முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உபுண்டு 11.10 - மாற்றங்களின் ஆரம்பம்






உபுண்டு (Ubuntu) என்கிற ஒப்பற்ற இயங்கு தளத்தின் அருமை பெருமைகளை அதனை பயன்படுத்துபவர்கள் அறிவர்!!

திறமூல இயங்குதளங்களில் ஒன்றான உபுண்டுவின் முக்கிய சிறப்பம்சங்கள்:
  • விண்டோஸ் தளத்தில் இருந்தே நிறுவ முடியும். 
  • எந்த மென்பொருளையும் அதிக சிரமம் இன்றி எளிதாக நிறுவவும், பயன்படுத்தவும் முடியும். 
  • MP3 முதலிய காப்புரிமை பெறப்பட்ட கோடெக் போன்றவற்றுக்கும் நல்லதொரு ஆதரவு தருகிறது. (சில வகை லினக்ஸ் இயங்குதளங்களில் இது கடினம்!)
  • மிகவும் முக்கியமான சிறப்பம்சம்- கணிணி உங்கள் தாய் மொழியில் உங்களுடன்  உரையாடும் (விண்டோஸ் தளத்தில் இதனைப் பெற எவ்வளவு கடினம் என்பதை பயனாளர்கள் அறிவர்)  
"பாமரர்களின் லினக்ஸ்" என்று புகழ் பெற்ற உபுண்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை  ஒரு புதிய பதிப்பை வெளியிடுவது வழக்கம்..

2011 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் வெளியான பதிப்பு தான் உபுண்டு 11.10
ஒவ்வொரு பதிப்பிற்கும் வித்தியாசமான ஒரு பெயர் இடுவது உபுண்டு குழுவின் சிறப்பு. உபுண்டு 11.10 Oneiric Ocelot என்று பெயரிடப்பட்டு உள்ளது..


உபுண்டு 11.10 Oneiric Ocelot பதிப்பின் சிறப்பம்சங்கள்:

  • மிகவும் அருமையான உள்நுழைதல் மேலாண்மை (Login Manager)
  • எளிதாக மென்பொருள் கண்டறியும் வசதி
  • தேஜா டப் (Deja Dup) என்கிற காப்புப்படி (Backup) வசதி
  • எளிமையாக்கப்பட் ட கோப்பு மேலாண்மை
  •  உபுண்டு முகப்பு Unity ஆல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனவே, மேம்படுத்தப்பட்ட அணுகுமுறை.
  • பாரம்பரியம் மிகுந்த க்னோம் (Gnome Classic) இனியும் முகப்பில் இருக்கப்போவதில்லை. அதற்குப் பதில், Gnome 3.2 உள்ளது.
  • விண்டோஸ் இயங்கு தளத்தில் உள்ளது போலவே, Alt + Tab அழுத்தி பல வேளைகளுக்கு இடையில் மாறலாம்!!
  • 64- பிட் கணிணிகளில் 32-பிட் ஆதரவு மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • தமிழ் மொழியில் படிக்க மற்றும் எழுத முழு ஆதரவு


பதிப்புடன் வரும் திறமூல மென்பொருட்கள்:
  • இணைய உலாவி : பயர்பாக்ஸ் 7.0
  • இசைப்பான்: பேன்ஷீ (Banshee)
  • படங்கள் ஒருங்கிணைப்பு: ஷாட்வெல் (Shotwell)
  • ஆவணங்கள்: லிப்ரே ஆபிஸ் (Libre Office)
  • வட்டு எழுதி: பிரசரோ (Brasero)
  • மின்னஞ்சல்: தண்டர்பேர்ட் (Thunder bird)
  • டொரெண்ட்: பிட் டிரான்ஸ்மிஷன் (Bit Transmission)
  • ஆவணக்காப்பு (Archive): Archive Manager
  • சமூக தொடர்பு (Chat, Face Book போன்றவை): கிவிப்பர் (Gwibber)
மேலும் பல....


இப்போதே உபுண்டு 11.10 தரவிறக்கம் செய்யுங்கள்..
அதன் பிரம்மாண்டத்தில் உங்களை உணருங்கள்!! 



நான் இந்த பதிவை எழுதுவதே அதனைக் கண்ட பின் தான் என்று சொல்லவும் வேண்டுமா??

என்ன உபுண்டு 11.10 இல் நுழைய தயாராகி விட்டீர்களா?






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...