முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரு சூரியன்களுடன் ஒரு கோள்- விண்வெளி அதிசயம்

ஒரு இனிய காலைப் பொழுதில் வானத்தை அண்ணாந்து பார்க்கும் போது, இரண்டு சூரியன்களை பார்த்தால் எப்படி இருக்கும்?

சற்று கற்பனை செய்து பாருங்கள்!!


உண்மையில் அப்படி இரு சூரியன்கள் தெரியும் ஒரு கோள் இருக்கிறது.. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

ஒரு கற்பனை உண்மையாகிறது!!!!

அமெரிக்காவில் உள்ள  நாசா ஆராய்ச்சி நிறுவனத்தால் "உயிர் வாழ தகுதியான கோள்கள் தேடல்" என்ற ஆய்வுக்காக கெப்லர் (Kepler) என்ற விண்கலன் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கெப்லர் விண்கலம் கண்டறிந்த ஒரு அதிசயத்தக்க உண்மை தான் இந்த கோள்!!


கெப்லர் 16 B என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோள், அருகருகில் இருக்கும் இரு சூரியன்களைச் சுற்றி வருகிறது.
பாறைகளாலும், வாயுக்களாலும் நிரம்பியுள்ள அந்த கோள் கிட்டத்தட்ட சனிக்கிரகத்தின் அளவில் உள்ளது. அது இரு சூரியன்களையும் 10.4 கோடி கி.மீ தூரத்தில் இருந்து கொண்டு சுற்றுகிறது!!  (நம் வெள்ளி கிரகத்தின் தூரம்)


கெப்லர் 16 B சுற்றி வரும் சூரியன்கள் நம் பகலவனின் அளவில் இல்லை. ஒரு சூரியன் சூரியனில் 20% எடையிலும், பெரிதொன்று 69% எடையிலும் உள்ளன.
கெப்லர் 16 B அவை இரண்டையும் ஒரு முறை சுற்ற 229 நாட்கள் ஆகிறது!!


அது மட்டுமல்ல, அவை ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கே வரும் போது, கிரகணங்கள் ஏற்படுகிறன.
பெரிய சூரியன் சிறியதை மறைப்பதால் ஒன்று, சிறியது பெரியதனை மறைக்க முயல்வதால் ஒன்று, மற்றும் வெளிப்புற பொருட்களால் ஏற்படுவது ஒன்று!!





என்ன இப்போதே அங்கு சென்று இரு சூரியன்களை கண்டு களிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா?
ஆனால், அது அவ்வளவு எளிதல்ல!!



கெப்லர் 16 B நம் பூமியில் இருந்து சுமார் 200 ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ளது (2 சங்கம் கி.மீ அதாவது, 200 கோடி கோடி கி.மீ!!).

மேலும், அந்த சூரியன்கள் மிகவும் வெப்பம் குறைவாய் உள்ளதால், அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு இல்லையாம். எனவே, உயிர் வாழ முடியாத பூமி அது!!

எனினும், அதன் இயக்கத்தைப் பார்த்து மகிழ காணொளி இதோ:


ஆதாரம்: தி சன் , பிசி மேக் , பிபிசி

 பி. கு:
1977 இல் வெளிவந்த "ஸ்டார் வார்ஸ்" (Star Wars) கதையில் இரு சூரியன்களைச் சுற்றும் டேட்டூஇன் (Tatooine) என்ற கிரகம் வரும்..  இப்படி உண்மையில் ஒரு கிரகம் இருப்பதனை அறிந்து தான் ஜார்ஜ் லூகாஸ் (ஸ்டார் வார்ஸ் எழுத்தாளர் ) எழுதி இருப்பாரோ?

கருத்துகள்

  1. விண்வெளி அதிசயங்களை அதிசயமே அசந்து போகும்.

    மிகவும் வியந்து போகும் செய்தி என்னவென்றால், நமது சூரியனுக்கு மிக அருகில் உள்ள அடுத்த சூரியனான ஆல்ஃபா சென்டாரி நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதாவது ஒளியின் வேகத்தி பயணித்தாலே 4 ஆண்டுக‌ள் ஆகும். ஆனால் அந்த வேகத்தில் பயணிப்பது சாத்தியமே இல்லை, ஏனெனில் நமது விண்கலன்கள் ஒளியின் வேகத்தில் ஒரு லட்சத்தில் ஒரு பங்கு வேகத்தைகூட எட்ட இயலாது.

    ஆக பல அதிசயங்களை கேட்டு மட்டுமே அதிசயிக்க இயலும்.

    இவை எல்லாம் தங்களுக்கு தெரியாதது இல்லை, ஆனால் விண்ணியல் அதிகம் தெரியாத வசகர்களுக்காக இவற்றை குறிப்பிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான புதுமையான தகவலும்கூட மிக்க நன்றி
    பகிர்வுக்கு ..............

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...