முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Bigrock.in மூலம் தளம் வாங்கியவரா நீங்கள்? உங்கள் கவனத்திற்கு!!

நண்பர்களே,

கடந்த வெள்ளி (29-06-2012) மாலை முதல் (எனக்குத் தெரிந்து!!) எனது வலைப்பூ  தனது பிரதான தளத்தில் இருந்து (http://www.aalunga.in) திறக்கவில்லை..

அன்று மாலை ஒரு பதிவு எழுதி வெளியிட்டேன்.. Facebook, Twitter, Google Plus முதலியவற்றில்  தானாக வெளியிட வகை செய்துள்ளதால், அங்கு வெளியாகிவிட்டன.

ஏனைய திரட்டிகளில் இணைக்கலாம் என்று தளத்திற்குச் செல்ல முனைந்த போது தான் பிரச்சனை புரிந்தது.

Firefox, Chrome  இரண்டிலும்  ஒரே நிலை தான். ஆனால், அலைபேசி மூலம் (opera mini) நன்றாக பார்க்க முடிந்தது.  Feed மூலம் பதிவுகளைப் படிக்கவும் முடிந்தது. ஆனால், தளத்திற்குச் செல்ல முடியவில்லை.

அப்போது இருப்பில் (online) இருந்த "கற்போம்' பலே பிரபு அவர்கள் தனக்கு தளம் திறப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எனது தளம் நன்றாக தெரிவதாகவும் சொன்னார். சில வழிமுறைகளைச் சொன்னார். ஒன்றும் பலனளிக்கவில்லை.

ஆனால், தங்கம் பழனி அவர்களும், "அட்ராசக்க" செந்தில்குமார் அவர்களும் தங்கள் தளம் திறக்கவில்லை என்று சொன்னார்கள்.

ட்விட்டர் நண்பரான கூமுட்டை (@kuumuttai) அவர்களோ தனக்குத் தளம் நன்றாகத் தெரிவதாக சொன்னார்.

இதிலிருந்து சிலருக்கு தளம் தெரிவதும், சிலருக்கு தெரியாமல் இருப்பது புரிந்தது.

எனவே, Bigrock.in தளத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்..

Sir,
I am facing a problem in the domain..

I could not open my website on  PC atleast for the past 20 hours. I get the error message "Cannot find the server". I have tried two browsers- Firefox 12 and Chrome 18. But, the results are same.
But, I could view the site through my mobile (Opera Mini).

Few of my friends, who purchased domain from Bigrock.in are also facing similar problem

I request you to kindly look into the issue and resolve it at the earliest
சில மணிநேரங்களிலேயே எனக்கு பதில் வந்தது.

Hello,

I have checked the details of your domain aalunga.in, I see that you have added the blogger records.

The records have been propagated,however, I would request you to check the steps for publishing from the blogger account.Refer following link to for blogger setup steps :

http://demomonkey.org/blogger/

However, there seems to be an issue with the BSNL network, wherein the customers are not able to view the website.

Incase you are BSNL customer, Kindly send us ping and tracert results from your system, we would get this checked.

Refer to the links below to run the ping and tracert results:
http://www.mediacollege.com/internet/troubleshooter/ping.html
http://www.mediacollege.com/internet/troubleshooter/traceroute.html

Since the issue is with their DNS resolver, we are waiting for them to make the appropriate changes.

Once they have made the changes, you would be able to browse your website from the BSNL connection, alternately you could try using another internet connection to browse your website.

Your patience and co-operation will be highly appreciated.
ஆக... பி எஸ் என் எல் (BSNL) நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை இருப்பது தெரிகிறது. 

பி எஸ் என் எல் இணைய இணைப்பு வைத்திருப்பவர்களுக்குத் Bigrock தளங்கள் தெரியவில்லை. பிறருக்குத் தெரிகிறன. அலைபேசி இணைப்பு எதுவாக இருந்தாலும் பிரச்சனை இல்லை.

BSNL வைத்திருப்பவர்களுக்கு இந்த பிரச்சனையில் இருந்து விடுபட மூன்று  வழிகள் உள்ளன :
  
1. உங்கள் DNS Server எண்ணை கூகிள் DNS சர்வர் எண்ணிற்கு மாற்றுங்கள்..
 
Google DNS Server எண்கள்:
  •   IPv4: 8.8.8.8 and/or 8.8.4.4.
  •   IPv6: 2001:4860:4860::8888 and/or 2001:4860:4860::8844
இந்த மாற்றத்தை எப்படி செய்வது?

Windows இயங்குதளத்தில் இருப்பவர்கள்
  • Control Panel செல்லுங்கள்
  • அங்கு  Network and Internet போய் Network and Sharing Center என்பதற்குச் செல்லுங்கள்
  • அதில் Change adapter settings. என்பதனைச் சொடுக்குங்கள்
  • உங்களது இணைப்பைத் தெரிவு செய்யுங்கள் (Local/ Wireless). அதில் உள்ள "Properties" பக்கம் செல்லுங்கள்
  • அதில் Networking என்கிற டேப்பின் கீழே "This connection uses the following items" என்ற வரி இருக்கும். அதன் அடியில் உள்ள தகுந்த Protocol ஐத் தேர்வு செய்யுங்கள். [ Internet Protocol Version 4 (TCP/IPv4) அல்லது  Internet Protocol Version 6 (TCP/IPv6)] . அதன் Properties பக்கம் செல்லுங்கள்
  • Properties பக்கத்தில் "Advanced" என்பதைச் சொடுக்குங்கள்
  • அதில் வரும் DNS என்கிற டேப் பக்கம் செல்லுங்கள்
  • DNS என்று இருக்கும் எண்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அவை பயன்படலாம். 
  • அந்த எண்களை அழித்து விட்டு மேலே உள்ள Google DNS Server எண்களை உள்ளிடுங்கள் 
  • அமைப்புகளைச் சேமியுங்கள்.
  • சேமித்த பின் இணைப்பை மீள்துவக்குங்கள் (Restart)
  • இணைப்பு வேலை செய்கிறதா என்று பாருங்கள்.
  • வேறு இணைப்புகள் இருந்தால் அவற்றுக்கும் இதைச் செய்யுங்கள்!
லினக்ஸ் இயங்குதளங்கள் :

லினக்ஸ் இயங்குதளங்களில் இருப்பவர்கள் மிகவும் சிரமப்படவேண்டியதில்லை. இந்த மாற்றத்தை மிக எளிமையாக செய்யலாம்..
  • System மெனுவில் Preferences --> Network Connections செல்லுங்கள்
  • உங்களது இணைப்பைத் தெரிவு செய்யுங்கள் (Local/ Wireless). 
  • அதில் "Edit" என்பதைச் சொடுக்குங்கள். 
  • திறக்கும் பக்கத்தில், தகுந்த Protocol ஐத் தேர்வு செய்யுங்கள். [ Internet Protocol Version 4 (TCP/IPv4) அல்லது  Internet Protocol Version 6 (TCP/IPv6)]
  • அதில்  "Method" என்பதில் "Automatic (DHCP)" என்று இருந்தால், அதனை "Automatic (DHCP) addresses only" என்று மாற்றவும். வேறு எதுவும் இருந்தால் அதனை மாற்ற வேண்டாம். நேரடியாக அடுத்த Step போகவும்.
  • DNS Server என்பதில் மேலே உள்ள Google DNS Server எண்களை உள்ளிடுங்கள்
  • அமைப்புகளைச் சேமியுங்கள்.
  • இணைப்பு வேலை செய்கிறதா என்று பாருங்கள்.
  • வேறு இணைப்புகள் இருந்தால் அவற்றுக்கும் இதைச் செய்யுங்கள்
வேறு எந்த பிரச்சனையும் இல்லை.. 

இதன் மூலம் நீங்கள் வழக்கம் போல உங்கள் தளங்களை அணுகலாம். ஆனால், BSNL வைத்திருக்கும் வாசகர்கள் யாருக்கும் உங்கள் தளம் தெரியாது. எனவே, உங்கள் வாசகர்கள் (BSNL) சிலரை இழக்க நேரிடலாம்!



2. வேறு இணைய இணைப்புகளுக்கு மாறுங்கள் 
இதற்கு நீங்கள் வேறு எதுவுமே செய்ய வேண்டியதில்லை. ஆனால், உங்கள் வாசகர்கள் (BSNL) சிலரை இழக்க நேரிடலாம்!



 3. blogspot.com பக்கம் மாறிக்கொள்ளுங்கள்
Alexa முதலிய தள ரேங்குகள் அனைத்தும் காலியாகி விடும். Feedburner முதல் அனைத்திலும் blogspot.com என்றே இருக்கும் படி மாற்ற வேண்டும். எனினும், அதுவே நிலையாக இருந்தால், வேறு எந்த பிரச்சனையும் இல்லை.





எனது Feedburner முதலிய அனைத்திலும் blogspot.com என்றே இருக்கிறது (தமிழ்மணம் தவிர்த்து). எனவே, வாசகர்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது!!

நான் மூன்றாம் வழியைத் தற்காலிகமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். (பிறரது பதிவுகளைப் படிப்பதற்காக முதலாவதும் உண்டு) .. டொமைன் முகவரியில் இருந்து blogspot பக்கம் திருப்பி விட முடியுமா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்... 
வெற்றி அடைந்தால் பகிர்கிறேன்!!


அவிழ்மடல்

கருத்துகள்

  1. தாங்கள் சந்தித்த பிரச்சினையை பற்றி விரிவாக ஆராய்ந்து.., அதற்கான தீர்வுகளையும் பற்றி குறிப்பிட்டு.., சகபதிவாளர்களுக்கு பயனுள்ள வகையில் இந்த பதிவை எழுதியமைக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஆளுங்க சார்.. தக்க நேரத்தில் பயன்படும் பதிவு இது..
    domain to blogspot Redirect வசதி இருந்தால் உடனே குறிப்பிடவும்.. எனக்கும் பயன்படும்..

    பதிலளிநீக்கு
  3. நிறைய பேருக்கு உதவும் பதிவு. என்ன பிரச்சினை என்று தெரியாததால் தெளிவான தீர்வை தர முடியாமல் இருந்தது.

    இந்தப் பிரச்சினைக்கு டொமைன் டு ப்ளாக் மாறாமல் வேறு தீர்வும் உண்டு. அவற்றைப் பற்றி விரிவாய் எழுதுகிறேன் பதிவில்.

    பதிலளிநீக்கு
  4. தக்க நேரத்தில் பயன்படும் பதிவு இது நன்றி

    பதிலளிநீக்கு
  5. பிக்ராக் மண்டைய பிச்சுக்க வச்சிருச்சு....போன வாரம் BSNL வைத்திருப்பவர்களுக்கு Facebook open ஆகுல....

    பதிலளிநீக்கு
  6. இப்படியும் நடக்குதா ? கூகிளிலேயே டொமைன் வாங்கலாமே ?!! ஏன் மூன்றாம் ஆட்களிடம் வாங்கினீர்கள் .. பி எஸ் என் எல் ஏன் இப்படி செய்கின்றது .. வருத்தமான விடயம் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர்கள் அறிவுறுத்தல் காரணமாக வாங்கினேன்... இனி கவனமாக இருப்பேன்!!

      நீக்கு
  7. Prem சொன்னது..
    //எனக்கும் இது உதவும் தேவையான பதிவு //

    பதிலளிநீக்கு
  8. Prem சொன்னது
    //அடேயப்பா இத்தனை திரட்டிகளா இப்போது தான் அறிந்தேன் //

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?     முதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எ

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும