முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியப் பெண் பெற்ற 11 குழந்தைகள் (நம்பாதீங்க - பகுதி 11)

வணக்கம் நண்பர்களே..
நமது "நம்பாதீங்க" தொடர் வெற்றிகரமாக தனது 11 ஆம் பகுதியை வெளியிடுகிறது.

11 என்கிற எண்ணிற்கு என்ன சிறப்போ தெரியவில்லை.. இந்த பதிவும்  11 ஐப் பற்றியது தான்!!

சில மாதங்களாக இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்த விடயம் ஒரு அதிசய விடயமாகத் தான் மருத்துவ உலகால் நோக்கப்பட்டு வருகின்றது.
இந்தியப் பெண் ஒருவர் ஒரே தரத்தில் 11 குழந்தைகளுக்கு தாய் ஆகி உள்ளார் என்கிற பரபரப்புச் செய்தி முன்னர் வெளியாகியிருந்தமை தொடர்பாக ஏராளமானோர் அறிந்து இருப்பீர்கள்.
உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி இவை பிறந்தன என்றும் தாயும், சேய்களும் நலமாக உள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது.
பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஒன்றாக குழந்தைகளுடன் எடுத்துக் கொண்டவை என்று சொல்லப்படுகின்ற புகைப்படங்கள் இணையத் தளங்களில் பிரசுரம் ஆகி இருக்கின்றன.
இது நம்ப முடியாத செய்திதான். ஆனால் நடக்க கூடிய காரியம்தான் என்கிற மருத்துவ உலகம்.
இந்த 11 குழந்தைகளும் ஒரே தாய்க்கு பிறந்தவைதான் என்று நிரூபிக்கின்ற பட்சத்தில் அதிக குழந்தைகளை ஒரே தரத்தில் பிரசவித்த சாதனையாளர் ஆகி விடுவார் இந்திய பெண்.
எதிலும் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் இது.


தமிழில் வந்த செய்தி:
அதிசய தினத்தில் பதினொரு குழந்தைகளை ஒரே தரத்தில் பெற்ற இந்தியப் பெண்
ஒரே தரத்தில் பதினொரு குழந்தைகளைப் பெற்று இந்தியத் தம்பதி சாதனை


இந்த செய்தி எந்தளவு உண்மை??

இது மெய்யாலுமே உண்மையான படம் தாங்க.. எந்த போட்டோசாப்பும் பயன்படுத்தவில்லை.

செய்தி பாதி உண்மை; பாதி பொய்!!

எப்படி?

சூரத் நகரத்தில் உள்ள பிரபலமான மருத்துவமை 21st Century Hospitals. இங்கு வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In vitro fertilisation) மூலம் பல தம்பதிகள் குழந்தை பெற்றுள்ளனர்.

இந்த மருத்துவமனையில் பிப்ரவரி 2011 இல் சோதனைக் குழாய் குழந்தைகளைப் பிரசவித்த 30 பெண்களுள் 11 பேர் தங்கள் குழந்தை 11-11-2011 அன்று பிறக்க வேண்டினர். அவர்கள் விருப்பத்தை மருத்துவர்களும் நிறைவேற்றினர்.


அதன் படி, 11-11-11 அன்று 11 குழந்தைகள் அந்த மருத்துவமனையில் பிறந்தன.. அதுவும் சோதனைக் குழாய் முறையில்!!

இந்த நிகழ்வு நடக்கப் போவதாக அதற்கு முந்தைய நாள் டைம்ஸ் ஆப் இந்தியா டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டது.12-11-11 அன்று ஒரு வட இந்தியப் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியைக் கீழே பார்க்கவும்:


 இணையத்தில் இது பற்றிய பதிவு: 11 LSCS deliveries on 11.11.11

நன்றி: ஹோக்ஸ்லேயர்

நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண:  நம்பாதீங்க- தொடர்

அவிழ்மடல்

கருத்துகள்

  1. நன்றி நண்பா., உண்மையை விளக்கியமைக்கு.!

    பதிலளிநீக்கு
  2. நானும் நம்பிட்டேன்...!விளக்கத்துக்கு நன்றி!தொடர்ந்து 11டன் நிறுத்தாமல் அறிவு கண்ணை திறந்து கொண்டே இருங்கள்!

    பதிலளிநீக்கு
  3. அட.... இப்படியும் இருக்காங்களா??

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அடப் பாவிகளா ! எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க ....

    பதிலளிநீக்கு
  5. முதலில் மக்கள்.. பதினோரு குழந்தைகள் இவ்வளவு பெரியதாக இருந்தால் ஒரு தாயால் பெற்றெடுக்க முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்..

    …ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்த பட்சம் 1.5கி.கி நிறை போட்டாலும் 17.5கி.கி நிறை வந்திடும்.. போக பனிக்குடம்.. அதிலுள்ள உயவுத் நீர்மம்.. இப்படி 22கி.கி மேல் வந்திடும்.. இது உறுதியாக நிகழவியலாதது.

    …மேலும் வயிற்றின் பருமனளவும் மிகவும் முக்கிமானது..

    …இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே.. குறைந்த எடையுடன் தான் குழந்தைகள் பிறக்கும்..

    பதிலளிநீக்கு
  6. படித்து கருத்திட்ட வரலாற்று சுவடுகள், வீடு சுரேஸ்குமார்,அசால்ட் ஆறுமுகம், தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் மற்றும் Math Larks ஆகியோருக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...