் செய்திருப்பதாகவும், இனி இந்த தவறுகள் நடக்காது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    பதிலளிநீக்கு
  17. எனக்கும் வந்துருக்கு சார்... கவனமா இருப்போம்... நன்றி...

    பதிலளிநீக்கு
  18. எனக்கும் அதே மெயில் வந்தது. நான் "ஹாய்' என்று மெயில் அனுப்பினேன். அதற்கு வந்த ரிப்ளையை பாருங்கள்:

    Hello dearest,
    Thanks for the reply my mail km. How is your day? I think enough. Dear, there's a little hot in Dakar, Senegal. My name is Bint Jaafar I'm 23 years old, from Sudan in northeast Africa. I am 5 '7 "tall, fair in complexion, Single (never married), I'm glad we are friends Dobri ideálně shares, foreign exchange MMS messages with sincerity. All you need is a friend of encouragement. I live alone, father Dr.Omar late because of company director Jaafar Omar (Ltd.) was a personal adviser to the former head of state before the rebels attacked our house one early morning killing my mother and father in cold blood. I currently live in the refugee camp here in Dakar Senegal as a result of civil war that was fought in my country. to me that that managed to survive themselves, make their way to neighboring countries and Senegal, where he now lives in a refugee camp v VAM and your computer belongs to the Reverend Pastor, who has church here in the camp. by Almighty God that I am alive today is in good health. My hobbies are reading, cooking, cinema, films, dance council children. I would like to know more about you. rádodpory Vase, hobbies, what words of blame Share presently.Just me about himself to me in motion. tell me about your country, culture, will be that I'm happy about yourself. tell you more about myself in my next mail
    Attached here is my photo hope bude like him,
    Hoping to hear from you soon,
    Yours friend
    binta

    உடனே அந்த மெயில் ஐடியை ப்ளாக் செய்த்விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க தமிழில் பதில் அனுப்பியிருக்கணும்!

      நீக்கு
    2. அந்த போட்டோவை போட்டிருந்தால் நாங்களும் கொஞ்சம் ஜொள்ளியிருப்போம் ஹி ஹி ஹி!

      நீக்கு
    3. நமக்கு போட்டோல்லாம் எதுவும் வரலீங்க... ராஜா சாருக்கு மட்டும் வந்ததோ என்னவோ :D

      நீக்கு
  19. எனக்கும் வந்தது.. எச்சரிக்கைக்கு நன்றி சகோ...
    இதனால் பாதிப்பு எதுவும் உண்டா..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மடலை நிராகரித்தால் எந்த பாதிப்பும் இல்லை சகோதரி

      நீக்கு
  20. தமிழ் 10 யாராலும் ஹாக் செய்யப் படவில்லை , ஒருவர் பின்னூட்டம் இடுவதற்கு இணையத்தை ஹாக் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை . இது சாதரணமாக அனைத்து இணையங்களுக்கும் நடப்பது தான் , ஆனால் தமிழுக்கு இது புதிது என்பதால் அனைவரும் மிரட்சியுடன் பார்கின்றனர் .உங்கள் மின்னஞ்சலுக்கு அப்படி ஓர் தகவல் வந்திருந்தால் அதற்கு பதில் அனுப்பாமல் இருந்தாலே போதும் .இதற்கும் உங்கள் ஒடுப்பட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . மேலும் இதே பின்னூட்டங்கள் கூகிளின் பிளாக்கர் தளங்களுக்கும் இடப் பட்டுள்ளன .அப்படியாயின் கூகுளின் பிளாக்கர் தளங்களையே ஹாக் செய்து விட்டதாக அர்த்தம் ஆகாது . இணையத்தில் ஸ்பாம் அஞ்சல் என்பது மிகவும் சாதாரண விடயம் , எனவே இதனைக் கண்டு அஞ்சாமல் அதற்கு பதில் அளிக்காமல் விட்டு விடுங்கள் . இப்போது எமது பின்னூட்ட முறையில் மாற்றம் செய்திருப்பதால் இனி இவ்வாறான பின்னூட்டங்கள் வராது என நம்புகிறோம் .

    @ வீடு சுரேஷ்குமார் தயவு செய்து இவ்வாறு தவறான தகவல்களை வெளியிடாதீர்கள் .(எம் தளம் இது வரை ஒரு முறை கூட எவராலும் ஹாக் செய்யப் படவில்லை, ஒட்டுபட்டையில் மட்டும் ஒருமுறை சிறிய கோளாறு ஏற்பட்டது, எம் தளம் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கின்றது )

    நன்றி
    தமிழினி
    tamil10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு நன்றி!!
      இந்த பதிவு பதிவர்களை அந்த Spam குறித்து எச்சரிப்பதற்கே!
      தங்கள் தளத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.. இனி வராது என்று நம்புவோம்!!

      நீக்கு
    2. புரிந்து கொண்டமைக்கு நன்றி .தொடர்ந்தும் எங்களுடன் இணைந்திருங்கள் .


      தமிழினி

      நீக்கு
  21. Spam ன்னு மார்க் பண்ணிட்டு லூஸ்ல விடுங்க பாஸ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரிங்க... ஆனால், மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கைக்குத் தான்!

      நீக்கு
  22. படித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  23. எனக்கும் வந்தது உடனே அழித்து விட்டேன்

    பதிலளிநீக்கு
  24. எனக்கும்தான்.. எனக்கும் இதுபோல மின்னஞ்சல் வந்தது.. முதல் முறை பார்க்கும்போது எதுவும் புரியவில்லை..முழுவதுமாகப் படித்ததும் Spam வகை மின்னஞ்சல் போல இருந்தது.. மீண்டும் அவ்வாறான மின்னஞ்சல்களை நான் திறப்பதே இல்லை.. தகவலளித்து எச்சரிக்கை செய்த "ஆளுங்க" சார் அவர்களுக்கு நன்றி.. அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது...!

    பதிலளிநீக்கு
  25. எமக்கும் அந்த மின்னஞ்சல் வந்தது reply செய்யாத போது என். உலகநாதன் அவர்களுக்கு வந்த reply-யும் வந்தது. உசாராகிவிட்டேன் இருப்பினும் எதுவரைதான் என்று பார்போம் என்ற ஆவலில் உள்ளேன்.....

    பதிலளிநீக்கு
  26. நண்பர் ஒருவர் தமிழில் 'நன்றி' என பதில் அனுப்பியிருக்கார். அதற்கு பதில் எதுவும் வரவில்லையாம்...
    அப்படின்னா கண்டிப்பா கூகிளும் சம்பந்தப்பட்டிருக்கு... அதாவது, கூகிள் மூலம் டிரான்ஸ்லேட்டி போட்டிருக்கிறான் (ள்)..
    (அந்த வாக்கியத்தைப் பார்த்தாலே தெரியுது!!)

    பதிலளிநீக்கு
  27. எனக்கும் அந்த மின்னஞ்சல் வந்தது, இது ஏதோ கோக்குமாக்கு வேலை என்று அழித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  28. எனக்கும் மெயில் வந்தது நண்பா!

    பதிலளிநீக்கு
  29. உங்கள் பிளாக்கிற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா? உங்கள் பதிவுகளை உடனுக்குடன் http://www.hotlinksin.com திரட்டியில் இணைத்திடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே!!
      நான் ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தேன்.
      ஆனால், கடவுச்சொல் மறந்ததால் உள்புக முடியவில்லை..

      Password reset கொடுத்தும் எந்த அஞ்சலும் வரவில்லை. சற்று கவனிக்கவும்!

      நீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும