முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாரது யாரது? (கண்ணை நம்பாதே #1 )


கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் 
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது

உங்கள் கண்களுக்குக் கொஞ்சம் விளையாட்டு காட்டுவோமா?

  • கீழ்காணும் படத்தில் தெரியும் பெண்ணின் மூக்கில் உள்ள சிவப்பு புள்ளியை தொடர்ந்து 30 - 40 வினாடிகள் உற்று நோக்குங்கள்.
  • கண்களை வேகமாக வெற்றிடம் நோக்கித் திருப்புங்கள் (சுவர் / வெள்ளைத் தாள் / புது தத்தல்)
  • கண்களை வேகமாக இமையுங்கள்.
 

இப்ப என்ன தெரிகிறது?

அந்தப் பெண் உங்கள் கண்களுக்குத் தெரிகிறாரா?

சரி, இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது?

நீங்கள் கண்ட தோற்ற மயக்கம் ஒரு ஒளியியற்கண்மாயம் (Optical Illusion)  ஆகும்.  இதற்கு 'எதிர்மறை பின் தோற்றம்' (Negative After Image) என்று பெயர்.

கண்களில் உள்ள ஒளி உணர்விகளின் (Photoreceptors) துணைக் கொண்டே வண்ணங்களின் கலவையான உலகினை நம் கண்கள் காட்டுகிறன (இவற்றைப் பற்றி பிறிதொரு நாள் பேசுவோம்.) 
மேற்கண்ட படத்தைப் பார்த்த போது என்ன செய்தோம்? தொடர்ந்து ஒரே நிறத்தின் மீது கவனம் செலுத்தினோம் !!

ஒரே நிறத்தை  (அலை நீளத்தை) அதிக நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தால், கூடுதல் வெளிப்பாடு (Exposure) காரணமாக, குறிப்பிட்ட ஒளி உணர்விகள் சிறிது நேரம் தங்கள் உணர்திறனை (Sensitivity) இழந்து விடும். 
உடனடியாக வெற்றிடத்தைப் பார்க்கும் போது, தங்கள் செயல் திறனை (தற்காலிகமாக) இழந்த உணர்விகள் மிகவும் மங்கி செயல்படுகிறன. பிற உணர்விகள் வழக்கம் போல செயல்படுகிறன.
 பிற உணர்விகளின் உணர்திறன் அதிகமாகத் தெரிவதால், மூளை அவற்றைக் கொண்ட உருவத்தை நமக்குக் காட்டுகிறது. நாம் முன்பு பார்த்த படம் நேர்மாறான நிறங்களுடன் (inverted Colours) நமக்குத் தெரிகிறது.

தெரிந்த படம் இது தானே?

இன்னொரு விளையாட்டு:
இந்த கருப்பு பல்பை 20 - 30 வினாடிகள் உற்றுப் பாருங்க.. அப்புறமா, சுவற்றைப் பாருங்க!

என்ன? சுவற்றில் பல்பு எரியுதா?

கொசுறு:
என்ன ஆனாலும், நம்ம மூளை ரொம்ப கில்லாடி.. 'ஏதோ பிரச்சனை' என்று சில நுண்நொடிகளில் (Micro Second) கண்டறிந்து, சரி செய்து விடுகிறது... (இல்லையெனில், ஆயுள் முழுக்க அந்த செல் (Cell) அவுட் ஆக வேண்டியது!! )

நன்றி: விக்கிபீடியா, யாஹூ கேம்ஸ், Worqx, Omnivision, Patrick ,ஹாரி 2G, ப்ளாக்கர் நண்பன்

பதிவு எழுத கருவைத் தேற்றிக் கொடுத்த ஹாரிபாட்டர் அவர்களுக்கும்,  ப்ளாக்கர் நண்பன் அப்துல் பாசித் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!!
நம்ம கண்களுக்கு முதன்முதலில் சவால் விட்டு கண்கட்டு வித்தை காட்டியவர் மந்திரவாதி தான்!! இது போன்ற படங்களை நீங்களும் உருவாக்க வழி சொல்கிறார் நம்ம நண்பன்!!  (
செயல் முறை விளக்கமும் உண்டு!)


டிஸ்கி:

சிலருக்கு இந்த வித்தை சரிவர வேலை செய்யாமல் போகலாம். அவர்களுக்காக: http://youtu.be/Pt3wGMcTG2E

கண்ணா... இது வெறும் டிரைலர் தான்..மெயின் பிச்சர் நீ இன்னும் பாக்கல... அது இனி தான்!!

அவிழ்மடல்

கருத்துகள்

  1. தமிழ் திரட்டி ( www.tamiln.org ) தமிழன்.

    பதிலளிநீக்கு
  2. முழுமை பெறாத என் பதிவை உங்கள் பதிவு மூலம் முழுமையடைய வைத்ததற்கு நன்றி நண்பா!

    பல்பு பிரகாசமாக எரிகிறது.

    பதிலளிநீக்கு
  3. அட சூப்பருங்க.. கிட்டத்தட்ட தொடர் பதிவு போல போகுது போல.. தகவல்களுக்கு நன்றிகள் நண்பா.. இலவச விளம்பரத்துக்கு உங்களுக்கு "அந்த" ஓலை மூலம் பணம் அனுப்பி வைக்க படும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்கதை எழுதுவதைத் துவக்கியதே நீங்க தானே!! :)
      அடுத்து யார் தொடரப் போறாங்க? பார்ப்போம்!

      நீக்கு
  4. நண்பா மொபைல் டைனமிக் வியு வைதுளீர்கள் போல அத முடிந்தால் மாத்துங்க நண்பா லோட் ஆக நேரம் எடுக்கிறது

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அருண் ...
    நல்ல தகவல்களை மிகவும் எளிமையாக விளங்கும் படி தந்த உங்களுக்கு என் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  6. நலல்தொரு முயற்சி! இதுபற்றி புத்தகங்களில் படித்திருக்கிறேன்! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    பதிலளிநீக்கு
  7. பதிவைப் படித்து கருத்திட்ட முனைவர்.இரா.குணசீலன், சு ராபின்சன், Gnanam Sekar,
    அப்துல் பாசித், ஹாரி பாட்டர், அரசன், suresh (தளிர்) ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி!!

    பதிலளிநீக்கு
  8. விளையாட்டுடன் கூடவே அறிவியல் தகவலும். அருமை!

    பதிலளிநீக்கு
  9. நல்ல அருமையான விளக்கமான பதிவு!

    பல்பு பயங்கரமா எரியுது! :)

    பதிலளிநீக்கு
  10. ஆஹா... கலக்கல் நண்பரே...

    மெயின் பிச்சர் எப்போது...?

    பதிலளிநீக்கு
  11. விலங்குகளுக்கும் இப்பிடித்தான் தெரியுமா?

    பதிலளிநீக்கு

  12. அபாரமா வேலை செய்யுது சார் ......... பார்க்குமிடமெல்லாம் தீப்ஸ் தெரியுறா சார்............சூப்பர்............

    பதிலளிநீக்கு
  13. கலர் ப்ளைண்ட்னஸ் பிரச்சனை உள்ளவங்களுக்கு தெரியாதா ?

    பதிலளிநீக்கு
  14. மிக மிக தெளிவான விளக்கம் சகோ...

    தாங்கள் சொல்வது மிக மிகச் சரி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...