முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கணித்தமிழ் அமுதம் மறைவு

வணக்கம் நண்பர்களே!!

இந்த பதிவினைப் பல நாட்கள் கழித்து வெளியிடுவதற்கு வருந்துகிறேன்.

நம் தாய்மொழியாம் தமிழ்மொழி பல நூற்றாண்டுகளாக பல்வேறு பரிணாமங்களுக்கு இடையே தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சிக்குப் பலரும் பல வழிகளில் பங்காற்றினர்.

அன்று மன்னர்கள் சங்கம் வைத்து முத்தமிழை வளர்த்தனர். இன்றோ, பல கணிணியாளர்களும் மென்பொருட்கள் மூலம் கணித்தமிழை வளர்க்கிறனர். அவர்களுள் மிகவும் முக்கியமான ஒருவர் திரு. ஆண்டோ பீட்டர் அவர்கள்..

இந்த வலைப்பூவினைப் படிக்கிறீர்களே!! அதற்குக் காரணமே அவர் தான்.... தமிழ் எழுத்துருக்களை கட்டற்ற முறையில் (Open source) முதன்முதலில் இலவசமாக உருவாக்கி அளித்தவர் அவர் தான்.

1990 களில் கணிணி தமிழகத்தில் அறிமுகமாகிய போது, தமிழில் தட்டச்சு செய்வது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் மட்டுமே, அதற்கென உருவாக்கப்பட்ட கட்டண எழுத்துருக்களைக் கொண்டு  எழுத வேண்டி இருந்தது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னலம் பாராது, தான் உருவாக்கிய "அமுதம்" என்னும் எழுத்துருவினை இலவசமாக இணையத்தில் வெளியிட்டார் பீட்டர். எனவே, எழுத்துரு பலரைச் சென்றடைந்தது. 

 Tiff , Tam, Tab, Unicode முதலிய வகை தமிழ் எழுத்துருக்களை (font) உருவாக்கியதில் பெரும்பங்காற்றிவர் பீட்டர். இன்று "amma" என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் "அம்மா" என்று தமிழில் எழுதும் படி செய்யும் பொனடிக் (phonetic) முறை உட்பட அனைத்து வகை விசைப்பலகை அமைப்புகள் உருவாக்கியதிலும் அவருக்கு பங்கு உண்டு.


அது மட்டுமா?

தமிழகத்தில் முதன்முதலாகப் பல்லூடகக் கல்வியை (Multimedia) அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

முதன்முதலில் "தமிழ்சினிமா" என்கிற தமிழ் இணைய இதழைத் துவங்கியதும் அவரே!!

கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிய ஆண்டோ பீட்டர் அவர்கள் சாப்டுவியூ (Softview) என்னும் மென்பொருள் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

தமிழ்க் கணினி குறித்த விழிப்புணர்வைத் தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர் ஆண்டோ பீட்டர் அவர்கள்.  கணித்தமிழுக்கு பெரும் பங்காற்றிய ஆண்டோ பீட்டர் அவர்கள் கடந்த சூலை 12 ஆம் நாள் (12-07-2012) அதிகாலை மூன்று மணியளவில் மாரடைப்பால் காலமானார்.


தமிழை வளர்க்க தமிழரிடம் தமிழில் பேசுங்கள்

இது தான் மறைந்த ஆண்டோ பீட்டர் அவர்களின் அறையை அலங்கரித்த வாசகம். இதனைப் பின்பற்றுவதே அன்னாருக்கு நாம் செய்யும் மரியாதை!!



இயன்ற அளவு தமிழைப் பயன்படுத்துவோம்..
கணித்தமிழ் பற்றிய விழிப்புணர்வை அளிப்போம்!!

அன்னாரது வலைப்பூ: கணியரசு
அவரைப் பற்றி விக்கிபீடியாவில் உள்ள கட்டுரை: ஆண்டோ பீட்டர்

அவிழ்மடல்

கருத்துகள்

  1. மிக பெரிய இழப்பு தமிழுக்கு

    பதிலளிநீக்கு
  2. தமிழ் இணையங்களில் வளர்ந்து புதிய பரிணாமத்தை அடைய காரணமாக இருந்த திரு. ஆண்டோ பீட்டர் பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  3. திரு. ஆண்டோ பீட்டர் இழப்பு ஈடு செய்ய இயலாதது!

    பதிலளிநீக்கு
  4. மறக்க முடியாத இழப்பு...
    ஒவ்வொரு சொல்லையும் ஆங்கிலத்தில் டைப் செய்து விட்டு space bar அழுத்தும் போதெல்லாம் அவை சொல்லும் அவரது பெயரை.....

    அவரின் தளத்திற்கு செல்கிறேன்.....

    நன்றி... (த.ம. 3)
    திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  5. தமிழுக்கு அரும்தொண்டாற்றிய ஆண்டோ பீட்டர் அவர்களை இழந்திருக்கிறோம்.. என்னுடைய அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  6. மிகச் சிறந்த மனிதர். அவரின் இழப்பு தமிழ் கணினி உலகுக்கு பெரிய அதிர்ச்சி. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

    பதிலளிநீக்கு
  7. அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! ஆனால் அவர் தமிழால் வாழ்கின்றார்!சாதனையளர்கள் மரிப்பதில்லை......

    பதிலளிநீக்கு
  8. ஒரு நல்ல மனிதர்... கம்ப்யூட்டர் தமிழுக்கு அரும் தொண்டாற்றியவர்... அவரது இறப்பு தமிழ் நல்லுலகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். 45 வயதிற்குள் அவர் மிகப்பெரிய சாதனைகளை செய்துவிட்டார். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்... என்னும் வரிகளுக்கு ஏற்ப வாழ்த்து காட்டியவர் திரு. ஆன்டோ பீட்டர் அவர்கள்... அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்...

    பதிலளிநீக்கு
  9. தமிழுக்குப் பெருமை சேர்த்த அந்த மாமனிதரின் மறைவு குறித்து வருந்தும் அதே நேரத்தில் அவரை நினைவு கூர்ந்த தங்களின் கடமை உணர்வைப் போற்றுகிறேன்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இதனை கேள்விப்பட்ட அன்றே என்னால் நம்ப முடியவில்லை. தமிழ் உலகுக்கு பெரிய இழப்பு.

    பதிலளிநீக்கு
  11. அய்யோ மாபெரும் மனிதன் ஆயிற்றே அவர்.....!

    என்னுயிரும் தமிழ் பேசி மடிய வேண்டும் என்று நம்மை விட்டு பிரிந்தாரோ....அன்னாருக்கு என் ராயல் சல்யூட்டும், அஞ்சலிகளும்...

    பதிலளிநீக்கு
  12. ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...