முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தம்பிக்கு எந்த ஊரு?

நான் எனது பணியில் சேர்ந்த புதிது!!!

அன்று ஏதோ பணி காரணமாக வேறொரு புதிய களத்திற்கு (அப்போது)செல்ல நேர்ந்தது!!

புதிய களம்.. நான் உள்ளே நுழைந்து யாரைப் பார்ப்பது என்று அறியாமல் மிரள மிரள விழித்து கொண்டு இருந்தேன்..


என்னை நோக்கி ஒருவர் வந்தார்..

"தம்பி.. இங்க எல்லாம் அனுமதி (Permission) இல்லாம வர கூடாது! நீங்க யார்?" என்று கேட்டார்..


நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.. நான் வந்த நோக்கத்தையும் கூறினேன்.


அவர் "அப்படியா!! சார் மேனேஜரைப் பார்க்க போய் இருக்கார். கொஞ்ச நேரத்தில வந்து விடுவார்" என்றார்..

 சிறிது நேர மெளனத்திற்குப் பின், அவர் என்னைப் பார்த்து

"உங்களுக்கு எந்த ஊரு?" என்று கேட்டார்...

நான் புதியவன் என்பதால், பலரும் என்னைப் பற்றி விசாரிப்பது வழக்கம்..

நான் "திருச்சி" என்று பதிலளித்தேன்.

 

அவர் உடனே கேட்டார்: "அப்படியா!!! திருச்சியில் எங்கே?"

"வயலூர் பக்கம்"


 "அடடே!! அங்க எங்கே?"

எனக்கு உடனே ஆர்வம் தொற்றிக் கொண்டது... ! பார்க்க திருச்சிக்காரர் போல் தெரியாவிட்டாலும், கண்டிப்பாக இவர் அந்த பக்கம் வசித்து இருக்க வேண்டும்


"உய்யகொண்டான் பக்கம்" என்றேன்..


"அப்படியா!! அங்க எங்கே சார்?"

"பாலத்துக்கு முன்னாடியே சார்"..

உரையாடல் தொடர்ந்தது.. அவர் கேட்க கேட்க நான் என் வீடு இருக்கும் தெரு வரை சொல்லிவிட்டேன்..

இறுதியாக "ஓஹோ" என்றார்..


நான் ஆர்வ மிகுதியில் " சார் , நீங்களும் அந்த பக்கம் இருந்தீங்களோ?" என்றேன்..

அவர் கூறிய பதில் என்னைத் திகைக்க வைத்தது:

"நான் சென்னைக்கு பஸ்ஸில போகும் போது ஒரு முறை திருச்சியில இறங்கி காப்பி குடிச்சிருக்கேன் சார்" என்றார்...


எனக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை!!!

கருத்துகள்

  1. நல்லவேளை அவர் திருச்சியில் இறங்கி காப்பியாவது குடிச்சிருக்கிறார், நீங்க கொஞ்சம் ஆறுதல் படலாம். அதுவும் இல்லைன்னா உங்க வீட்டு அட்ரஸ் வரை சொன்ன உங்க நிலைமை... ஒருவேளை நீங்க திருச்சிராப்பள்ளின்னு சொல்லியிருந்தா அது திருச்சியிலிருந்து எவ்வளவு தூரமுன்னு கேட்டிருப்பாரோ? நல்லா கேட்கிறாங்க டீடெய்லு..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...