முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காக்க காக்க !!!








இன்றைய இணைய உலகில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு தேவையாக மாறி விட்டது. பணம் பெறுதல், காழ்ப்புணர்ச்சி மற்றும் வேறு பல காரணங்களால் பலரது மின்னஞ்சல்கள் களவாடப்படுகிறன (Hack).

 அவற்றைத் தடுக்க பல வழிகள் இருந்தாலும், புதிய புதிய வழிமுறைகளால் களவாடல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன. களவாடப்பட்டதைத் திரும்ப பெற்றபின் மீண்டும் அதைத் தக்க வைத்துக் கொள்ள என்ன தான் வழி?

பலர் தங்கள் மின்னஞ்சல் கணக்கை களவு கொடுத்திருக்கலாம்!! ஆனால், அதனை மீட்ட பின், நம்மவர்கள் செய்யும் முதல் விடயம் கடவுச்சொல்லை (Password)  மாற்றுவது தான்!!

அப்படியும், சில நேரங்களில் நமது கணக்கு மீண்டும் சூறையாடப்படுவது உண்டு. என்ன காரணம்? அதனைத் தடுக்க என்ன வழி?



பொதுவாக, கொந்தர்கள் (Hackers) பலர் ஒரு கணக்கை அபகரித்த உடன் முதலில் செய்யும் விடயமே, கணக்கின் கடவுச்சொல் தொடர்புடைய விவரங்களை மாற்றுவது தான்!!



எனவே, வெறும் கடவுச்சொல்லை மாற்றினால், அதனால் எந்த பயனும் இல்லை..
என்ன செய்வது????

கீழ்காணும் வழிமுறையை அப்படியே செய்யுங்கள்!!

  1. முதலில், உங்கள் கணக்கில் "கடவுச்சொல் மாற்றல் முகவரி" (Password Reset Info Mail address) யைப் பாருங்கள். அங்கு இருக்கும் முகவரி உங்களுக்குத் தெரியாதது எனில், உடனே மாற்றுங்கள்!! ஒரு மாற்றல் மின்னஞ்சல் முகவரி மிகவும் அவசியம்.
  2.  அடுத்தபடியாக, சென்று சங்கேத கேள்விகளை மாற்றுங்கள். கேள்விகளைத் தேர்வு செய்யாமல், நீங்களே ஒரு கேள்வி அமைத்தல் மிகவும் நல்லது. கேள்விக்கான விடை உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்!!
  3. உங்கள் கடவுச்சொல்லை ஒரு முறை மாற்றுங்கள்!! 
இப்போது உங்கள் மின்னஞ்சல் கணக்கு ஓரளவேனும் பாதுகாப்பாக உள்ளது!!


பி.கு: இந்த விடயம் பலருக்கு முன்பே தெரிந்து இருக்கலாம்.. எனினும், பலரும் அறிந்து கொள்ளும் பொருட்டு பதிவிடுகிறேன்!!

கருத்துகள்

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...